சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

மனிதாபிமானம்....

Go down

Sticky மனிதாபிமானம்....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:15

"எலேய்.. எந்தி நார்டா வேண்டாமா'' சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்களைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தன. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் முருகன்.
அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிக்கொண்டிருந்த முருகனை எழுப்பிவிட்டார்.
"இல்ல அண்ணாச்சி.. வேணாம். அப்பறம் நானே வந்து பார்க்கலாம்னு நெனைச்சேன். ஊர்ல இருந்து தோஸ்த்து ஒருத்தன் வந்திருக்கான். மலாடுல இருக்கான். அவன பாக்கப்போறேன். நாளைக்குத்தான் வருவேன். ஆளக்காணம் ஓடிட்டான்னு நெனைச்சுடாதீங்க..''
"அட.. கோட்டிக்காரப்பயலே.. அப்படியெல்லாம் இல்ல. ஆளக் காணாட்டி பெட்டியத்தான் ஒடச்சிருப்போம். நல்லவேள சொன்னியே. பத்தரமா போய்ட்டு வாடே.. என்ன..''
"அதுக்குத்தான் இப்பவே சொல்லிட்டேன் அண்ணாச்சி.''
"செரி செரி பயப்படாம போயிட்டு வா'' போய்விட்டார். சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டான். அந்த நீண்ட அறையில் இவனைத்தவிர ஒருத்தருமில்லை. எல்லோரும் கிளம்பி இருந்தனர். பதினெட்டுக்கு நாற்பது என்ற அளவில் நீளமான அறை அது.
அங்கே தான் இருபத்தியேழு பையன்கள் தங்கி இருந்தார்கள். இவர்களின் உபயோகத்துக்கென நான்கு கழிவறைகளும், நான்கு குளியல் முறியும் உண்டு. எல்லோரும் அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். தண்­ர் தட்டுப்பாடு இல்லையென்றாலும் ஒரே நேரத்தில் ஐந்தாவது ஆளுக்கு வயிற்றை கலக்கியது என்றால் பெயிண்ட் டப்பாவில் தண்­ர் கோரிக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் பொதுக் கழிவறைக்குத்தான் ஓட வேண்டியதிருக்கும். அங்கும் க்யூ இருக்கும்.. அது பெரிய கதை.
கடந்த முறையும் இதே போல மும்பைக்குப் பாலா வந்திருந்த போதும், இந்தக் கழிவறை பிரச்சினையைத்தான் பெரிதாக பேசிக்கொண்டிருந்தான்.
ஐந்து அடுக்குகள் கொண்ட ஆறு அலமாரிகள் சுவற்றிலேயே செய்யப்பட்டிருக்கும். அதில் தான் பெட்டியையோ, பேக்கையோ வைத்துக்கொள்ள வேண்டும். கதவுகள் ஏதும் கிடையாது. துணிகள் காயப்போட அறையின் நாலுபக்கமும் கொடி கட்டப்பட்டிருக்கும். ஆனால்.. அதில் அநேக நாட்களில் துவைக்காத லுங்கி தொடங்கி உள்ளாடை வரை தொங்கிக்கொண்டிருக்கும். மூன்று வேளை சாப்பாடு போட்டு, தங்குவதற்கு இடமும் கொடுக்கும் இதுமாதிரியான விடுதிகளைப் பொங்கல்வீடு என்று தான் மும்பைத்தமிழர்கள் அழைத்துவந்தார்கள். பெயர்க்காரணம் ஒன்றும் பெரிய விசயமல்ல.
இப்படியான ஒரு பொங்கல் வீட்டில் தான் தங்கி இருக்கிறான். மும்பையில் எப்படியும் சுமார் இருநூறுக்கும் அதிகமான பொங்கல்வீடுகள் இருக்கும். ஆனால் எவற்றிற்கும் தனிப்பெயரோ, பெயர் பலகையோ கிடையாது. வாய்மொழியாகவே பொங்கல்வீடு என்று அழைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொங்கல்வீட்டை நடந்தி வந்த அண்ணாச்சிக்குப் பக்கத்திலேயே சொந்தமாக வீடியோ தியேட்டர் இரண்டு உண்டு. தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமை மாதிரியான வார விடுமுறை நாட்களிலும் காலை எட்டுமணிக்குக் காட்சி தொடங்கிவிடும். சாதாரண நாட்களில் வீடியோ தியேட்டரில் காலை ஒன்பதரைக்கு முதல் காட்சி தொடங்குவார்கள். அங்கு வரும்போது, இங்கேயும் வந்து ஓர் எட்டு பார்த்துவிட்டுப் போவார். வீடியோ தியேட்டரின் முகவரியைத்தான் இங்கே தங்கி இருப்பவர்கள் அஞ்சல்வழி தொடர்புகளுக்குக் கொடுப்பது வழக்கம்.
தலையணைக்கு அடியில் கை விட்டு, கடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான். மணி ஒன்பது நாற்பது என்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நைட் ஷ’ப்ட் போனவர்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுவார்கள். சண்டாஸ் காலியாக இருக்காது என்ற நினைவு வந்ததுமே சுருட்டிக்கொண்டு எழுந்தான். நழுவிய கைலியை இழுத்துப் பிடித்து கட்டிக்கொண்டான். போர்வையை மடித்து தலையணை மேல் போட்டுவிட்டு, பிரஷ்ஷ’ல் பேஸ்டைப் பிதுக்கிக் கொண்டு சண்டாஸ் வாளி இருந்த இடம் நோக்கி போனான்.
ட்ரமில் இருந்து தண்­ர் கோரி ஊத்திக்கொண்டு, வாளியை எடுத்துக்கொண்டு, காலியாக கிடந்த மூன்றாவது சண்டாஸ”க்குள் நுழைந்தான். தாழ்ப்பாள் இருக்கும் ஒரே சண்டாஸ் இதுதான். அதுவும் சில இடங்களில் பாதி கதவுதான் இருக்கும். வெளியில் நிற்பவன் உள்ளே இருப்பவனையே பார்த்துக்கொண்டிருப்பான். தலை குனிந்துகொண்டிருக்கும் அவன் நிமிர்ந்தால்.. ஓகயா.. என்று கேட்பான். கக்கூஸ”ல உட்கார்ந்து சோறா திங்க முடியும்னு கேட்கத்தோணும். தாழ்ப்பாள் இல்லாதவற்றில் கதவுக்கு முட்டுக்கொடுத்து வாளியை வைக்கவேண்டும்.
காலைக்கடனை முடித்துவிட்டு, திரும்பவும் அலமாரிக்கு வந்து, ப்ரஷை வைத்துவிட்டு, குளிக்க சோப்பையும், துண்டையும் எடுத்துக்கொண்டு போனான். குளித்து முடித்து, இவன் உள்ளே போய், சோப்பு டப்பாவைத் திரும்பவும், பெட்டிக்குள் வைத்து விட்டு, பேண்ட், சட்டையை எடுத்து அணிந்துகொண்டான் முருகன். துண்டையும், லுங்கியையும் கொடியில் அப்படியே விரித்து போட்டுவிட்டு, பெட்டியைச் சரியாக பூட்டி இருக்கிறோமா என்று திரும்பவும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.
கல்லிக்குள் ஓடும் சாக்கடை நீரில் கால்வைக்காமல் அப்படியும் இப்படியுமாக பாலே நடனம் பயின்றவன் போல நடக்கலானான்.
பாக்கெட்டில் இருந்த கைபேசியின் அதிர்வு. படுக்கும் போது, சைலன்சில் வைத்தது. நார்மல் மோடுக்கு மாற்ற மறந்து போனது இப்போது தான் நினைவுக்கு வந்தது. மொபைலை எடுத்துப் பார்த்தான். பாலா என்றது.
"ஹலோ''
"டேய்.. நான் பாலா பேசுறேன்டா..''
"சொல்லுடா.. ஒன்னைய பார்க்கத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..''
''மறந்துட்டியோன்னு தான் போன் பண்ணேன்.''
"அதெல்லாம் மறக்கலை. இன்னும் ஒருமணி நேரத்துல அங்கே இருப்பேன்.''

பாலாவும், இவனும் ஒரே ஊர்க்காரர்கள் என்றாலும், இவன் பள்ளிப் படிப்போடு மும்பைக்கு வண்டியேறியவன். அவன் மேற்கொண்டு படித்து, பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறான். அவன் திருமணத்திற்குகூட போக முடியவில்லை. போனில் வாழ்த்து சொன்னதோடு சரி. இப்போது தான் மீண்டும் சந்திக்கப்போகிறான். பாலாவின் மச்சினன் žனிவாசன் மலாடு ஒர்லம் பகுதியில் பிரட் வியாபாரம் செய்து வருகிறான்.
தன் வேலையின் சிரமத்தைப் போனில் சொன்னதிலிருந்து பாலாவும் மச்சினனைப் போய் பார்க்கச்சொல்லிக்கொண்டே இருந்தான். இவனும் அவன் சொன்னதின் பேரில் போய் ஒருமுறை பார்த்துவிட்டு வந்தான். பாலாவின் மச்சினன் இவனைவிட வயதில் சின்னவன் என்றாலும் அவனிடம் எட்டு பேர் வேலை பார்த்தார்கள். மாமாவின் நண்பன் என்ற முறையில் ஏகமரியாதை கொடுத்தான் அவன். அதனாலயே தன் வேலை விசயங்களைப் பற்றி பேசாமல் திரும்ப வந்துவிட்டான்.
மாகிம் ரயில் நிலையத்திலிருந்து, போரிவிலி போகும் மின்தொடர்வண்டியைப் பிடித்து, மலாடு போய் இறங்கினான். அங்கிருந்து பெஸ்ட் பஸ் பிடித்து, ஒர்லம் பகுதியில் இறங்கினான். சர்ச்சுக்கு எதிரில் போகும் வழியாக போனால் ஒர்லத்தின் தமிழர்கள் வசிக்கும் பகுதிவந்துவிடும். மெதுவாக நடக்கத் தொடங்கினான்.
"முருகண்ணே, வந்துட்டீகளா.. மச்சான் உங்களுக்காகத்தான் காத்திருக்கு'' என்றான் žனிவாசன்.
குரல் பின்னாலிருந்து கேட்க, திரும்பிப் பார்த்தான் முருகன். சிரித்தபடியே சைக்கிளை அருகில் கொண்டுவந்து நிறுத்தினான் žனிவாசன். இவன் பின்னால் ஏறி அமர்ந்துகொள்ள, அந்த உயரமான சைக்கிளை முழு பலம் கொண்டமட்டும் žனி அழுத்த, வண்டி வேகமெடுத்தது.
"வாடா, எவ்வளவு நேரம் காத்திருக்கறது. பம்பாய்க்கு வந்துட்ட பொறவு அவனவன் பரபரன்னு ஓடிக்கிட்டே இருக்கானுங்க, நீ என்னடா இப்படி இருக்க என்றபடியே சைக்கிளில் இருந்து இறங்கிய முருகனை கட்டியணைத்துக் கொண்டான் பாலா. "சாரி மாப்ள, தூங்கிட்டேன். சரி வா, கிளம்பலாம். முதல்ல எங்க போகணும்?''
''காந்திவிலி ஈஸ்ட்டுக்குப் போகணும். ஆட்டோல போலாமா, இல்ல பஸ்ல போலாமா?''
"பஸ்லேயே போவோம்டா. இங்கேர்ந்து டைரக்டா பஸ் இருக்கு.''
ஒர்லம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள். மேலே டாப்ஸ”ம், கீழே பாவாடையுமாக நிறைய கோவா பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சர்ச்சுக்கு வந்துவிட்டுப் போகிறவர்களாக இருக்கும். கோவா பெண்கள் எல்லோருமே ஏன் தண்­ர் பிடித்துவைக்கும் டிரம் போலவே இருக்கிறார்கள் என்று தோன்றியது முருகனுக்கு.
"டேய் என்னடா ஊரு இது. ஒரு மனுஷனும் இன்னொருத்தன மதிக்கவே மாட்டேன்றான். நான் இங்க வந்த நாலு நாளா பாத்துக்கிட்டிருக்கேன், மனிதாபிமானம்னா கிலோ என்ன விலைன்னு கேப்பாங்க போல. எப்படிடா இந்தூர்ல இருந்துக்கிட்டிருக்கீங்க?''
"ஏன்டா இப்படி சலிச்சுக்கற, அப்படி என்ன நடந்துச்சு.''
"எலக்ட்ரிக் ட்ரெயின்ல பிச்சை கேட்டு பாடிட்டு வர குருட்டு பிச்சைக்காரனுக்கு ஒரு பயலும் காசு போடமாட்டேன்றான். ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்துல எதிர்ல வர்றவன் மேல மோதினா சாரி கூடச் சொல்லாம ஓடிர்ரானுங்க. ஏதாவது ஒரு ப்ளாட்பார்ம்ல, ட்ரெயின்ல அடிபட்ட டெட்பாடி கிடக்கு. அதையும் எவனும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியல. ச்žச்ž ரொம்ப மோசம்டா இந்த ஊரு''.
"அப்படில்லாம் இல்லடா. ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு அவசரம் இருந்திருக்கும்.''
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புஷ்பா பார்க்கிலிருந்து காந்திவிலி செல்லும் பேருந்து வந்தது. ஏறிக் கொண்டார்கள். காந்திவிலிக்கு இரு டிக்கெட்டுகளையும் முருகன் எடுத்துக் கொண்டான். சார்க்கோப் நாக்கா வந்ததும் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது.
"ஊர்லர்ந்து வந்தது வேற அசைன்மெண்ட்டுக்காக. ஆனா இங்க இவனுங்கள பாத்ததும், மனுஷத்தன்மை செத்துப் போச்சுன்னு இன்னொரு அசைன்மெண்ட் செய்யலாமான்னு யோசிக்கறேன்டா.''
"அந்த அளவுக்கெல்லாம் ஒண்ணும் மோசம் ஆகல.''
"அப்படில்லாம் ஒண்ணுமில்ல. பாத்ததைத்தான் சொல்றேன். நேத்து சாயங்காலம் காச்பாடா ஏரியால தீ பிடிச்சிருச்சு. ஒர்லத்திலிருந்து நிறைய பேர் பதறியடிச்சு ஓடினாங்க. கூட நானும் போனேன். பக்கத்துல எரிஞ்சுகிட்டிருக்கற குடிசைய, அணைக்காம தன் குடிசைல இருக்கற பொருட்களையெல்லாம் வேகவேகமா வெளில எடுத்துகிட்டிருந்தவங்களையும், தன் வீட்டுக் கூரை மேல மட்டும் தண்ணியள்ளி ஊத்திகிட்டிருந்த ஆளுங்களையும்தான் அதிகம் பார்க்க முடிஞ்சது. அதனாலதான் சொல்றேன் இந்தூர்ல இருக்கற எல்லாரும் மனுஷத்தனமே இல்லாம மெஷ’னா மாறிட்டாங்கன்னு.''
"அப்படி எல்லாம் சொல்லிட முடியாதுடா.. அவனவன் தன் அளவில் மனுஷத்தன்மையோடதான் இயங்கிக்கிட்டு இருக்கான். பொழைக்க வந்த ஊர்ல அவனால என்ன செய்யமுடியுமோ அதை செஞ்சுக்கிட்டு தான் இருக்கான்னு நான் நம்புறேன். ஏன்னா.. நானும் இதே ஊர்ல பொழைக்கறவன் தான்.''
பாலா பதிலேதும் கூறவில்லை. பேருந்து இப்போது கடைசி நிறுத்தத்தை அடைந்திருந்தது. முன்வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்த மக்களோடு வரிசையில் சேர்ந்து இருவரும் இறங்கினார்கள். அப்படியே சிறிது முன்னால் நடந்து வலது பக்கம் திரும்பி, ரயில் நிலையத்தின் அருகில் இருந்த மார்க்கெட் சாலை வழியாக லெவல் க்ராசிங்கை அடைந்தார்கள்.
நான்கு வழிப்பாதை கொண்ட லெவல் க்ராசிங் அது. முதலிரண்டும் லோக்கல் மின் தொடர்வண்டிகளுக்கானவை. மற்றவை வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டிகளுக்கானவை. இடது பக்கம் தண்டவாளங்களைக் கடப்பதற்கான நடை மேடை போடப்பட்டிருந்தது. மூடி இருந்த க்ராசிங் தடுப்புக்கு ஓரமாக டிங்..டிங்..டிங்.. என்று மணி சத்தம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. சிவப்பு விளக்கும் விட்டு விட்டு எரிந்து எச்சரிக்கை செய்துகொண்டிருந்தது.
ஆனால் பொதுமக்களில் எவரும் இதை பொருட்படுத்தியது போல இல்லை. பெருவாரியான மக்கள் மூடியிருந்த லெவல் க்ராசிங்கின் தடுப்பின் கீழாக குனிந்து தண்டவாளங்களை நேரடியாக தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்கள். பழ வியாபாரிகள் கூடைகளைக் கீழே வைத்துவிட்டு, தடுப்புக்கு அந்தப்பக்கமாக குனிந்து போய், பின் கூடையைத் தன் பக்கம் இழுத்து எடுத்துக்கொண்டு தண்டவாளங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். சிறுவன், வாலிபன், பெரியவர் என்று ஆண்களும், மங்கை, மடந்தை, பேதை, பேரிளம்பெண் என எல்லா வயது பெண்களும் குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்பைப் பற்றிய கவலையின்றி, இந்தப்பக்கமும், அந்தப்பக்கமுமாக போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருந்தார்கள்.
இவர்களும் மற்றவர்களைப் போலவே தடுப்பின் கீழ் குனிந்து தண்டவாளங்களைக் கடக்க ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு முன்னால் ஒருவர் சைக்கிளை உருட்டியபடி சென்று கொண்டிருந்தார்.
"நீ என்ன சொன்னாலும் சரி.. எனக்கு சுத்தமா இந்த ஊரே பிடிக்கலடா. முதல்ல நினைச்சேன் ஓர் ஆறு மாசமாவது இங்க இருக்கறா மாதிரி வரணும்னு. வந்த ரெண்டாவது நாளே தோணிருச்சு, இந்தூரு எனக்கு சரிபட்டு வராதுன்னு.''
பாலாவின் புலம்பல்களை மௌனமாய் கேட்டுக் கொண்டே வந்தான் முருகன்.
"இரண்டு தண்டவாளங்களைக் கடந்து மூன்றாவது தண்டவாளத்தை நெருங்கும் போது, "ஏய் தீன் நம்பர் மே காடி ஆரஹே..'' என்று முன்னால் போய்க் கொண்டிருந்த சைக்கிள்காரன் கத்தினான்.
சுதாரித்து முன்னால் கால்வைத்த பாலாவையும் முருகன் பின்னுக்கிழுத்துக் கொண்ட வினாடி படு வேகமாக ஓர் எக்ஸ்பிரஸ் வண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு போனது.
பாலாவின் முகத்தைப் பார்த்தான் முருகன்.
நகரத்தின் மனிதாபிமானம் என்னவென்று அந்தக் கணத்தில் தெரிந்தது.

நன்றி: தினமணி கதிர்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனிதாபிமானம்....

Post by பாயிஸ் on Tue 19 Jul 2011 - 18:07

இத இன்னும் பார்க்கல்ல சாதிக் பார்த்தால் விமர்சனம்
பார்ப்பேன் என்று நினைக்கிறேன் இந்த நாள் போதும் என்றும் நினைக்கிறேன்


@. :.”: @. :.”:
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum