சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெட்டிங் தூக்கம்!
by rammalar Yesterday at 18:18

» பெட்ரோல் குரங்கு
by rammalar Yesterday at 18:17

» கொத்துக்கறி சப்பாத்தி
by rammalar Yesterday at 18:15

» கொத்துமல்லி தொக்கு
by rammalar Yesterday at 18:14

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar Yesterday at 18:13

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar Yesterday at 18:13

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Yesterday at 17:06

» என்னைத்தவிர - கவிதை
by rammalar Yesterday at 17:05

» நம்மைப்போல் - கவிதை
by rammalar Yesterday at 17:04

» நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 17:04

» மேய்ச்சல் - கவிதை
by rammalar Yesterday at 17:02

» பயம் - கவிதை
by rammalar Yesterday at 16:57

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar Yesterday at 16:56

» வரிசையாய் எறும்புகள்
by rammalar Yesterday at 16:56

» மெனோபாஸ் – கவிதை
by rammalar Yesterday at 16:55

» பாடல் – கவிதை
by rammalar Yesterday at 16:54

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar Yesterday at 13:08

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar Yesterday at 13:05

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar Yesterday at 13:04

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar Yesterday at 13:03

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar Yesterday at 13:02

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar Yesterday at 13:01

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar Yesterday at 13:00

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by பானுஷபானா Yesterday at 13:00

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Yesterday at 8:06

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Thu 23 Nov 2017 - 20:11

» மழலை
by CHOKKALINGAM B Thu 23 Nov 2017 - 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 23 Nov 2017 - 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Thu 23 Nov 2017 - 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

.

ஈழத்துப் பாலகன்

View previous topic View next topic Go down

Sticky ஈழத்துப் பாலகன்

Post by ஹாசிம் on Sun 12 Jun 2011 - 12:59


அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி
கருவறையிலும் வேதனையடைந்தேன்
அன்னைவழி அவலங்களுடன்

தினமும் கதறியழுவாள்
தினமும் வெருண்டோடுவாள்
என்ன நடக்கிறதென்றுபுரியாது
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன்

நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்

நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்

இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று
நித்தமும் கண்ட அவஸ்தையில்
நொந்த மனதுடன் நையப்புடைத்த
நாட்களதிகம்

உலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும்

வெறிகொண்டது என்மனமும்
வேதனைகள் மறக்கவில்லை
சோதனைகள் வாழ்வாகி
அங்குமிங்கும் அலைந்த நிலை

கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும்
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும்
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட
உள்ளம்தான் நாடியது

நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறாதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்

கடந்தகால அழிவின் எச்சங்கள்
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது
காரணம் அதை தாங்கும் இதயம்
ஈழத்துக்கு இனியுமில்லை

ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்

உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள்

ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஈழத்துப் பாலகன்

Post by நண்பன் on Sun 12 Jun 2011 - 13:28

//ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள் //

வாழ்த்த வரிகள் இல்லை ஹாசிம்
உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
மிகவும் அருமையாகவும் வரிகள் வேதனையாகவும் உள்ளது
நன்றி சிறந்த கவிதை பகிர்வுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஈழத்துப் பாலகன்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 12 Jun 2011 - 13:43

மனம் கனக்கிறது நல்ல கவிதை வாழ்த்துகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஈழத்துப் பாலகன்

Post by *சம்ஸ் on Sun 12 Jun 2011 - 14:22

ஹாசிம் உங்களின் வரிகள் அனைத்தும் உணர்சிவசமான வரிகள் படிக்கும் போது நரம்புகள் பிடைக்கின்றன உங்களை வாழ்த்த வார்தைகள் இல்லை :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69192
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஈழத்துப் பாலகன்

Post by ஹாசிம் on Mon 13 Jun 2011 - 14:18

என் மனமார்ந்த நன்றிகள் வரிகள் வாயிலாக வலியுணர்ந்தமைக்கு
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஈழத்துப் பாலகன்

Post by ஹாசிம் on Wed 15 Jun 2011 - 7:56

:pale:
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஈழத்துப் பாலகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum