சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 22 Jan 2018 - 18:26

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கப்போகிறதாம் இந்தியா - அனலை நிதிஸ் ச. குமாரன்

View previous topic View next topic Go down

Sticky கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கப்போகிறதாம் இந்தியா - அனலை நிதிஸ் ச. குமாரன்

Post by நண்பன் on Sun 2 Jan 2011 - 15:11

கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரத்தை இந்தியாவிலிருந்து வழங்கப்போவதாக கூறியுள்ளது. கிரிட் பவர் (Power Grid Corporation of India Ltd). சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் அதிகரித்துவரும் வேளையில் இவ்வாறான செயற்பாடுகளினால் இந்தியா தனது பலத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்....
...என கருதியோ என்னவோ இப்படியான மிகவும் பண மற்றும் பொருள் செலவிலான திட்டத்தை கிரிட் பவர் மூலமாக செய்யலாம் என்று எண்ணுகிறது போலும். இந்தியாவின் முன்னணி நிறுவனமான கிரிட்பவர் சிறிலங்காவின் மின்சார சபையுடன் இணைந்தே இத்திட்டத்தை 2014-இல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக கூறியுள்ளது.

தனது இருப்பை இந்திய உபகண்டத்தில் நிலைநாட்ட படாதுபாடு பட்டுக்கொண்டிருக்கிறது இந்தியா. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்திய உபகண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில வருடங்களாக மேலோங்கியுள்ளது. சீனா ஏற்கனவே இந்து சமுத்திரத்தை அண்டிய பல நாடுகளுடன் நட்புறவை பேணிவருவதுடன், சில நாடுகளில் தனது இருப்பை நிலைநிறுத்தியும் விட்டது. இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ்தானுடன் பல இராணுவ ஒத்துழைப்புக்களையும் சீனா அளிப்பதுடன் சிறிலங்கா, மாலைதீவு, மியன்மார் போன்ற நாடுகளில் துறைமுகங்களை அமைத்துக் கொடுத்துள்ளதுடன் பல இராணுவ உதவிகளையும் செய்கிறது. இவைகள் அனைத்தும் இந்தியாவினால் சகித்துக்கொள்ளத்தக்க விடயங்கள் அல்ல. சீனாவுடன் நேரடியான முறுகல் நிலையை இந்தியா மேற்கொள்ள விரும்பவில்லை.

சீனாவுடன் இணைந்தே இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்கிற கருத்து பரவலாக இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களினால் அடித்துக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவெனில் சீனா இன்று பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பதுடன், மேற்கத்தைய நாடுகளுடன் போட்டிபோட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவருகிறது. ஆகவே, இந்தியாவும் சீனாவுடன் இணைந்து பயணிப்பதனூடாக இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம் என்கிற கருத்து இந்தியத் தரப்பால் முன்வைக்கப்படுகிறது. சீனாவுடன் முறுகல் நிலையை இன்னும் பல காரணங்களுக்காக இந்தியா தவிர்த்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடாகி விடவேண்டும் என்கிற ஆசை பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்கு வந்துவிட்டது. தானேதான் தெற்காசியாவின் வல்லரசு என்கின்ற உணர்வை உலக சமூகத்திடம் முன் வைக்க இந்தியா விளைகிறது. இந்தியாவின் கனவு நனவாக்கப்பட வேண்டுமாயின் அனைத்துத் துறைகளிலும் வளம்பெறுவதுடன், பிற நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணுவது மட்டுமல்லாமல் இந்து சமுத்திரம் தனது நேரடி பாதுகாப்பிலேயே இருக்க வேண்டுமென்று நினைக்கிறது இந்தியா. இக்கனவு நிறைவேற்றப்பட வேண்டுமாயின் சீனாவின் ஆதரவு இந்தியாவுக்கு தேவை. எது எப்படியாக இருந்தாலும் தனது ஆளுமைக்குட்பட்ட இடங்களிலிருந்து சீனாவை துரத்தவே இந்தியா மறைமுகமாக பல திட்டங்களை தீட்டி செயற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றது.

மின்சாரம் வழங்கப்படும் திட்டம் தேவைதானா?

இந்தியாவிற்குள்ளேயே மின் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு மின்விநியோகம் செய்யப்போவதாக கூறியிருப்பது நகைப்புக்கிடமானதாக உள்ளது. இந்தியாவில் 17 சதவிகித மின் பற்றாக்குறை என்பது நீடித்துவரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதே இந்தப் பற்றாக்குறை இருக்கிறது. இப்படியிருக்கையில், சிறிலங்காவிற்கு ஏன் மின்சாரம் வழங்க வேண்டும் என்கிற கேள்வி பல இந்திய மக்களிடம் எழுகிறது.

இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடைப்பட்ட 50 கி.மீ. தூர கடல் பகுதியில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணியால் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் பாதிப்பிற்குள்ளாகும். இங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து விடும். சேதுசமுத்திரக் கால்வாய் அமைப்பதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அது அத்தனையும் இந்த மின்சாரத் திட்டத்திற்கும் பொருந்தும். பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு வரை 160 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களும், அரிய பவளப் பாறைகளும், அவற்றின் மூலமாக உருவான 21 குட்டித் தீவுகளும் உள்ளன. 1986-ம் ஆண்டு இப்பகுதியை தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா என அறிவித்த தமிழ் நாடு அரசு, பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கி இதனைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் இவையெல்லாம் என்னவாகும் என்று கேட்கின்றனர் பலர்.

மின் பகிர்மானத்தின்போது சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் அதன் விளைவுகள் அப்பகுதியிலுள்ள மீனவர்களை கடுமையாக பாதிக்கும். அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படலாம். மீனவர்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறாக பல பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

கடலுக்கு அடியால் மின்சாரத்தை விநியோகிப்பதை இந்தியா முன்பு எப்போதும் செய்ததில்லை. இப்படியான விநியோகம் என்பது பல வளர்ந்த நாடுகளில் சர்வ சாதாரணமாக இடம்பெறுகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இப்படியான செயல்முறைகள் நடைமுறையில் இருக்கிறது. நிலப்பரப்பினூடாக மின்சாரத்தை வழங்குவதென்பது சுலபம். கடலுக்கடியால் அதைச் செய்வதென்பது கடினம். அதுமட்டுமன்றி சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் பல பக்க விளைவுகளை உருவாக்கிவிடும். ஆகவே, கடலுக்கடியால் மின்சாரத்தை இன்னொரு நாட்டுக்கு குறிப்பாக சிறிலங்காவுக்கு வழங்குவதென்கிற திட்டம் தேவையில்லாததொன்றே.

குறித்த திட்ட ஆலோசனை நகலை இந்திய மத்திய அரசுக்கு ஒரு மாத காலத்திற்குள் அளிக்கப்படும் என்று கூறுகிறது கிரிட் பவர். மத்திய அரசு சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டை செய்துகொண்ட பின்னர்தான் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறுகிறது கிரிட் பவர். பல அழிவுகளுக்கு வித்திடும் இப்படியான திட்டத்தை இந்திய மத்திய அரசு எப்படி கையாளும் என்பது இந்தியாவின் அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தலைவர்களின் செயற்பாடுகள் மூலமாகத்தான் இருக்கும். கடும் எதிர்ப்புக்கள் இந்திய மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டால் இத்திட்டம் கைவிடப்படலாம். இதன் வெற்றி தோல்வி என்பது அரசியல், சுற்றுச்சூழல், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகளில்தான் தங்கியுள்ளது.

இந்தியா மறைமுகப் போரையே சீனாவுடன் மேற்கொள்கிறது

இந்திய உபகண்டத்தில் சீனாவை அனுமதிக்க முடியாதென்கிற இந்தியாவின் கொள்கை இப்போது செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. தனது நாட்டுக்குள்ளேயே மின்சாரத்தை சரிவர வழங்க முடியாமல் தவிக்கும் இந்தியா அயல் நாடுகளுக்கு மின்சாரத்தை வழங்குவதென்பது பல சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். தனியாரின் ஆதிக்கத்தை சிறிலங்கா அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. மருத்துவர் செட்டியாரினால் கொழும்பில் கட்டப்பட்ட அப்பலோ மருத்துவமனைக்கு நடந்த கதி என்ன என்பது பலருக்குத் தெரிந்த விடயமே. மருத்துவமனையை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அவ் மருத்துவமனையை தனக்கு வேண்டப்பட்ட நிறுவனமூடாக சிறிலங்கா கையகப்படுத்திக்கொண்ட விடயமானது மருத்துவர் செட்டியாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது போன்ற சம்பவங்களே மற்ற நிறுவனங்களுக்கும் சிறிலங்காவில் நடக்கும்.

இந்தியா தனது திட்டங்களை நிறைவேற்ற சிறிலங்காவை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும். இதனூடாக சீனாவை விரட்டலாம் என்று கருதுகிறது இந்தியா. இவற்றைச் செய்வதற்கு சிறிலங்காவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு. இதற்காகத்தானோ என்னவோ கடந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் பல உடன்பாடுகளில் சிறிலங்கா அரசுடன் கைச்சாத்திட்டுவிட்டு சென்றுள்ளார் போலும். தற்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிலங்காவுக்கு கட்டிகொடுத்து தனது இருப்பை சீனா எப்படி நிலைநாட்டியுள்ளதோ, அப்படியான நிலையையே வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியா செய்ய முற்படுவதானது இந்தியா ஒரு போதும் சீனாவை தமிழர் பகுதிகளில் காலூன்ற விடாது என்பதையே காட்டுகிறது.

ஏழு பேர் கொண்ட குழுவுடன் சிறிலங்கா வந்தடைந்த பிரதீப் குமார் சிறிலங்காவில் பணியாற்றிய வேளையில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலியும் செலுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்தில் எத்தகைய ஆயுத, பயிற்சி உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விடயங்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கும் பிரதீப் குமாருக்கும் இடையிலான சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் ஏவுகணைகள் மற்றும் ராடர்களையும் இந்தியா சிறிலங்காவுக்கு அன்பளிப்புச் செய்யும் என்று அறிவிக்கபட்டது. இவைகள் அனைத்தையும் பார்க்கும்போது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த லஞ்சமாக இந்தியாவினால் சிறிலங்காவுக்கு வழங்கப்படுகிறது என்றே கருதவேண்டியுள்ளது. படுதோல்வியான நாடாக கருதப்படும் சிறிலங்காவை ஆட்சி செய்யும் அரசு அனைத்துப் பகுதியினருடனும் சேர்ந்து முடிந்தளவு பண மற்றும் பொருளுதவிகளை பெற்று குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களாவது ஆட்சி செய்வதனூடாக சிங்கள மக்களிடம் ஆதரவைப்பெற்று மீண்டுமொரு தேர்தலை நடாத்தி வெற்றி பெற்றுவிடவேண்டும் என்று இப்போதிலிருந்தே ஆயத்தங்களை செய்கிறது போலும்.

சிறிலங்காவில் பலமாக காலூன்றியுள்ள சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து சிறிலங்காவில் சிறிய மின்சார உற்பத்திக்காக அணு மையம் ஒன்றை நிறுவவுள்ளன. அண்மையில் இந்தியா சென்ற ரஷ்ய அதிபர் மற்றும் இந்திய பிரதமருக்கும் இடையிலான உடன்படிக்கையில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமையை ரஷ்யாவும் தமக்கு பாதகமாகவே கருதுகிறது. இந்தநிலையிலேயே இலங்கையிலும், பங்களாதேஸிலும் அணு மையங்களை நிறுவ இந்தியாவும் ரஷ்யாவும் இணங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வரும் செய்திகளை அறியும்போது இந்தியா தொடர்ந்தும் சீனா விடயத்தில் மௌனம் காக்கப்போவதில்லை என்கிற நிலையை கொண்டுள்ளதாகவே உணர முடிகிறது. இரத்தம் சிந்தாமல் மாபெரும் போரையே நடாத்தி இந்திய உபகண்டம் உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்திலிருந்தே சீனாவை விரட்டியடிப்பதே இந்தியாவின் திட்டம். இதற்காகத்தான் சிறிலங்காவுக்கு அளிக்கப்படும் மின்சார விநியோகம் மற்றும் அணு மையம் நிறுவப்படும் நிகழ்வுகள்.

தனது திட்டங்களை நிறைவேற்ற பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவானாலும் செலவுசெய்ய தயாராக இருக்கிறது இந்தியா. இதனால் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் இருக்கும் மக்களும், கடல் உயிரினங்களின் வாழ்வியல் சூழல்களும்தான் பாதிப்பிற்குள்ளாகும். இங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து விடும். தமது அதிகாரங்களை நிலைநாட்ட ஆட்சியாளர்கள் எதையும் செய்ய முன்வருவார்கள். இவர்களின் செயற்பாட்டை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு எதிர்ப்புக்களை எழுப்புவதனூடாக ஆட்சியாளர்களின் திட்டங்களை முளையிலையே பிடுங்கி எறிந்துவிட முடியும்.

nithiskumaaran@yahoo.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கப்போகிறதாம் இந்தியா - அனலை நிதிஸ் ச. குமாரன்

Post by ஹனி on Sun 2 Jan 2011 - 17:39

:”@: :”@:
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum