சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

அவளுக்கும் ஒரு லட்சியம்.

Go down

Sticky அவளுக்கும் ஒரு லட்சியம்.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 14:47

வான்மதி ஆயத்தமாகி அறையில் காத்திருந்தாள்.

"அவங்க இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷத்தில் வந்திடுவாங்களாம்!" கையில் அலைபேசியுடன் அப்பா அறிவிப்பு தந்தார்.

"எப்படியாவது இந்த இடத்தை முடிக்கப் பாருங்க. கொஞ்சம் கூடக் குறைய ஆனாலும் பரவாயில்லை." அம்மா ஆலோசனை சொன்னாள்.

"கூட ஆனாலும் ஆகும், குறைய வாய்ப்பில்லை!"

"எவ்வளவு எதிர்பார்க்கிறாங்களாம்?" மாமாவின் குறுக்குவிசாரணை .

"அவங்களுடைய முதல் மருமகளுக்கு முப்பது சவரன் போட்டு கையில் ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு பைக்கும் வாங்கித் தந்தாங்களாம். நம்மகிட்டேயும் அதே அளவு எதிர்பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன்."

"முடியுமாங்க நம்மால?" அம்மாவின் கவலை அவளது குரலில் தெரிந்தது.

"என்ன பண்றது? எத்தனை நாளைக்குதான் தோஷ ஜாதகத்தோடு, பெண்ணை வீட்டுலேயே வச்சிருக்கமுடியும்? வயசு ஏறிகிட்டே போகுதில்லே? அடுத்ததும் தயரா நிக்குது. எப்படியாவது இவளைக் கரை சேர்த்திடவேண்டாமா?"

"ம்! பார்ப்போம்! நல்ல இடமா இருந்தா கடனை உடனை வாங்கி முடிச்சிடலாம்!" மாமா அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன் கண்ணெதிரிலேயே தான் விலைபேசப்படுவதை எண்ணிக் கலங்கினாள் வான்மதி. விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு விற்பனைப் பொருளாய் தான் நிற்பதை எண்ணி அவமானம் உற்றாள்.


ஜாதகத்தின் தோஷக்கட்டங்களை பணம் கொண்டு நிவர்த்தி செய்யும் கூட்டம் ஒன்று வரப்போகிறது.அதற்காக அம்மா, தடபுடலாய் இனிப்பு காரவகைகள் செய்து தயாராக வைத்திருக்கிறாள்.

தங்கை ஒரு தடைக்கல்லாய் மாறிவிடுவாளோ என்று பயந்து தோழி வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டாள். அவளைப் பெற்றவர்கள் எப்படியாவது அவளைக் கரை சேர்த்துவிடத் துடிக்கிறார்கள். அவளென்ன துடுப்பின்றி நட்டாற்றில் தத்தளிக்கும் ஓடமா என்ன, கரை சேர்ப்பதற்கு? கரை என்று நினைத்து சுழலில் அல்லவா சிக்கவைக்கப்பார்க்கிறார்கள்!

அவள் மனம் புலம்பியது. அவள் புலம்பலையெல்லாம் யார் காதுகொடுத்துக் கேட்கிறார்கள்? முதலில் இந்தப் பெண்பார்க்கும் சம்பிரதாயத்தின் மேலேயே வெறுப்பு வந்தது.

அலங்கரிக்கப்பட்ட பதுமை போல் அந்நியர் முன் நிற்க, ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாயிருந்தது.அதுவே இப்போது பழகிவிட்டது. இருப்பினும் அவளுக்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. ஒரு பெண் தங்கள் வீட்டு மருமகளாவதற்குத் தகுதியானவள்தானா என்பதை எப்படி ஒரு அரைமணி நேரத்தில் உறுதி செய்ய முடியும்? அவளது நடை, உடை, பாவனைகள் வேண்டுமானால் அவர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் பண்பு? அதை எப்படித் தீர்மானிக்க இயலும்? பெண் வீட்டின் சொத்து மதிப்பை எடைபோடலாம்; பெண்ணை? அவள் குணவதியா? கொடுமைக்காரியா? பொறுமையின் சிகரமா அல்லது பேராசைப் பெட்டகமா? யாரால் அறியக்கூடும் பார்த்த மாத்திரத்தில்? அலுப்பும் சலிப்பும் மனத்தில் எழ அறையின் சன்னல் திரை விலக்கி வெளியே பார்த்தாள்.


கருமேகங்கள் ஒன்றுகூடி மழை பெய்யலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தன.மேகங்களின் கூட்டணியைக் கலைக்க முயன்ற காற்று இறுதியில் தோற்றது. படபடவென்று பட்டாசுப் பொரிவதைப் போல் கனமழை சடுதியில் வந்தது. மழையை ஆவலோடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவளை அந்த வசீகரக்குரல் ஈர்த்தது. குரலை அடையாளங் கண்டுகொண்டவள், அதிர்ந்தாள்.

யார்? ஆகாஷா? அவன் குரலேதான்! சந்தேகமேயில்லை. அவனா இன்று இவளைப் பெண் பார்க்க வந்திருக்கிறான்? அன்று இவளை வேண்டாமென்று மறுத்தவன், இன்று அவள் வீட்டு வரவேற்பறையில்! மாப்பிள்ளையாகவா அல்லது தோழனாகவா?

குழம்பிய மனம், பழைய நினைவுகளை எண்ணிக் கொதித்தது.

இதே போன்றதொரு மழைக்காலத்தில்தான் அவனைச் சந்தித்தாள். அப்போது கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். குடை விரியாமல் தகராறு செய்ய, மழையில் நனைந்து வெடவெடத்தவளுக்கு குடை பிடித்தான். அப்போது அறிமுகமாயிற்று அவர்கள் நட்பு!

அவன் தன் மற்ற நண்பர்களையும் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தான்.அவனுக்கு நட்பில் ஆண் பெண் பேதமில்லை; வயது வித்தியாசமில்லை; சாதி வேறுபாடில்லை.

ஆகாஷ் ஒரு குறும்பத்திரிகை ஒன் றை நடத்திக் கொண்டிருப்பதாகச் சொன்னான். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் அதி தீவிரப் பற்றுக் கொண்டவனாக இருந்தான். நிறைய கவிதைகள் எழுதினான். பெரும்பாலும் கண்டனக் கவிதைகள்! எழுதியவற்றை அவளிடம் காட்டினான். பல அவளுக்குப் புரியவேயில்லை.


"என்னென்னவோ எழுதுறீங்க! என்னைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்!" ஒருநாள் கேட்டாள்.

"வான்மதி!" என்றான். அவள் புரியாமல் விழிக்க, "உன் பெயரே ஒரு கவிதை போல்தான் இருக்கு!"

உச்சி குளிர்ந்துபோனாள்.

மறுநாள் அவனை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகுதான் கவனித்தாள், தன் நோட்டுப்புத்தகத்தில் செருகியிருந்த தாளை! ஆவலுடன் பிரித்துப் படித்தாள்.

முழுநிலவுக்குள் சிறைபிடிக்கப்பட்ட
விண்மீன்களை
உன் கண்கள் என்று பொய் சொல்கிறாய்!
பளிச்சிடும் மின்னல்தன்னை
வெண்பற்கள் சிந்திய புன்னனகை என்கிறாய்!
கலைந்தோடுகின்றன, கார்முகில்கள்!
நீயோ அது உன் கூந்தலென்று
அடித்துச் சொல்கிறாய்!
பெயரைக் கேட்டால்
வான்மதி என்கிறாய்!
பின் ஏனோ தரையில் தவழுகிறாய்?
உனக்கான வானம் ஒன்று
வெகுநாளாய்க் காத்திருக்கும்
விவரம் அறியாதவளாய்!
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அவளுக்கும் ஒரு லட்சியம்.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 14:50

வானம் என்றால்…...ஆகாயம்…...ஆகாஷ்! அவனேதான்!
உள்ளத்தின் ஆழத்திலிருந்து உதயமானது, காதல்! உச்சி முதல் பாதம் வரை உற்சாகம் பொங்கி வழிந்தது. மனமெங்கும் அவனைப் பற்றிய நினைவுகளே நிறைந்திருக்க, இரவு எப்போது விடியும் என்று காத்திருந்தாள்.

மறுநாள் கல்லூரிக்குப் போகாமல் நேரே அவனைப் பார்க்கச் சென்றாள். தன் காதலை நாசுக்காய்த் தெரிவித்த அவனைப் பாராட்டாமல் இருக்க அவளால் இயலவில்லை. இத்தனைநாள் தன் மனதில் பூட்டிவைத்திருந்த பாரத்தை இறக்கியவனை காதல் பொங்கப் பார்த்தாள். ஆகாஷ் திடுக்கிட்டான்.

"என்ன இதெல்லாம்?" என்று அதிர்ந்தவனை, "ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி கேட்காதீங்க. அப்புறம் ஏன் இந்தக் கவிதையை எழுதினீங்க?" என்று பொய்க்கோபத்துடன் அக்கவிதைத் தாளை அவன்முன் நீட்ட, அவன் படித்துவிட்டு பகபகவென்று சிரித்தான்.

"இதையா கவிதைன்னு சொல்றே? இப்படியெல்லாம் அபத்தமாய் எழுத எனக்குத் தெரியாது!"

முகம்சிவந்து, மூக்குப் புடைத்து, அவமானத்தாற்குறுகி நின்றவளுக்கு முன் மண்டியிட்டான், அவனது தோழன்.

"என்னை மன்னிச்சிடும்மா. உன்னையும், ஆகாஷையும் சேர்த்துவைக்க விளையாட்டாய்ச் செய்தேன்!" என்று பாவமன்னிப்பு கேட்க, வேதனையுற்றவளாய் வான்மதி, ஆகாஷிடம் திரும்பினாள்.

"போகட்டும். நானே உங்களைக்கேட்கிறேன். என்னைக் காதலிக்கிறீங்களா, இல்லையா?"

ஆகாஷ் திடமாக, " நம் நட்பை வாழ்நாள் பூராவும் தொடர விரும்பறேன். நட்பைத் தாண்டி வேற எதையும் என்கிட்ட இருந்து எதிர்பார்க்காதே!" என்றான்.

"என்கிட்ட என்ன குறை? ஏன் என்னை மறுக்கறீங்க?"

அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டாள்.


"குறைகளில்லாத பெண் நீ. அதுதான் குறை!"

"என்ன சொல்றீங்க?" அதிர்ந்து நின்றாள்.

"வான்மதி! எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு. அது என் நண்பர்கள் எல்லாருக்கும் தெரியும். அதனால் உனக்கும் தெரியும்னு நினைச்சிட்டேன். அதுதான் நான் செஞ்ச தவறு.

நீ ஒரு ஊனமுற்ற பெண்ணாகவோ, ஒரு பரம ஏழையாகவோ இருந்திருந்தால், உன்னை உடனேயே ஏற்றுக்கிட்டிருப்பேன். உன்னை மாதிரி எல்லாம் நிறைஞ்சிருக்கிற பெண்ணுக்கு கல்யாணம் நடக்க எந்தத் தடையும் கிடையாது. என்னைப் புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்."

வான்மதி பதில் பேச இயலாமல் சிலையாய் நின்றாள். அமைதியாய் யோசித்தவளுக்கு அவன் சொன்னதன் உண்மை உரைத்தது.இதற்குமேலும் அவனுடனான நட்பைத் தொடர்வது என்பது தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு பொய்வாழ்வு வாழ்வதற்குச் சமம் என்று உணர்ந்தவள், நேரடியாகவே அவனிடம் சொல்லி, நட்புக்கொரு முற்றுப்புள்ளி வைத்தாள். சிதைந்திருந்த தன் கவனத்தை மீண்டும் படிப்பின் பாதையில் திசைதிருப்பினாள்.

காலம் ஓடிவிட்டது. ஐந்தாண்டுகள் கரைந்துவிட்டன. இப்போது, அவனே அவளைத் தேடி வந்திருக்கிறான். அவள்தான் என்று தெரிந்து வந்துள்ளானா? தெரியாமலா? புரியவில்லை.

அம்மா அவசரமாய் அறைக்குள் வந்தாள்.

"வான்மதி! உன்னைக் கூப்பிடறாங்க, வாம்மா!"

படபடக்கும் இதயத்தோடு நடந்தவள்,கூடத்து மத்தியில் இருந்த நாற்காலியொன்றில் அமர்த்தப்பட்டாள். அனைவரின் கவனமும் தன்மீதே என்பதையுணர்ந்தவள், மேலும் தவிப்புற்றாள்.

மாமாதான் வாய்திறந்தார்.


"என்னம்மா, வான்மதி! இப்படி தரையைப் பார்த்துகிட்டிருந்தால் என்ன அர்த்தம்? மாப்பிள்ளையை நல்லா பாத்துக்கோ! அப்புறம் நான் பார்க்கவேயில்லைன்னு சொல்லப்படாது!"

யாரோ களுக்கென்று சிரித்தார்கள். வான்மதி துணிவை வரவழைத்தவளாய் தலையுயர்த்திப் பார்க்க, அங்கே ஆகாஷ் மந்தமானதொரு கள்ளச்சிரிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். சந்தேகமேயில்லை, அவன்தான் மாப்பிள்ளை!

அவனுடைய கொள்கை என்னவாயிற்று? பார்த்தால், வீட்டினரின் பிடிவாதத்திற்காக பெண்பார்க்க வந்திருப்பவன்போல் தெரியவில்லை.அவனுடைய தோற்றமே மாறிவிட்டிருந்தது. முன்பிருந்த எளிமை போன இடம் தெரியவில்லை.

வான்மதி தன் கண்முன் காண்பது எதையும் நம்பமுடியதவளாய் உறைந்திருந்தாள். அவள் விரும்பிய ஆகாஷ் இவன் இல்லை, இவன் வேறு!

அவன் பக்கத்திலிருப்பவரிடம் ஏதோ கிசுகிசுக்க, அவர் அதை நீட்டி முழக்கி அறிவித்தார்.

"தம்பி….. பெண்கிட்ட….. ஏதோ..... பேசணுமாம்!"

வான்மதியின் தந்தை முகம் கொள்ளாப்புன்சிரிப்புடன் அதை வரவேற்றார். இந்த சம்பந்தம் முடிவாகிவிடும் என்று அவருக்கு தொலைதூர திருஷ்டியில் தெரிந்தது.

வான்மதி ஆகாஷுக்கு எதிரில் அமர்ந்திருந்தாள்.கேட்கத் துடித்த கேள்விகளை நாவுக்கடியில் நசுக்கினாள். அவனே முதலில் பேசட்டும் என்று மெளனம் காத்தாள்.

"வான்மதி! பார்த்தாயா? உன்னைத் தேடி வந்துட்டேன். என்மேல் உனக்கு கோபம் எதுவும் இல்லையே?"

"அன்னைக்கு கொள்கை, லட்சியம்னு ஏதேதோ சொன்னீங்களே?"

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அவளுக்கும் ஒரு லட்சியம்.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 14:52

கேட்கத்துடித்தக் கேள்வியைக் கேட்டேவிட்டாள். அவன் அலட்சியமாய்ச் சிரித்தான்.

"அதையெல்லாம் இன்னும் நீ மறக்கலையா? அன்றைய சூழ்நிலையில் அது பெரிசாத் தெரிஞ்சது. போகப் போகத்தான் அதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதுன்னு புரிஞ்சது. என் அண்ணனைப் பாரு. நல்ல வசதியான இடத்தில் பெண்ணெடுத்தபிறகு எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்துகிட்டிருக்கான். சுகவாழ்வு! யோசிச்சுப் பார்த்தேன். நான் மட்டும் ஏன் என் அப்பா அம்மாவின் விருப்பத்துக்கு விரோதமாய் ஒருத்தியைக் கட்டிகிட்டு வாழ்நாளெல்லாம் கஷ்டப்படணும்னு என் முடிவை மாத்திகிட்டேன்."

"பத்திரிகை வேலை என்னாச்சு?"

"அதையெல்லம் என்னைக்கோ மூட்டைகட்டிட்டேன். இப்போ, ஐயா ஒரு தொழிலதிபர். உன் அப்பா சொல்லலையா?"

"ம்! சொன்னார்!"

"உனக்குச் சம்மதம்தானே! உன் போட்டோவைப் பாத்தபிறகு எனக்குப் பழசெல்லாம் நினைவுக்கு வந்திடுச்சு. நீ என்மேல் எவ்வளவு காதலா இருந்தே? எப்படியாவது எங்க வீட்டில கேட்கறதை உன் அப்பா செய்திட்டால் போதும். நீயும் நானும் சந்தோஷமா வாழலாம், அன்னைக்கு நீ விரும்பினபடியே!"

வான்மதி வெற்றுச்சிரிப்பு சிரித்தாள். சந்தோஷமாக வாழ்வதா? அது எப்படி முடியும்? எந்த உயரிய குணங்களுக்காக அன்றவனை விரும்பினேனோ, அதற்கு நேர்மாறான குணங்கொண்ட இவனுடன் எப்படி அதே போன்றதொரு காதல் வாழ்க்கை வாழ இயலும்? முறிந்த காதல் முறிந்ததாகவே இருந்திருக்கக்கூடாதா?

அவள் கையிலிருந்த காற்றாடியைப் பிடுங்கிச் சென்ற காற்று, காலத்தின் தயவால் மீண்டும் கொண்டு வந்து அவள் கைகளில் சேர்த்திருக்கிறது, மிகவும் கிழிந்து நைந்த நிலையில்! இனி அதற்கு ஒட்டுப்போட்டு சரியான திசையில் பறக்கவிடவேண்டியது அவள் பொறுப்பு!

"என்ன ஒண்ணுமே பேசமாட்டேங்கறே, வான்மதி?"

அவன் தவிப்புடன் அவளைக் கேட்டான்.

"நன்றி!"

"நன்றியா? எதுக்கு?"

"உங்களைப் போலவே நானும் ஒரு லட்சியத்தை வளர்த்துகிட்டேன். ஒரு ஊனமுற்றவரையோ, பரம ஏழையையோதான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு. அப்பா அதைகேட்டுட்டு சிரிச்சார். அம்மா அழுதாங்க.இதெல்லாம் சரிப்படாதுன்னு அப்பா கண்டிப்பா சொல்லிட்டார். ஆனால் பாருங்க, அவர் தன்னையறியாமலேயே என் லட்சியத்தை நிறைவேத்தப்போறார்."

"என்ன சொல்றே?"

"தன்மானத்தை இழந்ததன் மூலம் மனதளவில் ஊனமுற்றவரையும், பெண்வீட்டில் வரதட்சணை வாங்கித்தான் காலந்தள்ளமுடியும்கிற நிலையில் இருக்கிற பரம ஏழையையும் ஒரே உருவத்தில் கொண்டுவந்து என்முன் நிறுத்தியிருக்கார் இல்லையா? அவருக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கும் என் நன்றி!"

ஆகாஷ் முகம் வெளிறித் தலைகவிழ, வான்மதி தலைநிமிர்ந்து நின்றாள்.

கீதா.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அவளுக்கும் ஒரு லட்சியம்.

Post by அப்துல்லாஹ் on Sun 3 Jul 2011 - 16:15

அருமையான கதை. நன்றாக இருந்தது....
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: அவளுக்கும் ஒரு லட்சியம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum