சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

வாழ்வில் புதிய வழிகளை காண்பிக்கும் மொழிகள்

View previous topic View next topic Go down

Sticky வாழ்வில் புதிய வழிகளை காண்பிக்கும் மொழிகள்

Post by உதுமான் மைதீன். on Sat 1 Jan 2011 - 15:16

மனித நாகரீக வளர்ச்சியில், உலகளாவிய சமூகத் தொடர்புகளில் மொழியே முதன்மையான இடம்பெறுகிறது.





ஒருவருக்கு எத்தனை மொழிகள்
தெரிகிறதோ, அந்தளவிற்கு அவரின் வெற்றி சமூகத்தில் உறுதிசெய்யப்படுகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை, வேற்று மொழிகளை கற்கும் ஆர்வம் உலக மக்களிடையே
அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அபரிமித விஞ்ஞான வளர்ச்சியும், உலகளாவிய
பொருளாதார தாராளமயமாக்கலும் வேற்றுமொழி பயிலும் ஆர்வத்தை தூண்டுவதோடு,
அதன் அவசியத்தையும் அதிகரிக்கின்றன.
பல மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் ஒருவர்,
* பலவித கலாச்சாரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடிவதோடு, புதிய புரிந்துணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
* மற்ற மக்களின் சட்ட-திட்டங்களை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
* கற்றல் திறன் மற்றும் விசால மனப்பான்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
* சர்வதேச பயணங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும், மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள முடியும்.
* வேறு நாட்டு மக்களுடன் அவர்களின் மொழியிலேயே உரையாடுவதால், அவர்களது அன்பையும், நன்மதிப்பையும் பெற முடியும்.
* வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எளிதாக இடம்பிடிக்க முடியும்.
* பல நாட்டு நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளை படித்து பயன்பெற முடியும்.
இத்தகைய பரந்தளவிலான பயன்களோடு, அதிக சம்பளம் பெறக்கூடிய பல வேலைவாய்ப்புகளையும் பெறலாம்.
அவை,
* வெளிநாட்டு தூதர்கள்
* மொழிபெயர்ப்பாளர்கள்
* சுற்றுலா வழிகாட்டிகள்
* விமான பணிப்பெண்கள்
* ஹோட்டல் வரவேற்பாளர்கள்
* பயண மேலாளர்கள்
* சர்வதேச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகள்
* மொழி ஆசிரியர்கள்
* விளம்பர பணியாளர்கள்
* சர்வதேச சந்தை பணியாளர்கள்
போன்றவை.
பொதுவாக வெளிநாட்டு மொழி என்றாலே ஆங்கிலம் தான் நமக்கு முதலில்
நினைவுக்கு வரும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டாலே உலகளவில் அனைத்தையும்
சமாளித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அது தவறு.
ஏனெனில் உலக மக்கள் தொகையில் ஆங்கிலம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 25%
-க்கும் குறைவாகவே இருக்கிறது.
சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள், பல தென்அமெரிக்க
நாடுகள், ஐரோப்பாவின் பல நாடுகள், ஆப்ரிக்காவின் பல நாடுகள் போன்றவற்றில்
ஆங்கிலத்தை வைத்து சமாளிக்க முடியாது. மேலும் அதுபோன்ற நாடுகளின்
பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு, அந்நாட்டு மொழியறிவை சோதிப்பதற்கான
தகுதித்தேர்வில் நீங்கள் தேறியாக வேண்டும். இதன்மூலம் ஆங்கிலம் தவிர்த்த
பிற மொழிகளின் முக்கியத்துவம் நமக்கு தெரியவருகிறது. அதேசமயம்
ஒவ்வொருவரும் ஆங்கிலத்தையும் ஒரு வெளிநாட்டு மொழியாக
தெரிந்துவைத்திருப்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்பதை
மறந்துவிடக்கூடாது.

புதிய மொழியைக் கற்றல்:
இந்தியாவில் பலரும்
குறைந்தபட்சம் 2 அல்லது 3 மொழிகளை பேசுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட
மொழிகள் தெரிந்திருப்பது, இன்னொரு புதிய மொழியை கற்றுக்கொள்வதை
எளிமையாக்கும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அனைவருமே வல்லவர்கள்
அல்ல. சிலர் விரைவாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்வார்கள். சிலருக்கு
தாமதமாகலாம். ஆனால் அனைத்திற்கும் மூலகாரணம் முயற்சியும், ஆர்வமும்தான்.
ஒரு மொழியின் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், இலக்கணம் போன்ற
அம்சங்களில் எப்போதுமே ஆர்வம் இருக்க வேண்டும். மேலும் பிறர் பேசுவதை
ஆர்வத்துடன் கவனிப்பது மிகவும் முக்கியம். புதிய வார்த்தைகளுக்கான
அர்த்தங்களை விடாமல் முயற்சிசெய்து தெரிந்துகொள்வது, அம்மொழியிலுள்ள
புத்தகங்களை தொடர்ந்து படிப்பது, அம்மொழி பேசும் நபர்களுடன் ஆர்வமுடன்
அடிக்கடி உரையாடுவது, பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி போன்றவை ஒரு புதிய
மொழியில் உங்களை வல்லவராக்கும்.
மேலும் ஒரு மொழியை கற்பதில் உங்களின் திறனை சோதிக்க
எம்.எல்.ஏ.டி.(நவீன மொழி திறனாய்வு தேர்வு) போன்ற தேர்வுகள் உள்ளன. நாம்
ஏற்கனவே கூறியதுபோல், தங்களின் தாய்மொழியை மட்டுமே தெரிந்த நபர்களைவிட,
நம்மைப் போன்றவர்கள் புதிய மொழியை விரைவாகவும், எளிமையாகவும்
கற்றுக்கொள்ள முடியும். அது நமக்கு ஒரு கூடுதல் தகுதியே. எனவே இப்போதே
முயற்சியை தொடங்குங்கள்.
avatar
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

Sticky Re: வாழ்வில் புதிய வழிகளை காண்பிக்கும் மொழிகள்

Post by மீனு on Sat 1 Jan 2011 - 17:46

சிறந்த கட்டுரை நன்றி பகிர்வுக்கு!
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாழ்வில் புதிய வழிகளை காண்பிக்கும் மொழிகள்

Post by ஹனி on Sat 1 Jan 2011 - 19:11

:”@: :”@:
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: வாழ்வில் புதிய வழிகளை காண்பிக்கும் மொழிகள்

Post by *சம்ஸ் on Sat 1 Jan 2011 - 20:15

சிறந்த பதிவிற்க்கு நன்றி உதுமான் மைதீன் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வில் புதிய வழிகளை காண்பிக்கும் மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum