சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Today at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Today at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Today at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Today at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Today at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Today at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Today at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Today at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Today at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Today at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Yesterday at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Yesterday at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Yesterday at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Yesterday at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Yesterday at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Yesterday at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Yesterday at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Yesterday at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Yesterday at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Yesterday at 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

நந்தி - Nandhi

View previous topic View next topic Go down

Sticky நந்தி - Nandhi

Post by நண்பன் on Fri 29 Jul 2011 - 22:38



தன்னை நந்தியாக நினைத்துக் கொண்டிருப்பவனுக்கும், அவனை வணங்காமல் இருக்கும் ஒருவனுக்குமான பிரச்சினைதான் கதை.
எட்டாவது படித்து விட்டு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் அகிலுக்கு, பக்கத்து ஊர் பிரஸிடெண்ட் மகள் சனுஷா மீது காதல். அதுவும் தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் பசு மாட்டை அதன் பேறுகாலத்தில் தன் அப்பா தனக்கு தெரியாமல் பக்கத்து ஊர் பிரஸிடெண்டிடம் விற்றுவிட, அந்த மாட்டின் பிரிவை தாங்க முடியாமல் அடிக்கடி அவர் வீட்டுக்கு போக.... அகிலுக்கு, அவரது மகள் சனுஷாவை பார்த்ததும் காதல் தீப்பற்றிக் கொள்கிறது. சனுஷாவிற்கும் அப்படியே! இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர் சைடிலும் எதிர்ப்பில்லை., உற்றார், உறவினர் பக்கத்தில் எதிர்ப்பு இல்லை! ஆனால் உள்ளூரில் வேலை வெட்டி இல்லாமல் உதார் விட்டுக் கொண்டு திரியும் ஒரு இளைஞனாலும், அவரது சகாக்களாலும் எக்கச்சக்கமான எதிர்ப்பு வருகிறது. தங்களது காதலுக்கும் கல்யாணத்திற்கும் நந்தியாக இருக்கும் அந்த உதார் வில்லனை ஹீரோ அகில் ஒழித்துக் கட்டினாரா? அல்லது அவனால் இவர்களது காதல் அழிந்து போனதா? என்பது இறுதிக்காட்சி.
ஹீரோ அகில் போன படத்தை விட(வால்மீகி) அதிக ஷாட்ஸ் வர்றார். தேறிடுவார். அவருக்கு காதல் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் தான் ரொம்ப இண்ட்ரஸ்ட் போல.
ஹீரோயின் சனுஷா ரொம்ப பிஞ்சு முகம். 'ரேணிகுண்டா'ல பார்த்ததை விட இதுல கொஞ்சம் அழகு கம்மிதான். ரேகா, ரோகிணி, சங்கீதா வரிசையில் நல்ல நடிகையாக கூடிய விரைவில் பெயர் எடுப்பார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார். என்ன... டூயட் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணியிருக்கிறார். ஜோதிகா ரசிகை போல.
சிங்கப்பூர் ரிட்டர்னாக சிங்கம்புலி, அகிலின் அப்பா சித்தன் கே.ஜி.யுடன் சேர்ந்து கொண்டு பண்ணும் அலப்பறை தியேட்டரில் செவிப்பறையை கிழிக்கும் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. வில்லன் குணசிங்கமாக வெட்டி உதார் நிதீஷை, தமிழ் கிராமங்களில் தற்போதும் காண முடிகிறது என்பதால் நன்றாகவே ரசிக்க முடிகிறது! ஆனால் அவர் க்ளைமாக்ஸில் செய்யும் கொடூரம் எதிர்பாராதது.
படத்தோட ஓப்பனிங் சாங்கா வரும் 'சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குனு ஆடுச்சாம்' செம டப்பாங்குத்துப்பாட்டு. ஆனால் அதற்கான நடன தாரகைகள் (குரூப் டான்சர்ஸ்) ரொம்ப முத்தல் முகங்கள். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து பண்ணி இருக்கலாம். பரத்வாஜ் இசையில் 'மயங்கினேன் மயங்கினேன்' பாட்டும், 'தண்ணிக்குள்ளே தீப்பிடிச்ச' பாட்டும் நல்ல மெலோடீஸ். படத்திற்கு பக்க பலமாக இருப்பது ரத்தீஷின் ஒளிப்பதிவுதான்.
காதலன் - காதலி - வில்லன்னு குண்டுச்சட்டிலதான் குதிரை ஓட்டி இருக்காரு இயக்குநர். இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள், திருப்புமுனைகளை திரைக்கதைல சேர்த்திருக்கலாம். ஏன்னா காதலர்கள் அல்லாதவர்கள் இந்தப்படத்தை பார்க்க பொறுமை தேவை. ஹீரோயினோட அப்பா திடீர்னு நல்லவர் ஆகறது நம்பற மாதிரி இல்லை. ஹீரோ அடிக்கடி 'என் பொறுமையை சோதிக்காதே'ன்னு வில்லன்கிட்டே பஞ்ச் டயலாக் பேசறாரு. அது ஆடியன்சுக்கா? வில்லனுக்கானு? டவுட்டு.
பொதுவாகவே கோடம்பாக்க இயக்குநர்கள் படத்தின் திரைக்கதை மீது நம்பிக்கை குறைந்தால் படத்துக்கு ஒரு அனுதாப பார்வை கிடைப்பதற்காக க்ளைமாக்ஸில் தேவையே இல்லாமல் ஹீரோவயோ, ஹீரோயினையோ சாகடித்து விடுகிறார்கள். கதை அனுமதிக்காத போது இந்த மாதிரி ஆன்ட்டி க்ளைமாக்ஸ் வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் உணர இந்தப்படத்தின் தோல்வி ஒரு பாடமாக இருக்கும்.
நந்தி - தரிசிக்க இடையூறு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum