சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்: ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

View previous topic View next topic Go down

Sticky ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்: ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

Post by நண்பன் on Mon 1 Aug 2011 - 4:08

ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்:
ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்
ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க ஒரு ஆண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், லண்டன் நகரம் தயாராகிவிட்டது.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி, வரும் 2012, ஜூலை 27ல் துவங்க உள்ளது. இதன் துவக்கவிழாவுக்கு ஒரு ஆண்டுக்கும் சற்று குறைவான நாட்களே உள்ளன.

இந்தியாவில் கொமன்வெல்த் போட்டி ஆரம்பிக்க ஒரு வாரத்துக்கு முன் கூட பணிகள் நடந்து கொண்டிருந்ததை போல இல்லாமல், இப்போதே லண்டன் தயாராகி விட்டது. கட்டுமானப்பணிகள் 90 சதவீதம் வரை முடிந்துள்ளன.

சமீபத்தில் ரூ. 1952 கோடியில் தயாரான நீச்சல் மைதானத்தை திறந்து வைத்த, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஜாக்ஸ் ரோகி கூறியதாவது,

எனது வாழ்க்கையில் பல மைதானங்களை பார்த்துள்ளேன். ஆனால், இந்த நீச்சல் மைதானத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விட்டேன். அந்தளவுக்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதேபோல மற்ற மைதானங்களின் வேலையும் நிறைவடையும் நிலையில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில், குறித்த “பட்ஜெட்டில்’, சிறந்த தரத்தில் உருவாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

துவக்கவிழா நடக்கும் 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானம், 2012 மார்ச்சில் தயாராகிறது. இதில் தடகள பாதைகள் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிவுற்று, சோதனை ஓட்டம் துவங்கவுள்ளது. 17 ஆயிரம் வீரர்கள் தங்கும் வகையிலான ஒலிம்பிக் கிராமம், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைகிறது.

சமீபத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் லண்டன் மக்களை சற்று கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இது குறித்து தேசிய ஒலிம்பிக் பாதுகாப்புக் குழுவில் இணை இயக்குநர் கிறிஸ் அல்லிசன் கூறுகையில், “பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம், இருப்பினும் அவற்றை முறியடிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.

கடந்த 2008 ஒலிம்பிக், சீனாவின் பீஜிங்கில் நடந்த போது, பிரமாண்ட மான துவக்க விழாவை பார்த்து உலகமே வியந் தது. இதனால் லண்டன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது. ஆனால், துவக்கவிழா குறித்து எவ்வித தகவல் களையும் தெரிவிக் காமல், ரகசியம் காத்து வருகின்றனர்.

தவிர, “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற படத்துக்காக ஆஸ் கர் விருது வென்ற இயக்குநர் டேனி போயல் தான், நிகழ்ச்சி தொகுப்பாள ராக செயல்பட்டு வருவதாக தெரிகிறது இத்துடன் இந்தியர்கள் மட்டுமன்றி உலக மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், துவக்கவிழாவுக்கு இசையமைக்கின்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில சுவாரஸ்ய தகவல்கள்

லண்டன் ஒலிம்பிக் நடத்த தேவையான மைதானங்கள் கட்டுவது, புதுப்பித்தல் பணிகள் என, போட்டிக்கு தயாராவதற்கு மட்டும் ஆன செலவு ரூ. 66,225 கோடியாம்.

*உதைபந்து, டென்னிஸ் உட்பட மொத்தம் 26 வகையான போட்டிகள் இம்முறை இடம்பெறுகின்றன.

*ஒலிம்பிக் கிராமத்துடன் சேர்த்து, மொத்தம் 32 இடங்கள் போட்டிக்கு தயாராகின்றன.

*200 நாடுகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளன.

*5000க்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

*இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திகள் சேகரிக்க, நேரடி ஒலிபரப்பு செய்ய என ஊடகங்களைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று தெரிகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்: ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

Post by ஹம்னா on Mon 1 Aug 2011 - 9:18

:”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்: ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

Post by jasmin on Mon 1 Aug 2011 - 9:33

நல்ல செய்தி ஆனால் ஒரு விளையாட்டு நிகழ்சி நடத்த இவ்வளவு செலவு ஆர்பாட்டங்கள் தேவையா ....எத்தனையோ நாடுகளில் மக்கள் அடிப்படை வசதிக்கு தேவையான கட்டமைப்பு இல்லாமல் கஷ்டப் படும் நிலையைப் பார்க்கிறோம் சோமாளியா போன்ற நாடுகளில் மக்கள் பட்டினியாலும் மருத்துவ உதவி இல்லாமலும் மடியும் அபாயம் உள்ளது .வளர்ந்த நாடுகள் அவர்களின் இந்த ஆடம்பரத்தைக் குறைத்து இன் நாடுகளுக்கு உதவ முன் வரவேண்டும் .
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்: ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

Post by நண்பன் on Mon 1 Aug 2011 - 9:35

jasmin wrote:நல்ல செய்தி ஆனால் ஒரு விளையாட்டு நிகழ்சி நடத்த இவ்வளவு செலவு ஆர்பாட்டங்கள் தேவையா ....எத்தனையோ நாடுகளில் மக்கள் அடிப்படை வசதிக்கு தேவையான கட்டமைப்பு இல்லாமல் கஷ்டப் படும் நிலையைப் பார்க்கிறோம் சோமாளியா போன்ற நாடுகளில் மக்கள் பட்டினியாலும் மருத்துவ உதவி இல்லாமலும் மடியும் அபாயம் உள்ளது .வளர்ந்த நாடுகள் அவர்களின் இந்த ஆடம்பரத்தைக் குறைத்து இன் நாடுகளுக்கு உதவ முன் வரவேண்டும் .
நீங்கள் சொல்வது நடக்கும் ஆனா நடக்காது {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒலிம்பிக் போட்டிக்கு லண்டன் தயார்: ஏ.ஆர். ரஹ்மான் துவக்க விழாவுக்கு இசையமைக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum