சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Yesterday at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.

Go down

Sticky ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.

Post by Atchaya on Mon 12 Sep 2011 - 14:04

நன்றி தமிழ் உதயம்

ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.


ஸ்டூடியோவை விட்டு கார் வெளியே வந்த போது திடீர் என்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் சற்று நேரம் நின்றது. எதிர்த்தாற் போல் இருந்த பெட்டிக்கடையை மஞ்சு தற்செயலாக பார்த்தாள். சங்கர் நின்று கொண்டிருந்தான்.

இந்த மூணு வருஷத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிந்து போயிருந்தான். தாடி அடர்ந்திருத்தது. அவனது தோற்றத்தை வைத்தே அவனது வாழ்க்கை தரத்தை எடை போட்டு விட முடிந்தது. பஞ்சத்தில் அடிபட்டவன் போல் இருந்தான். மஞ்சு சங்கடமாக உணர்ந்தாள். சங்கரின் இடது கையில் ஒரு பெரிய சைஸ் நோட்... இப்போது யாரிடம் அசிஸ்டெண்டாக இருக்கிறானோ.

போக்குவரத்து நெரிசல் சரியாகி விட, கார் கிளம்பியது.
மஞ்சு இருக்கையில் சாய்ந்தாள். பக்கத்தில் இருந்த அம்மாவை பார்த்தாள். அம்மா கண்மூடி சரிந்து இருந்தாள். அநேகமாக தூங்கி இருப்பாள். அம்மாவால் சட்டென்று உறங்கி விட முடிகிறது. தன்னால் அவ்விதம் தூங்க முடிவதில்லை. தூக்கமும் வருவதில்லை. வெறுமனே கண்களை இறுக்க மூடினால், ஒன்று கண்கள் வலிக்கும் இல்லை, ஏதேனும் ஒரு ஞாபகம் வந்து இதயத்தை இம்சிக்கும்.

இனி இன்று முழுக்க என்னை சங்கரின் ஞாபகம் இம்சிக்கும் என்று தோன்றியது. சங்கரை பார்த்ததால் மட்டுமல்ல - பிரபலமாகாமல் போன ஆண்கள், துணை நடிகைகள் - இவர்களில் தெரிந்த முகங்களை பார்த்தால் அன்று முழுக்கவே நான் ஒரு மாதிரி ஆகி விடுகிறேன்.

அவர்களோடு என் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விடுவேன். விபத்து போல, அதிர்ஷ்டம் போல - நான் நடித்த சில படங்கள் ஓடி விடவே... மேலே, மேலே போய்விட்டேன். இந்த மூணு வருஷத்தில் ஒரு பங்களா, சில கார்கள் - இவற்றுக்கு சொந்தக்காரியாகி விட்டேன். இதெல்லாம் நடக்காமல் போயிருந்தால் நானும் சங்கர் மாதிரி தான் இருந்திருப்பேனோ. முன்னைக்கு இப்போது மெலிந்து போய், வாழ்க்கையை பற்றிய கவலையில் மனம் வெதும்பி கொண்டிருப்பேனோ. முக்கியமாய் இன்னும் சங்கரை காதலித்து கொண்டு இருப்பேனோ.

இருக்கலாம்.

அப்போது தான் நானும், அம்மாவும் நாகர்கோவிலில் இருந்து சினிமா சான்ஸ் தேடி சென்னைக்கு வந்து, அந்த காம்பௌண்டில் குடி இருந்தோம். காம்பௌண்ட் முழுக்க சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவு... நடிகனாக வேண்டும், டைரக்டராக வேண்டும் என்று. எல்லோரும் பேதமின்றி பழகினோம். அப்போது எல்லோரும் வாழ்க்கையின் ஒரே தட்டில் இருந்ததால் பேதம் இல்லை. பொறாமை இல்லை.

நான் குடியிருந்த போர்ஷனுக்கு எதிர்த்தாற் போல இருந்த போர்ஷனில் தான் சங்கர் குடி இருந்தான். மூன்று பேரே தங்கக்கூடிய அந்த சின்ன அறையில் ஆறு பேர் தங்கி இருந்தனர். எல்லோரும் என்னிடம் வந்து வலியப் பேசுவார்கள். என் அழகின் காரணமாக நெருங்கி இருக்கலாம். சங்கர் கூச்ச சுபாவி. அதிகமாய் பேச மாட்டான். அவனிடம் எல்லோரும் மரியாதையாக தான் பேசுவார்கள். பலரும் அவனை "நல்ல திறமைசாலி. பின்னாடி பெரிய ஆளா வருவான். இப்பவே காக்கா பிடிச்சு வைச்சுக்கணும்" என்பார்கள்.

ஆனால் என்ன ஆச்சரியம்... அந்த அறையில் இருந்த பல பேரில் சங்கரை தவிர்த்து எல்லோரும் இன்று சொல்லி கொள்ளும்படியான நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இரண்டு பேர் தங்கள் சொந்த ஊருக்கே போய் பிஸினஸ் செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருவன் காமிராமேனாகிவிட்டான். இரண்டொருவர் இயக்குனர்களாக.

சங்கர் மட்டும் எப்படி தோற்று போனான்? எப்படி நாங்கள் ஜெயித்தது விபத்து மாதிரியோ, அதே மாதிரி சங்கர் தோற்றுப்போனதும் ஒரு நம்ப முடியாத சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். சங்கர் நிச்சயம் ஜெயிப்பான் என்று அவனுடன் பழகிய காரணத்தால் - என்னால் நம்ப முடிந்தது.
அவன் எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு செய்வான். பிறரிடமும் அதையே எதிர்பார்ப்பான். அவனது இந்த மாதிரியான பல குணங்கள் என்னை கவர்ந்துவிடவே அவனை காதலிக்க துவங்கினேன்.

அவனது குணங்களுக்காக மட்டும் தான் அவனை காதலித்தேனா? யோசித்தால் அது பொய் என்பது தெளிவாகும். என்னை போல அவன் திறமைசாலி. அவன் ஜெயிப்பான். ஜெயித்தாலும் மற்றவர்களை போல தலைக்கனம் கொண்டு தூக்கி எறிய மாட்டான். அவனொடு என் வாழ்க்கை பிணைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று சுயநலத்துடன் தான் காதலித்தேன். ஆனால் நான் ஜெயித்து - தலைக்கனம் பிடித்து அவனை உதாசீனப்படுத்தி விட்டேன் என்பது தான் இன்றைய நிஜமாகிவிட்டது.

ஒரு நாள் என் காதலை அவனிடம் வெளிப்படுத்தினேன். அவன் என் காதலை ஏற்று கொண்ட பிறகு கேட்டான். "நமக்கு காதலிக்க என்ன தகுதி இருக்கு. ஊரில் இருந்து வரும் பணத்தில் நான் செலவு பண்ணிட்டு இருக்கேன். நீங்க ஒவ்வொரு நாளும் வாய்ப்பு தேடி தேடி களைச்சு போயிட்டு இருக்கீங்க. இப்ப நமக்கு காதல் அநாவசிய சுமை இல்லையா?"

"அப்படி ஏன் நினைக்கணும். நான் சோர்ந்து போகும்போது நீங்க ஆறுதல் சொல்லுங்க. நீங்க சோர்ந்து போகும் போது, நான் ஆறுதல் சொல்றேன். நாம வெற்றி பெறுவோம். நம் காதல் கல்யாணத்தில் முடியும்" என்றேன்.

அவன் கேட்டான். "நாம வெற்றி பெறுவோமா?"

"அதிலென்ன சந்தேகம்"

"இரண்டு பேரும் ஜெயித்தால் சரி. ஒருத்தர் ஜெயிச்சு ஒருத்தர் தோத்துட்டா - ஒருத்தரை ஒருத்தர் மறக்காம ஞாபகத்துல வெச்சிட்டு இருப்போமா. அன்றைய சூழல், அன்றைய எதிர்பார்ப்பு வேற மாதிரியாச்சுன்னா." அவன் வாயை பொத்தினேன். "நாம ரெண்டு பேரும் ஜெயிப்போம்" என்றேன்.

வாழ்க்கை விதவிதமான வண்ணங்களை கொண்டது. நாம் சில வண்ணங்களை குழைத்தால், காலம் வேறு வண்ணங்களை குழைக்கிறது.
சங்கர் சொன்னபடி, ஒருவர் ஜெயித்து ஒருவர் தோற்று போனோம். சங்கர் தோற்று போனான் என்றும் சொல்லி விட முடியாது. ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்து, அது பாதியில் நின்று போனது. அடுத்த வாய்ப்பை தேடி கொண்டு இருக்கிறான். இந்த மூணு வருஷத்தில் நான் தமிழ், தெலுங்கில் இருபது படங்கள் முடித்து, அடுத்த ரவுண்டு இந்திக்கு போகாலாமா என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்.

சங்கரை மறந்துவிட்டேன். முதல் படம் முடிவான போதே, காலி பண்ணி வசதியான ஃப்ளாட்டுக்கு மாறி விட்டேன். இங்கு வந்த கையோடு சங்கரை மறந்தாயிற்று. சங்கருடனான காதல் முடிந்து போன ஒன்று.

பிரபல நடிகை ஒரு உதவி இயக்குனரை காதலிக்க முடியுமா? இணைத்து கொள்ள தான் முடியுமா? கௌரவம் என்ன ஆவது. கடந்து வந்த கரடு முரடாக இருந்ததாலும், வாழ்க்கை நிறைய பாடங்களை கற்று கொடுத்து விட்டபடியாலும் - எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெகு ஜாக்கிரதையாக தான் வைக்க வேண்டி உள்ளது. செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது எத்தனை நன்மை பயக்கும் என்று பார்த்து தான் செய்ய வேண்டி உள்ளது. காதலோ, அன்போ ஒரு விஷயமாக இல்லாமல் போய்விட்டது.

பங்களா வந்துவிட்டது. அம்மா விழித்துவிட்டாள். மஞ்சு பக்கம் திரும்பினாள்.

"மஞ்சு என்ன உடம்புக்கு. முடியலையா. " என்று கேட்டாள். "இல்லேம்மா"

"ஒரு மாதிரியா இருக்கே"

"ஸ்டூடியோ வாசலில் சங்கரை பார்த்தேன்"

"எந்த சங்கர்"

"குண்டு சங்கர். நாம முன்னால் குடி இருந்த காம்பௌண்ட்ல இருந்தாரே"

"அவனா, அவனுக்கென்ன இப்ப"

"பாவமா இருக்கு. மனசுக்கு சங்கடமா இருக்கு. ரெம்ப கஷ்டப்படுறார் போல். எத்தனை திறமைசாலி"

"அவன் திறமைசாலி தான். அவன் ஜெயிக்காதது பாவம் தான். ஆனா எல்லோருமே ஜெயிச்சிட்டா, அப்புறம் ஜெயிச்சவனின்வெற்றிக்காக யார் கை தட்டுறது. யார் பிரமிக்கிறது. தோத்து போறவங்களும் இருந்தா தான் ஜெயிக்கிறவனுக்கு மரியாதை" என்றாள் அம்மா.

சற்றே க்ரூரமான சமாதானம். ஆனால் உண்மை. எல்லோரும் ஜெயித்துவிட்டால், ஜெயிப்பதில் உள்ள சுகம் தெரியாமல் போய்விடும் தான்.
அம்மா "கஷ்டப்படணும்னு தலையெழுத்து இருந்தா மாத்தவா முடியும்" என்றாள். மாற்றி இருக்க முடியுமே தான் நினைத்திருந்தால். மாற்ற விரும்பவில்லை என்பது தானே நிஜம்.
மஞ்சுவின் மனசில் இருந்து சங்கர் மெல்ல தேய்ந்து மறைந்து போனான்.

ஆனந்தவிகடனில் வந்தது.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.

Post by kalainilaa on Mon 12 Sep 2011 - 14:12

அவனது குணங்களுக்காக மட்டும் தான் அவனை காதலித்தேனா? யோசித்தால் அது பொய் என்பது தெளிவாகும். என்னை போல அவன் திறமைசாலி. அவன் ஜெயிப்பான். ஜெயித்தாலும் மற்றவர்களை போல தலைக்கனம் கொண்டு தூக்கி எறிய மாட்டான். அவனொடு என் வாழ்க்கை பிணைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று சுயநலத்துடன் தான் காதலித்தேன். ஆனால் நான் ஜெயித்து - தலைக்கனம் பிடித்து அவனை உதாசீனப்படுத்தி விட்டேன் என்பது தான் இன்றைய நிஜமாகிவிட்டது.

காதலின் நிலையை அழகாய் சொல்லிவுள்ளார்.

"அவன் திறமைசாலி தான். அவன் ஜெயிக்காதது பாவம் தான். ஆனா எல்லோருமே ஜெயிச்சிட்டா, அப்புறம் ஜெயிச்சவனின்வெற்றிக்காக யார் கை தட்டுறது. யார் பிரமிக்கிறது. தோத்து போறவங்களும் இருந்தா தான் ஜெயிக்கிறவனுக்கு மரியாதை" என்றாள் அம்மா.

உண்மையான வரிகள் .வெற்றி பெற்றவன் அறிவாளி இல்லை
தோல்வி கொண்டவன் எல்லாம் முட்டளுமில்லை .

பகிர்வுக்கு நன்றி தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.

Post by Atchaya on Mon 12 Sep 2011 - 14:15

உண்மையான வரிகள் .வெற்றி பெற்றவன் அறிவாளி இல்லை
தோல்வி கொண்டவன் எல்லாம் முட்டளுமில்லை .

பகிர்வுக்கு நன்றி தோழரே .

பின்னூட்டமிட்ட தோழருக்கு :flower: :”@:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 16:54

ஒரு சினிமாப் படம் பார்ப்பது போன்றே இருந்தது அட்சயா இருந்தாலும் மஞ்சு இப்படி செய்திருக்கக் கூடாதுதான்

ஆனால் உண்மை. எல்லோரும் ஜெயித்துவிட்டால், ஜெயிப்பதில் உள்ள சுகம் தெரியாமல் போய்விடும் தான்.
அம்மா
"கஷ்டப்படணும்னு தலையெழுத்து இருந்தா மாத்தவா முடியும்" என்றாள். மாற்றி
இருக்க முடியுமே தான் நினைத்திருந்தால். மாற்ற விரும்பவில்லை என்பது தானே
நிஜம்.
மஞ்சுவின் மனசில் இருந்து சங்கர் மெல்ல தேய்ந்து மறைந்து போனான்.

கதை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜெயிப்பது சுகம்! ... சிறுகதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum