சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஏகாதிபத்தியவாதிகளின் கொடுமைகளை நாம் இனிமேலும் பொறுத்திருக்க கூடாது

Go down

Sticky ஏகாதிபத்தியவாதிகளின் கொடுமைகளை நாம் இனிமேலும் பொறுத்திருக்க கூடாது

Post by நண்பன் on Wed 15 Jun 2011 - 12:55

ஏகாதிபத்தியவாதிகளின் கொடுமைகளை நாம் இனிமேலும் பொறுத்திருக்க கூடாது
17ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அலவி மெளலானா அழைப்பு
எம். ஐ. நிஸாம்தீன்
ஏகாதிபத்தியவாதிகளினால் அரபு நாடுகள் மீது மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராகவும், அந்நாடுகளின் வளங்களையும், பொருளாதார சுரண்டல்களையும் தடுக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஜூம்ஆ பிரார்த்தனைக்குப் பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலான தலைமையில் நடைபெறவுள்ளது.

அமெரிக்கா உலகத்தின் பொலிஸ்காரர் என்ற மமதையில் அப்பாவி அரபு நாடுகளை செய்த கொடுமைகளால் இன்று ஈராக் ஒரு யுத்தகளமாக மாறியிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அமைதியின்மைகளும், வன்முறைகளும் தலைதூக்கியிருக்கின்றது.

சதாம் ஹ¥சைனின் மகன்மாரை படுகொலை செய்து இறுதியில் சதாம் ஹ¥சைனை தூக்கிட்டதைப் போன்று யதார்த்தவாதியான லிபியத் தலைவர் கடாபியை அழித்துவிடுவதற்கு அமெரிக்கா இன்று சதித்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் தான்தோன்றித்தனமான முஸ்லிம் உலகை அழிக்கும் சதித்திட்டத்தைப் பார்த்து உலக நாடுகள் இனிமேலும் கைக்கட்டி மெளனம் சாதிக்கக் கூடாது.

அவ்விதம் செய்தால் உலகில் ஜனநாயகமும் நீதி நியாயமும் அமெரிக்காவினால் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கை மக்களும் இனிமேலும் மெளனம் சாதித்தால் அமெரிக்க ஆக்கிரமிப்பு எங்கள் நாட்டையும் விட்டுவைக்கப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்தார். எனவே வெள்ளிக்கிழமை நடைபெறும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ள வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று ஆளுநர் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேல் மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

சர்வ மதத்தலைவர்களின் அனுசரணையின் கீழ் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன, மத, கட்சி பேதமின்றி சகலரையும் கலந்து கொள்ளுமாறு தேசிய ஐக்கியத்திற்கான தலைவரும், சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் சங்கைக்குரிய கும்புறுகமுவ வஜிர நாயக்கத் தேரர் அழைப்பு விடுத்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்திற்கு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எனினும் அமெரிக்காவின் கைம்பொம்மையாக ஐக்கிய நாடுகள் செயற்படுவதானது ஏகாதிபத்தியவாதிகளுக்கு துணையாக இருப்பது வேதனையளிக்கிறது. சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய இவர்கள் உலக நாடுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அந்நாடுகளின் சொத்துக்களையும், சிறுபிள்ளைகளையும் கொன்று குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, மற்றும் லிபியா நாடுகள் மீது மேற்கொண்டுவரும் மனிதாபிமானற்ற படுகொலைகளை நிறுத்த வேண்டும். அமெரிக்கா மேற்கொண்டு வரும் முஸ்லிம் நாடுகளை அழிக்கும் இனவிரோத செயற்பாட்டுக்கு எதிராக நாம் கிளர்ந்தெழ வேண்டுமென சங்கைக்குரிய கும்புறுகமுவ வஜிர நாயக்கத் தேரர் கேட்டுக் கொண்டார்.

ஹசன் மெளலானா உரையாற்றும் போது,

இன்று மத்தியகிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையிழந்து காணப்படு கின்றமை அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தலைதூக்க காரணமாக இருக்கின்றது. அரபு நாடுகள் ஒன்றுபடும் போது அமெரிக்காவின் அகங்காரத்தை முற்றாக ஒழிக்க முடியும். அத்துடன் உலக பொலிஸ்காரன் என்ற கெளரவத்தை ஒடுக்க முடியும்.

அமெரிக்கா தற்போது லிபியாவில் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை முற்றாக எதிர்க்க வேண்டும். இன்று லிபியா நாளை இலங்கையாக கூட இருக்கலாம். எனவே இவர்களின் அடாவடித்தனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் மாத்திரமின்றி அனைவரும் இன, மத, கட்சி பாராமல் கலந்து கொள்ள வேண்டும்.

வண. பிதா சரத் ஹெட்டியாராச்சி உரையாற்றும் போது,

30வருட கால யுத்தம் முடிந்து தற்போது நாட்டில் அமைதி நிலவுகின்ற இவ்வேளையில் அந்நிய சக்திகளின் தலையீடுகளினால் மீண்டும் ஒரு பயங்கரவாத தலைவனை உருவாக்க அமெரிக்கா மேற்கொண்டுவரும் நாசகார வேலைக்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். எமது நாட்டுக்கும் பொலிஸ்காரர் வேடத்தில் ஏனைய நாடுகளோடு இணைந்து குழப்பத்தை ஏற்படுத்தி எமது நாட்டு பொருளாதாரத்தை சுரண்டும் வகையில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகளை வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum