சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க

Post new topic   Reply to topic

Go down

Sticky புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க

Post by முனாஸ் சுலைமான் on Sat 20 Aug 2011 - 19:37

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நிலவிய அச்சமான சூழ்நிலையை விடவும் தற்போது கிறீஸ் பூதம் என்ற பிரச்சினையால் மக்கள் அதிகம் அச்சமடைந்துள்ளனர். எனவே, அரசாங்கம் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை காணாமல் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது. அரசியல் அழுத்தங்களால் பொலிஸாரும் சுயமாக செயற்படாமலும் இருக்கின்றனர். இதனால் தான் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

முஸ்லிம் எம்.பிகள் பலர் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த கிறிஸ்பூதம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் அவர்கள் முறையான பங்களிப்பை வழங்காதுள்ளார்கள்.

அமைச்சர்களுக்கு பிரச்சினையில்லை அவர்கள் மிகவும் பாதுகாப்பாக டிபண்டர் வாகனங்களில் செல்லுகின்றார்கள். அவர்களின் குடும்பங்களுக்கும் பிரச்சினைகள் இல்லை. நல்ல பாதுகாப்பு உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் இன்று அச்சமடைந்து பீதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த பிரச்சினையால் கிழக்கு மாகாணம் அதிர்ந்து போயுள்ளது. இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரமில்லாமல் தெற்கிலும் மலையகத்திலும் இந்த பிரச்சினையானது வியாபித்துள்ளது.

தொடர்ச்சியாக பெண்கள் மீதான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதனால் மக்கள் செய்வதறியாது அரசாங்கத்துக்கெதிராகவும் பொலிஸாருக்கெதிராகவும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிலர் பலியாகியுமுள்ளனர்.

இந்த அச்சமான சூழ்நிலையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு க.பொ.த உயர்தர மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையானது முஸ்லிம்களின் மத வழிபாடு மற்றும் கலாசார நடவடிக்கைகள் இயல்பாக மேற்கொள்வதற்கு தடையாக அமைந்துள்ளது என்றே கூறவேண்டும்.

இது பெரும் கட்டுக்கதை இதில் உண்மைத் தன்மை இல்லை என கூறி விட்டு சாதாரணமாக இருந்து விட முடியாது இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் இந்த அசம்பாவிதம் நீடிக்காமல் அதனை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். _
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க

Post by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 19:53

துரிதமான நடவடிக்கை எடுக்கவேண்டிய விடயம் இது
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க

Post by முனாஸ் சுலைமான் on Sat 20 Aug 2011 - 20:12

யாதுமானவள் wrote:துரிதமான நடவடிக்கை எடுக்கவேண்டிய விடயம் இது
நிச்சயமாக அக்கா ஆனால் இலங்கையில் அப்படித்தான் நடக்குது. இப்ப :!.:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum