சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

முத்துக்கு முத்தாக - Muthuku Muthaga

Go down

Sticky முத்துக்கு முத்தாக - Muthuku Muthaga

Post by நண்பன் on Fri 29 Jul 2011 - 22:30பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இருக்கும் உறவின் இறுக்கமான உணர்வுகளை சொல்லும் கதை.
அண்ணன் தம்பிகள் ஐந்து பேரும் கேரக்டருக்கேற்ற தேர்வு. அவரவர் கேரக்டர்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இதில் பெற்றவர்களுக்காக தன் காதலை மறைத்து, அவர்கள் காட்டிய பெண்ணை மணந்து வாழும் விக்ராந்த் மனதில் ஒட்டிக்கொள்கிறார். அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்போது அங்கு தன் காதலியை கண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பு ஒரு சோறு பதம். கொடுமைக்கார மனைவிக்கும், பெற்றோர்களுக்கும் நடுவில் தவிக்கும் நட்ராஜ், இன்றைய நடுத்தர கணவன்களின் பிரதிபலிப்பு. மனைவியால் துரத்தப்படும் பெற்றோர்களுக்கு பஸ் ஸ்டாண்டில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டு குழந்தை போன்று அவர் அழும் காட்சி கண்களை குளமாக்குகிறது. மாமனாரின் அவமானம் தாங்காமல் வீட்டிற்கு வந்து அம்மா கையால் பழங்கஞ்சி குடிக்கும் அண்ணன் பிரகாஷ் அனுதாபத்தை அள்ளுகிறார். குடும்ப மானம் காக்க கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகும் வீரசமரின் தியாகம் திகைக்க வைக்கிறது.
இப்படத்தில் நாயகன், நாயகி என்றால் அது சரண்யா பொன்வண்ணன், இளவரசு ஆகியோர்தான். சரண்யாவை இதுபோன்ற அம்மா வேடத்தில் பல படங்களில் பார்த்திருந்தாலும், அவ்வப்போது ஒரு புதிய அம்மாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். மருமகள்கள் உதாசீனப்படுத்தும்போதும்கூட சின்ன சிரிப்பில் அத்தனையையும் விழுங்கி விட்டு தளர்ந்த நடைபோடும் அவரது மேனரிசம் ஆச்சர்யம். கிராம பின்னணி கொண்ட ஒவ்வொருவரின் தாயையும் தரிசிக்க வைக்கிறார் சரண்யா.
ஐந்து பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் இளவரசுவின் நடிப்புக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும். அதட்டல் இல்லாத பேச்சு. எதிலும் பொறுப்பு, பொறுமை என நடுத்தர கிராமத்து தகப்பனாகியிருக்கிறார். அதுவும் இறுதிக்காட்சியில் விஷ சாப்பாட்டை சாப்பிடும் இவரின் நடிப்புக்கு நூத்துக்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம்.
ஒரு புறம் மனசை கிள்ளிவிட்டு அழ வைத்தாலும், மறுபுறம் வயிற்றை கிள்ளி விட்டு சிரிக்கவைக்கவென்றே கொண்டு வந்திருக்கிறார்கள் சிங்கம்புலியை. ஆள் நடமாட்டம் இல்லாத அத்துவான மைதானத்தில் வேனை நிறுத்தி, வண்டி பத்து நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கலாம் என்று அலப்பறை கொடுக்கிறார் மனுஷன். இவரது ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூமும், பாடி லாங்குவேஜும் பார்த்த மாத்திரத்திலேயே பற்ற வைக்கிறது சிரிப்பை. டாக்டராக வரும் தேவராஜ் கேரக்டர் இரண்டே சீன்களில் வந்தாலும், மருத்துவர்களின் மார்க்கெட் ரகசியத்தை உடைக்கிறது.
நாயகிகளில் மோனிகா முதலிடத்தில் இருக்கிறார். அழகான கிராமத்து நர்ஸாக வரும் மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க தறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான நடிப்பு அட்டகாசம்.
சிட்டி லவ்வாக வரும் ஓவியா, ஹரீஷ் காதல் காட்சிகள் அவர்களுக்கான புட்டேஜ் காட்சிகள். இவை இல்லாவிட்டால் ஓவியாவுக்கும் இன்னொரு மன்மதன் அம்பாயிருக்கும்.
மருமகள்கள் வர்ஷினி, ஜானகி, சுஜிபாலா மூவரும் சீரியல் மருமகள்களை நினைவுபடுத்துகிறார்கள்.
ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....
ஜெயிலுக்கு போன காரணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் வீரசமர். ஆனால் கோர்ட் வாசலில் நிற்கிற அத்தனை பேருக்கும் கேட்கிற மாதிரி சொல்லி, அந்த லாஜிக்கையும் உடைப்பதுதான் ஐயகோ. இவரால் கொலை செய்யப்படும் ரகுவண்ணன் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம்.
மருமகள்கள் என்றாலே கொடுமைக்காரிகள் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் காட்சிகள், எல்லாம் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கிறது. எபிசோட் எபிசோடாக போகும் காட்சிகள் டிவிக்கு வேண்டுமானால் சரிப்படும். சினிமாவுக்கும் பொறுமையை சோதிக்கிறது. இதில் எல்லா நடிகர்களுக்கும், பாட்டு, பைட் என்று கட்டாய திணிப்பு ரொம்பவே சோதிக்கிறது.
படம் பார்க்கும் ஆண்களின் மனது நெகிழ்ந்து போகும் டச்கள் அதிகம். குறிப்பாக க்ளைமாக்ஸின் போது இளவரசு, சரண்யாவிடம் இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்ததில கொஞ்சமாவது சந்தோஷமாய் வைத்திருந்தேனா? என்று கேட்கும் வசனம் தான். பெரும்பாலான தம்பதியர்களிடம் இந்த கேள்விக்கான சான்ஸோ, சாய்ஸோ வருவதில்லை. இந்த தேன்கூட்டில் கை வைக்காதீர்கள் பேனர் மேட்டர் குபீர் ரகம். நிச்சயம் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு தங்களைப் பற்றி எண்ணங்களை அசைப் போட இந்த படம் ஏதுவாக இருக்கும்.
சூரியன் எப்.எம் சின்னத்தம்பி பெரியதம்பி புகழ் கவி பெரியதம்பி இசையமைத்து இருக்கிறார். ரெண்டு பாட்டு கேட்கும்படியாய் இருக்கு. பின்னணியிசையில் நான் சிங்காக ரெண்டு மூன்று இடங்களில் புதிதாய் யோசித்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பாசத்துக்கேற்ற பசுமையை அள்ளிவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.
சொந்த உழைப்பில் 5 மகன்களை வளர்த்து ஆளாக்கிய ஒரு தந்தை, மருமகள்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதற்காக மனைவி எடுக்கும் அந்த சோக முடிவுக்கு சம்மதிப்பது அந்த கேரக்டரின் தன்மையையே கேலிக்கூத்தாக்கி விடுகிறது.
மூன்று பைட், ஐந்து பாடல் என்ற கமர்ஷியல் படங்களுக்கிடையே, இதுபோன்ற வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் வெற்றிப்பெற்றால் தமிழ் சினிமா வெற்றிபெறும். படத்தின் தலைப்பை போலவே முத்துக்கு முத்தான படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ராசுமதுரவன் முத்தான வெற்றியை பெற வாழ்த்துகள்.

முத்துக்கு முத்தாக - கண்ணுக்கு கண்ணாக!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum