சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

வாழ்க்கை சிறப்பாக அமைய

View previous topic View next topic Go down

Sticky வாழ்க்கை சிறப்பாக அமைய

Post by Atchaya on Wed 20 Jul 2011 - 16:25

வாழ்வின் வழிகாட்டிகள்:

நாம் இந்த உலகில் நலமுடன் வாழ தெய்வம், குரு. மாதா, பிதா என்ற நால்வர் காரணமாக அமைந்துள்ளார்கள். ஆகையால் முதலில் தினமும் அவர்களை வழிபடுவது உசிதமே. நம் ஸுகவாழ்வுக்கு தெய்வம், ஞானத்திற்கு குரு, போகத்திற்கு மாதா பிதா எனப் பறைசாற்றுகிறது நமது சாஸ்திரம். இவர்களை வணங்கினால் மட்டும் போதாது. அவர்கள் காட்டும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். வேதம் சொல்வதாவது:

ஸத்யம்வத தர்மம் சர -
மாத்ருதேவோ பவ - பித்ருதேவோ பவ
ஆசார்யதேவோ பவ - அதிதிதேவோ பவ

ஸத்யமே சொல், (பொய் சொல்லாதே). மாதா, பிதா, குரு, அதிதிகள் இவர்களை தெய்வமாகக் கொண்டாடு. காரணம் நமக்கு, கண்ணுக்குத் தெரியும் தெய்வங்கள் இவர்கள். நமக்கு நல்லது நேர ஆசீர்வதிப்பவர்கள் இவர்கள். அவர்களை நாடினால், வணங்கினால் நமக்கு நல்வழி காண்பிப்பார்கள் எனப் பொருள்.

அத்துடன் நாம் நம் கர்மாக்களை சரிவரச் செய்யவேண்டும். குழந்தைகளாகிய, மாணவ மாணவிகளாகிய உங்களுடய தர்மம் (Duty) என்ன? ஸாத்வீக உணவருந்தி, உடலையும மனதையும் சுத்தமாக வைய்த்துக்கொண்டு ஞானத்தை வர்த்திப்பிக்க சிரமப்படவேண்டும். மேற்சொன்ன வேதவாக்குப்படி வாழ்க்கை லட்சியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உடலை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?

உடல் ஓர் ஆலயம்:

நம் உடல் ஓர் ஆலயம். எப்படி? அதனுள்தானே தெய்வம் நம் ஜீவாத்மா வடிவில் வஸிக்கிரார். தெய்வம் இருக்கும் இடம் ஆலயம் தானே? உடல் நலம் கெட்டால் மனம் ஓர் நிலையில் இராது. கவனம் முழுதும் உடலிலேயே இருக்கும். நம்முள் உள்ள தெய்வத்தில் சிந்தனை செல்லாது. உடல் அலங்காரம் புற உலகில் உங்களை மதிக்க ஓர் ஏற்பாடு. ஆனால், அதே சமயம் தெய்வம் வஸிக்கும் ஆலயமாதலால் அதை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொதுதான் நம் கவனம் உடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும். ஆகையால், காலையில், உடலை சுத்தம் செய்து, அலங்கரித்து, தெய்வத்தை வழிபடுவது வழக்கம். தெய்வத்தை எதற்காக வழிபடவேண்டும்? நமக்கு நல்லது கெட்டது அமைவது தெய்வத்தின் அருளால்தான். இன்று பொழுது நன்றாகக் கழிய வேண்டுமே என்று நாம் தெய்வத்தை நாடுகிறோம். நாம் நல்வழியில் செல்லக் கடவுள் அருள் தேவை. கடவுள் ஆலயத்திலல்லவோ இருக்கிறார்? நமக்குள் எங்கிருந்து வந்தார்? என நீங்கள் வினவலாம். அங்கிருப்பது எல்லோருக்கும் பொதுவான விக்ரஹம். நம்முள் இருப்பது நம்முடய மூலாதாரமான வடிவம். நமக்குத் தனியாக, நம் குணத்திற்கு ஏற்ப வழி அமைத்துத் தரும் சக்தி.

நம் சுபாவம் (Character):

இங்கேயும் பாருங்கள், “நம் குணத்திர்க்கு ஏற்ப” என்றுள்ளது. ஆகையால் நம் கர்மா நம் குணத்திற்குட்பட்டது என விளங்குகிறது. இதனால் என்ன தெரிகிறது? நம் குணம் நன்றாயிருந்தால் நல்ல காரியம் செய்வோம், நல்ல பலன் கிடைக்கும் என்றல்லவா? குணத்தின் தரம் நம் சுபாவத்தை (Character) உருவாக்குகிறது. குணத்தை எப்படி அமைத்துக்கொள்ள முடியும்?

1 தகுந்த உணவுப்பொருட்களை உகந்த அளவு உட்கொள்தல்
2 நல்ல விசாரங்களை நம்முள் வளர்த்துக்கொள்வது
3 சுயநல ஆசைகளைத் தவிர்த்து எல்லோருக்கும் உதவியாக உள்ள நல்ல காரியங்களைச் செய்வது

முதலில் சொன்னதைப்பற்றி விரிவாக, “வாழ்வின் லட்சியம்” என்ற தொடரில் பார்க்கவும். இரண்டாவது நம் அறிவை வளர்த்துக்கொள்ள நம் சாஸ்திரங்களைப் படிப்பது, குருவும் பெரியோர்களும் காட்டும் வழி நடப்பது என அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாகக் கூறியுள்ளது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்ன முறைகளைக் கையாண்டு, அதன்படி செயல் புரிவது. இதற்கு நம் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிப்பதோடு, தினம் இறை வழிபாடு முறையைக் கையாள்வது அவசியம். பிறகு கீதை, புராணம் கேட்டல் என வழிபட வேண்டும். நம் வீட்டில் தாத்தா, பாட்டி நமக்குச் சொல்லும் புராணக் கதைகளைக் கேட்பது, ஆலயங்களில் பௌராணிகர் சொல்லும் கதா ப்ரவசனத்தைக் கேட்பது, அதன் உட்கருத்தைப் (Morals) புரிந்துகொண்டு, நம் வாழ்க்கை லட்சியத்தைச் சரிவர அமைத்துக்கொண்டு, நம் வாழ்க்கைத் தரத்தை ஒழுங்குபடுத்துவது என ஓர் நியதியை நமக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நம் சுபாவ வடிவைத் திருத்திக்கொள்வோமானால் நம் செயல் ஸாத்வீகமாகவே அமையும். இதற்கு Character Building என்று கூறுவார்கள். ஆக, முதலில் Character Building மிகவும் முக்கியம் எனப் பார்த்தோம். இத்துடன் உங்கள் அறிவும் வளர வேண்டும். ஆதற்கு உங்கள் பள்ளிக்கூடப் பாடங்களைச் சரிவரக் கற்றுணர்ந்து, தேர்வுகளில் முதலில் வர வேண்டும் என்ற நோக்கத்தை வளர்த்துக்கொண்டு, மாணவ தர்மத்தைக் கையாள வேண்டும்.. புற உலக வித்தை மிக அவசியம். ஏன்? உத்தியோகம் பார்க்க வேண்டுமானால் முதலில் நல்ல Degree எடுத்து, மேல் படிப்புப் படித்து, நல்ல மார்க்குகள் வாங்க வேண்டும். அதற்கு மனதை ஒரு நிலையில் கொணர வேண்டும். அதற்காகத்தான், மேல் சொன்ன இறை வணக்கம், பெரியோர்கள் சொற்படி நடப்பது, நமது வேத சாஸ்திரங்களை உணர்வது, மற்றவர்களுக்கு நல்லது செய்யும் வண்ணம் செயல் புரிவது முதலிய Character Building கருவிகளைப் பயன்படுத்துவது என்று நம் பெரியோர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள்.

இப்படி தெய்வ வழிபாடு, சத்தான மித உணவு உட்கொள்தல், புராணக் கதைகள் கேட்டு அதன் Moral படி நம் Character ஐ அமைத்துக்கொள்வது, ஆலய வழிபாடு, தெய்வத்திடம் பக்தி, நம் சாஸ்திரங்களில் நம்பிக்கை, பெரியோர்களை மதிப்பது, சுயநலமின்றி, மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காதபடிக் காரியங்களைச் செய்வது போன்ற வழிகளைப் பின்பற்றுவது என நம் வாழ்க்கை முறையை அமைய்த்துக் கொள்ள வேண்டும்.
...நன்றி....
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum