சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

தம்பிக்கோட்டை - Thambikkottai

View previous topic View next topic Go down

Sticky தம்பிக்கோட்டை - Thambikkottai

Post by நண்பன் on Fri 29 Jul 2011 - 2:12அக்கா-தம்பி பாசத்தை சொல்லும் கதை.
கல்லூரில் படிக்கும் நரேன், தனது அக்கா அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். தம்பி படித்து விட்டு நல்ல வேலைக்குச் சென்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்ற எண்ணத்தோடு தம்பி மீது பாசம் காட்டி வளர்க்கும் அக்காவாக மீனா நடித்திருக்கிறார். அக்கா-தம்பி இவர்களின் பாசப்படலம் ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்க, நரேன், கல்லூரி என்.எஸ்.எஸ். கேம்புக்காக தம்பிக்கோட்டை என்ற கிராமத்திற்கு செல்கிறார்.
உடைந்த பாலத்தை நுழைவாயிலாக கொண்ட அந்த கிராமத்தில், பாலம் கட்ட யார் வந்தாலும் அவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ராஜேந்திரனும் அவருடைய அடியாட்களும். அந்த கிராமத்திற்கு என்.எஸ்.எஸ் கேம்புக்காக செல்லும் நரேன், ராஜேந்திரனின் மகள் பூனம் பஜ்வாவை காதலிக்கிறார். இந்த விஷயம் அறிந்த ராஜேந்திரன், நரேனை வெட்டி பாலத்தில் போட, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நரேனை டாக்டர்கள் காப்பாற்றிவிடுகிறார்கள்.
உயிர் பிழைத்த நரேன், ராஜேந்திரனை பழிவாங்க கிளம்ப, "நீ அவனை மட்டும் பழி வாங்க கூடாது. அந்த உடைந்த பாலத்தையும் கட்ட வேண்டும்" என்று மீனா கூற, அந்த பாலத்தின் ஃபிளாஷ்பேக் துவங்குகிறது. தம்பிக்கோட்டையில் உள்ள உடைந்த பாலத்திற்கும், சென்னையில் வாழும் அக்கா-தம்பிக்கும் என்ன சம்மந்தம்? ராஜேந்திரனை எதிர்த்து பூனம் பஜ்வாவை எப்படி நரேன் கைப்பிடிக்கிறார் என்பது இறுதிக்காட்சி.
'உன்னைப்போல் ஒருவன்' கமல் மாதிரி கெட்டப்ல சந்தானம் மொட்டை மாடில நின்னுக்கிட்டு சிம் மாத்தி மாத்தி ஃபிகருங்களோட கடலை போடறது நல்ல ஓப்பனிங்க்....
ஹீரோ 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' நரேன்.. பாக்க பாவமா இருக்கார்...(சம்பளம் சரியா தரலை போல)விஷால் கால்ஷீட் கிடைக்காம இவரைப்பிடிச்சுட்டாங்களோன்னு யோசிக்க வைக்குது கதையோட ஒன்லைன். ஹீரோயின் பூனம் பஜ்வா, பசுமையான இலை தழைகளோட கொத்தா வாங்குன கொடைக்கானல் கேரட் மாதிரி அவ்வளவு ஃபிரஷ்.
ஹீரோ - ஹீரோயின் சந்திக்கற முத சீன்ல ஹீரோயின் தடுக்கி விழுந்து ஹீரோ மேல படர்ந்து கிஸ் அடிச்சுடறாரு...(நல்லா யோசிக்கறாங்கய்யா). நரேன், பூனம் பஜ்வாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் சீன் செம செயற்கை. அதே போல் ஹீரோயின் அறிமுக காட்சியில் வரும் பாடலில் டான்ஸ் மாஸ்டர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
ஃபிளாஷ்பேக்ல பிரபு 4 சீன் வர்றார். அக்கா கேரக்டர்ல மீனாவைப்பாக்க சங்கடமா இருக்கு. அக்கா தம்பி பாசத்தை போட்டு பிழி பிழின்னு பிழிஞ்சு எடுத்திருக்காரு டைரக்டரு.
பீடா பாண்டியம்மாளாக வரும் சங்கீதா, பொது இடத்தில் எல்லாம் பீடாவை பொளிச், பொளிச் என எச்சில் துப்பியபடி சேலையை தூக்கியபடி பண்ணும் ரவுசு செம த்ரில்!
சந்தானத்தின் காமெடி சரவெடியாக அமைந்திருக்கிறது. ஆனால் வெற்றிப்படங்களை கிண்டலடிக்கும் வேட்டையை இவரும் துவங்கியிருப்பது சற்று வருத்தமாகவும் இருக்கிறது. நானும் இந்த படத்திலே நடிக்கிறங்க..என்று அட்டனன்ஸ் போட்டிருக்கிறார் கஞ்சா கருப்பு. இவர்களுடன் 'ப்ரண்ட்ஸ்' விஜயலட்சுமி, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சாகருப்பு, ரியாஸ்கான், குண்டு ஆர்த்தி, மீராகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ஒரு சீன்ல கரண்ட் போயிடுது.. உடனே எல்லாரும் மெழுகுவர்த்தி பற்ற வைத்து போற மாதிரி வருது.. அவ்வளவு பெரிய மாளிகைல எமர்ஜென்சி லைட்டே இருக்காதா? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படமெங்கும் விரவி இருக்கின்றன.
ஹீரோவோட பேரு படத்துல அழகிரின்னு வெச்சதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு தெரியல. ஆனா இந்த கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா இனி ஆளாளுக்கு அழகிரி, ஸ்டாலின், உதய நிதி, அப்படி இறங்கிடுவாங்களோன்னு பயம்.
டி.கண்ணனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் ஆல்பம். உடைந்த பாலத்தை தத்ரூபமாக காட்டியிருக்கிறார் கலை இயக்குநர் மோகன். டி.இமானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
வித்தியாசமான படம் விரும்பும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப்படம் சாதா. மற்றபடி மாமூல் மசாலாப் படம்னா ஓக்கே என்பவர்களுக்கு இந்தப்படம் இருக்கும் தோதா.
தம்பிக்கோட்டை - கமர்ஷியல் கோட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum