சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சகல உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஆதிவாசிகளும் அனுபவிக்க வழிவகுப்பு

Go down

Sticky சகல உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஆதிவாசிகளும் அனுபவிக்க வழிவகுப்பு

Post by நண்பன் on Mon 1 Aug 2011 - 3:41

சகல உரிமைகளையும் சுதந்திரத்தையும்
ஆதிவாசிகளும் அனுபவிக்க வழிவகுப்பு
ஜனாதிபதி
வாகரை சல்லித்தீவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்
ஆதிவாசிகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் முழுமையாகப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஏனைய சமூகத்தவர் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் சுதந்திரத்தையும் அவர்களும் அனுபவிக்க வழிவகை செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

ஆதிவாசிகள் அனுதாபத்திற்குரியவர் களோ காட்சிப்படுத்தப்பட வேண்டிய வர்களோ அல்லர். அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள். சகல உரிமையும் உடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 8ம் திகதி கொண்டாடவுள்ள உலக ஆதிவாசிகள் தின விழாவையொட்டி நேற்று வாகரை சல்லித்தீவில் தேசிய ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது.

ஆதிவாசிகள் சமூகத் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தோவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அமைச்சர்கள் டி. பி. எக்கநாயக்க, எஸ். எம். சந்ரசேன, ஜகத் பாலசூரிய, பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன், எம். எல். எம். ஹிஸ்புல்லா, எம். கே. டி. எம். குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இதுவரை காலமும் ஆதிவாசிகள் தினம் மஹியங்கனை, தம்பானையிலேயே நடத்தப்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவில் அதிவாசிகள் வாழும் வாகரைப் பிரதேசத்தில் இம்முறை இத்தினம் கொண்டாடப்படுகிறது.

முப்பது வருட கால யுத்தத்தின் போது சாதாரண மக்கள் மட்டுமன்றி ஆதிவாசிகளும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவர்கள் காடுகளில் வாழ்வதா அல்லது காடுளைத் துறந்து செல்வதா என்ற தீர் மானத்தை எடுப்பவர்களாக புலிகளே இருந்தனர். அவர்களின் தனித்துவம் மறுக் கப்பட அதுவே காரணமாகவும் அமைந்தது.

ஆதிவாசிகளின் பிள்ளைகள் பயங்கர வாதிகளால் கடத்திச் செல்லப் பட்டனர். அவர்கள் சந்தேகத்துடனும் அச்சுறுத்தலுடனும் வாழ்ந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டுள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு நாட்டில் சகல இன, மத, சமூக மக்களும் சமாதானமாக ஐக்கியத்துடன் வாழக் கூடிய நிலை தற்போது உருவாக்கப் பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மான அறிக்கையின்படி, ஆதிவாசிகள் எந்த நாடுகளில் வாழ்பவராயினும் சரி அவர் களைத் துன்புறுத்துவதும் மோசமான விடயங்களுக்கு அவர்களைப் பயன் படுத்துவதும் தவறு என கூறப்பட்டுள்ளது. எனினும் என்றும் அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது.

தற்போது ஆதிவாசிகள் எப்பிரதேசத்திலும் அவர்கள் விருப்பப்படி வாழக் கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமான சூழலையும் அரசாங்கம் உருவாக்கிக்கொடுத்துள்ளது. அவர்கள் வனங்களை அழிப்பவர்களல்ல அதற்கு மாறாக அதனைப் பாதுகாப்பவர்கள். அவர்களுக்கான உரிமைகளையும் அவர் களின் எதிர்கால சந்ததிக்கான பாதுகாப்பையும் வரப்பிரசாதங்களையும் வழங்குவது எமது பொறுப்பாகும்.

அவர்கள் காடுகளில் தேன் எடுத்த போதும் மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட போதும் சிறைபிடிக்கப்பட்ட யுகம் ஒன் றிருந்தது. நாம் அவர்களுக்கான உரிமை களைப் பெற்றுக்கொடுக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். ஏனைய நாடுகளில் வாழும் ஆதிவாசிகள் அனுபவிக்கும் சுதந்திரம், உரிமைகளை இவர்களும் அனுபவிக்க வழிவகை செய்யப்படும்.

அவர்களின் உரிமைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சைச்சாத் திடப்பட்டது.

வர்த்தக நோக்குடையவர்களும் நெல் ஆலை வைத்திருப்பவர்களும் வனங்களைப் பாதுகாப்பவர்ளல்ல. ஆதிவாசிகள் தமது வாழ்க்கைக்கான ஆதாரம் என்பதால் வனங்களை நேசிக்கின்றனர். அதனைப் பாதுகாக்கின்றனர்.

வீர கெப்பிட்டிபொல ஏகாதிபத்தியவாதி களுடன் உரிமைகளுக்காகப் போராடிய போது அவருக்கு பக்க பலமாக இருந்த வர்களும் ஆதிவாசிகளே, தலதா மாளி கைக்குத் தேன் வழங்குபவர்கள் அவர்கள்.

அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள். அதனால்தான் வேறு எவருக்குமில்லாத சலுகையாக அவர்கள் கோடரியுடன் அலரி மாளிகைக்குள் வரவும் நாம் அனுமதியளித்துள்ளோம்.

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள். இந்த மண்ணின் சொந்தக்காரர்கள். அதனால் அவர்களை அனுதாபத்துடன் நோக்க வேண்டிய அவசியமில்லை. நிகழ்வுகளில் காட்சிப் பொருளாக இருக்க வேண்டியவர்களுமல்ல.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum