சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

மது உண்ட கருவண்டு பறந்தது

View previous topic View next topic Go down

Sticky மது உண்ட கருவண்டு பறந்தது

Post by jasmin on Tue 16 Aug 2011 - 13:03

ஓ எனக்கு அந்த கல்லூரியில் இடம் கிடைத்தது என்பது வீட்டில் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி .பத்தாம் வகுப்பில் பெயில் ஆன நான் +2 தேர்வில் அதிக மதிபெண் பெற்று தேறி இருந்தேன் .அதிலும் தமிழ் பாடத்தில் 192/200 க்கு வாங்கி இருந்தேன் .என் தந்தைக்கு அதனால் பெருமை .என் +2 மார்க்கைப் பார்த்த அனைவரும் ஆச்சர்யப் பட்டு போனார்கள்.

என் பெயர் மேரி ஃப்லோரா எல்லோரும் மேரி என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்.மலர்களைப் போல் மென்மையாக இருப்பேன் .யாரிடமும் அதிகம் பேச மாட்டேன் .எப்போதும் அமைதியாக இருப்பேன்.ஆனால் மனதில் ஆசைகள் அதிகம் .ஊம குசும்பு என்று சொல்வார்களே அது நாந்தான் .

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் என் சொந்த ஊர் .அப்பா போஸ்ட்மாஷ்டர் .அப்பா பல ஊர்களுக்கு மாற்றலாகிப் போனாலும் குடும்பத்தை ஊரிலேயே வைத்து இருந்தார் .

அம்மா கவுஷ் வைஃப் வீட்டில் அடுப்பங்கரையே கதி என்று கிடக்கும் பரிதாபமான ஜீவன் .எனக்கு சொல்லிக்கொள்ளும் அளவு நண்பிகள் இல்லை.இருந்த ஓரிரு நண்பிகளும் பிழைப்பு நாடி குடும்பத்தோடு சென்னை அங்கு இங்கு என்று சென்று செட்டில் ஆகி விட்டார்கள்.

கல்லூரி கார்டை எடுத்துகொண்டு என்னை அழைத்துப் போய் அப்பா அந்த கல்லூரியில் என்னை சேர்த்து விட்டார்.எங்கள் கிராமத்தில் இருந்து 15 மைல் தூரத்தில் இருந்தது அந்த கல்லூரி .பல பஸ் வசதி எங்கள் கிராமத்தில் இருந்து அந்த கல்லூரிக்கு இருந்தது.

எங்கள் கிராமத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் டவுன் பஸ்ஸிலும் மற்ற ரூட் பஸ்ஸிலும் கல்லூரிக்கு செல்ல முடியும் . நான் சேர்ந்து இருப்பது பெண்கள் கல்லூரி ஆனதால் அப்பாவிடம் இருந்து அவ்வளவு அட்வைஸ் இல்லை.பார்த்து படித்து கல்லூரியிலும் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்.

எனக்கு கல்லூரி செல்லும் பெண்களில் கூட தோழிகள் அதிகம் ஒட்டவில்லை.எப்போதும் புத்தகத்தை புறட்டிக்கொண்டு இருப்பதால் சரியான புத்தக பூச்சி என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.இதனால் நான் தனியாகவே கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்தேன்

கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்லும் வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் முதலில் நான் அதில்தான் சென்று வந்தேன் .மெயின் ரோட்டில் இருந்து இறங்கி 1 மைல் நடந்து செல்ல வேண்டும் .பஸ்ஸில் மொத்தமாக போனாலும் நடந்து போகையில் நான் தனியாகத்தான் போவேன் .அப்போதுதான் அவனைப் பார்த்தேன் .ஒரு மர நிழலில் நின்று கொண்டு என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான் .

கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தான் .அவன் என்னைப் பார்ப்பதால் நான் தலையைக் குனிந்துகொண்டு அவனை கடந்து செல்வேன் .இருந்தாலும் தினமும் அந்த இடத்தைக் கடக்கும்,போது அவன் நிற்கிறானா என பார்க்க ஆவலாக இருந்தது.அவனும் நின்றான்.அவன் கண்களில் தெரிந்த காதல் எனக்கு புறிந்தது அதனால் பயமும் வந்தது.

ஆண்டவ்ரே இது என்ன சோதனை .என்னை நான் கட்டுப் படுத்த முயன்றேன் .ஆனால் என் கருத்தும் கண்ணும் அதைக் கேட்க மறுத்தன.மனம் படபடவென அடித்துக்கொண்டது .இதை யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் வழக்கமாக வரும் பஸ்ஸை தவிர்த்து அடுத்த வண்டியில் தனியாக வந்தேன் .

என் தனிமையை தவறாக புறிந்த அவன் என்னைக் கண்டு புன்முறுவள் பூத்தான் .ஒரு காகித சுருளை என்னை நோக்கி வீசினான் . நான் அதை எடுக்காமல் அவனை தாண்டி வந்தேன் .இருந்தாலும் அதில் அவன் என்ன எலுதி இருப்பான் என அறிய மனம் துடித்தது.எனவே கிடைத்த ஓய்வு வகுப்பில் வேகமாக சென்று அதை எடுத்து வந்து படித்தேன் .

அதில் என் மனம் கவந்த மங்கையே உன் மலர்பெயர் என்ன? என்று மட்டுமே இருந்த்து ..கீழே அருண் என்ற பெயர் இருந்தது.அழகான அவன் கையெழுத்து என்னக் கவர்ந்தது.அடுத்த நாள் அவன் என் பின்னால் வந்தான் என் அருகில் வந்து ஹலோ உங்க பெயர் என்ன என்றான் , நான் பதில் சொல்லாமல் வேகமாக வந்துவிட்டேன் .இப்படியே ஒரு மாதம் நடந்தது .இறுதியில் என் மனம் இளகியது .

ஏன் பதில் சொன்னால் என்ன அவனால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தேன் .அடுத்த நாள் அவன் கேட்ட கேள்விக்கு மெல்ல பதில் சொன்னேன் ..மேரி ஃப்லோரா ..அதைக்கேட்ட அவன் முகம் 1000 வாட்ஷ் பல்ப் போல் மலர்ந்தது.தாங்ஷ் என்றான் .

அடுத்த நாள் ஒரு காகித சுருளை கையில் திணித்தான் .அதில் அருண் ..வயது 25 படிப்பு பி காம் ..வேலை இல்லை ..அப்பா சொந்த தொழில் செய்கிறார் என்று எழுதி இருந்தது.எனக்கு சிரிப்பு வந்தது.இவன் என்ன நம்மிடம் வேலையா கேட்கிறான் என்று நினைத்து இல்லை நான் மாப்பிள்ளை பார்க்கிறேனா இவன் சுய சரிதம் பாட ....

அடுத்த நாள் என்னைப் பற்றிக் கேட்டான். நான் என்னைப்பற்றி எல்லாம் எழுதி ஒரு பொய் மட்டும் அதில் வைத்துக்கொடுத்தேன் .அதைப் படித்த அவன் சோர்ந்து போனான் .என்ன உங்களுக்கு நிச்சயம் ஆகி விட்டதா என்று ஆச்சர்யமாக கேட்டான் . நான் ஆமாம் என்றேன்.

ஏன் நாம் நல்ல நண்பர்களாக பழககூடாதா என்றேன் ..அவனும் ஒத்துக்கொண்டான் .அன்று முதல் இருவரும் சகஜமாக பழக ஆரம்பித்தோம் .அது இருவரும் சகஜமாக மணிககணக்கில் கல்லூரிக்கு பின்னால் இருந்த பூங்காவில் அமர்ந்து அரட்டை அடிக்கும் அளவு வளர்ந்தது .ஒரு நாள் பேச்சோடு பேச்சாக எனக்கு நிச்சயம் ஆகாத விஷயத்தை அவனிடம் போட்டு உடைத்தேன் .

அன்று முதல் அருண் உரிமையாக என்னை தொட்டுப் பேச ஆரம்பித்தான் .முதலில் நெறுடலாக இருந்த அவன் தொடுதல் போகப் போக எனக்கு தேவையாக இருந்தது.ஒரு நாள் கல்லூரியை கட் அடித்து விட்டு என்னை சினிமாவுக்கு அழைத்துப் போனான்.போகும் வழியில் ஒரு மஞ்சள் நிற வண்ண வீட்டைக் காட்டி இதுதான் எங்கள் வீடு என்றான் .

அதுவரை தொட்டு மட்டும் பேசிக் கொண்டு இருந்த அருண் சில நேரம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான் அவனை தடுக்க நினைத்தாலும் பல நேரங்களில் என் கைகள் தடுக்க தெம்பு இழந்து போயின.அவனின் நெறுக்கத்தின் பயனாய் ..என்னை கைவிடாமல் திருமணம் செய்து கொள்வாயா என்றேன் .என் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்த அவன் ...ஃப்லோரா உன்னை மணப்பது என் பாக்கியம் என்று வசனம் பேசினான்.அதைக் கேட்ட என் பேதை மனம் மகிழ்ந்து போனது.

ஒரு நாள் என்னை அவன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஒரு வீட்டிற்கு அருண் அழைத்துப் போனான்.அங்கு யாரும் இல்லை ஃப்லோரா இது என் நண்பனின் வீடு .. நம் திருமணத்திற்கு பின்னால் இங்குதான் தங்க போகிறோம் என்று வீட்டை சுற்றீக் காட்டினான் .வீடு சின்னதாக இருந்தாலும் அழகாய் இருந்தது .

அவனோடு அந்த வீட்டில் குடித்தனம் செய்வதாய் கற்பனையில் இருந்த என்னை கொஞ்சம் கொஞ்சமாக அருண் வசியம் செய்தான் .வெளியில் பெய்த மழையும் இளமயின் தனிமையும் காமத்தின் மயக்கமும் என்னை அருணிடம் அன்று இழக்க வைத்தது.இழந்தபிறகு நம்மை கட்டிக்கொள்ள போகிறவ்ந்தானே என்று மனம் ஆறுதல் சொன்னது.

அப்பாவை சரிக்கட்டி எப்படி அருணை மணப்பது என்று திட்டமிட ஆரம்பித்தேன்.அருணிடமும் அடுத்த இரண்டு நாள் அடிக்கடி திருமணத்தை எப்படி செய்வது என்றே பேச ஆரம்பித்தேன்.இரண்டு நாள் சகஜமாக வ்ந்த அருண் மூன்றாம் நாள் வரவில்லை.

சரி ஒருவேளை உடம்பு சரியாக இலலாமல் இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.ஆனால் அடுத்த ஒரு வாரம் அருண் வ்ரவே இல்லை.

எனக்கு சிறிது சந்தேகம் வந்தது ..அன்று அருண் காட்டிய அடையாளத்தை வைத்து அவன் காட்டிய மஞ்சள் நிற வீட்டை நோக்கி ஓடினேன்.வீடு பூட்டி இருந்தது.

பக்கத்தில் இருந்த மளிகை கடையில் வீட்டைப்பற்றி விஷாரித்தேன் ..ஓ அவர்களா நேற்றுத்தான் வீட்டை காலி செய்துகொண்டு சென்னை போனார்கள் என்று சொன்னார்கள்.எனக்கு தலை சுற்றி மயக்கமே வந்தது.தளர்ந்த நடையுடன் தள்ளாடியவாறு நடந்தேன். ஆம் மது உண்ட கருவண்டு பறந்து விட்டது......
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by kalainilaa on Tue 16 Aug 2011 - 14:09

இன்றைய பெண்களின் நிலை உங்கள் கதை !

ஒவ்வெரு வரிகளும் ஏதோ ஒரு ஊரில் இன்னும் நடந்தும் ,நடந்துக் கொண்டும் உள்ளது !

உங்கள் கதைகள்,நிஜத்தின் ,நிழல்!
தொடருங்கள் .இன்னும் படிக்க காத்திருக்கிறோம் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by ஹம்னா on Tue 16 Aug 2011 - 15:44

தன்னிலை மறப்பவர்களின் நிலை இதுதான்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by பர்ஹாத் பாறூக் on Tue 16 Aug 2011 - 16:05

ஆம் மது உண்ட கருவண்டு பறந்து விட்டது......
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 10:56

அட பாவமே முடிவே சரி இல்லையே பாவம் அந்த மது வண்டிடம் பறி போய் விட்டது இனி அந்த மதுவின் நிலை???????

கதை அருமையாக இருந்தது மேடம் தொடருங்கள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by jasmin on Wed 17 Aug 2011 - 10:58

சும்மா படுச்சிட்டு சப்புக்கொட்டிவிட்டு போய்ட்டா போதுமா மதிப்பீடு எங்கே நண்பரே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 11:00

jasmin wrote:சும்மா படுச்சிட்டு சப்புக்கொட்டிவிட்டு போய்ட்டா போதுமா மதிப்பீடு எங்கே நண்பரே
உங்க கதைகளை நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு நிங்கள்தான் மதிப்பீடு தர முடியும் தோழி பாருங்கள் thanks என்ற பட்டன் அழுத்தினால் எங்களுக்கு மதிப்பீடு கூடும் அப்படித்தான் உங்களுக்கும் கிடைக்கிறது நீங்களும் யாருக்காவது கொடுங்கள் அப்பதான் உங்களுக்கும் கிடைக்கும் நன்றி தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by jasmin on Wed 17 Aug 2011 - 11:03

அப்படியா அந்த பட்டன் எங்கே இருக்கிறது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 11:07

jasmin wrote: அப்படியா அந்த பட்டன் எங்கே இருக்கிறது
thanks மேற்கோள் என்று உள்ளது அங்கு thanks click பண்ணுங்க மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by jasmin on Wed 17 Aug 2011 - 11:57

உங்கலுக்கும் அலுத்தி விட்டேன் நண்பரே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 13:17

jasmin wrote:உங்கலுக்கும் அலுத்தி விட்டேன் நண்பரே
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by யாதுமானவள் on Wed 17 Aug 2011 - 21:00

சாதாரண கதைதான். அனால் சொன்ன விதம் நன்றாக உள்ளது.


வாழ்த்துக்கள்!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: மது உண்ட கருவண்டு பறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum