சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி

View previous topic View next topic Go down

Sticky சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Post by *சம்ஸ் on Tue 4 Oct 2011 - 6:38



சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் அதிரடியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்தியாவில் நடந்து வரும் 3-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

`ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (இந்தியா), நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), தெற்கு ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா), சோமர்செட் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்ட போதிலும் இதுவரை ஒரு அணியும் அரைஇறுதியை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த `பி' பிரிவில் ஒரு லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டை சந்தித்தது.

`டாஸ்' ஜெயித்த சோமர்செட் அணி கேப்டன் அல்போன்சா தாமஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், தில்ஷன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். இதனால் ரன் விகிதம் வேகமாக உயர்ந்தது. கெய்ல் 4 ரன்னில் இருக்கையில் அவுட்டில் இருந்து தப்பினார். ஸ்டீவ் கிர்ப் பந்து வீச்சை கெய்ல் அடித்து ஆட அதனை ஜோஸ் பட்லர் கேட்ச் செய்யாமல் கோட்டை விட்டார்.

இதேபோல் தில்ஷனும் 8 ரன்னில் இருக்கையில் கேட்ச்சில் இருந்து தப்பினார். அணியின் ஸ்கோர் 4.3 ஓவர்களில் 38 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் (16 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்) வான்டெர் மெர்வ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கிய விராட் கோக்லியும் தன் பங்குக்கு அதிரடி ஆட்டத்தை காட்டினார். 10.3 ஓவர்களில் பெங்களூர் அணி 100 ரன்னை எட்டியது.

11.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 108 ரன்னாக இருந்த போது விராட் கோக்லி (22 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்) ஸ்டீவன் கிர்ப் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட சவுரப் திவாரியும் வேகமாக அடித்து ஆடினார். அவர் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன் எடுத்த நிலையில் ஸ்டீவன் கிர்ப் பந்து வீச்சில் சுப்பையாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 157 ரன்னில் இருந்தது. அடுத்து வந்த அகர்வால் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 19 ரன் எடுத்து அல்போன்சா தாமஸ் பந்து வீச்சில் சுப்பையாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் டேனியல் வெட்டோரி, தொடக்க ஆட்டக்காரர் கெய்லுடன் ஜோடி சேர்ந்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்த கெய்ல் 46 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 86 ரன்கள் சேர்த்த நிலையில் அல்போன்சா தாமஸ் பந்து வீச்சில் சுப்பையாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 17.5 ஓவர்களில் 188 ரன்னாக இருந்தது. கேப்டன் வெட்டோரி ஒரு ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து அருண் கார்த்திக், பத்கலுடன் ஜோடி சேர்ந்தார். 19.3 ஓவர்களில் பெங்களூர் அணி 200 ரன்னை தாண்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஒரு இன்னிங்சில் ஒரு அணி 200 ரன்னை கடப்பது இதுவே முதல் முறையாகும். பத்கல் 4 ரன்னுடனும், அருண் கார்த்திக் 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சோமர்செட் அணி தரப்பில் அல்போன்சா தாமஸ், ஸ்டீவ் கிர்ப் தலா 2 விக்கெட்டும், வான்டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சோமர்செட் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பீட்டர் டிரிக்கோ, கீஸ்வெட்டர் ஆகியோர் களம் கண்டனர். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். இதனால் பெங்களூர் அணிக்கு பதிலடி கொடுப்பது போல் தெரிந்தது.

அணியின் ஸ்கோர் 4.2 ஓவர்களில் 42 ரன்னாக இருந்த போது கீஸ்வெட்டர் (19 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன்) வெட்டோரி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட வான்டெர் மெர்வ் 6 ரன்னில் வெட்டோரி பந்து வீச்சில் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஹில்ரெத் (15 ரன்) டிர்க் நான்ஸ் பந்து வீச்சில் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தும், ஜோஸ் பட்லர் (4 ரன்) அரவிந்த் பந்து வீச்சில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஹில்ரெத் ஆட்டம் இழக்கும் வரை சோமர்செட் அணி எதிரணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ரன் சேசிங் செய்தது. அதன் பின்னர் ஆட்டம் பெங்களூர் அணி கட்டுப்பாட்டுக்கு சென்றது. அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் பீட்டர் டிரிக்கோ (38 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) 58 ரன் எடுத்த நிலையில் பத்கல் பந்து வீச்சில் வெட்டோரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். சுப்பையா ஒரு ரன்னில் அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் சோமர்செட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காம்டன் 17 ரன்னுடனும், கேப்டன் அல்போன்சா தாமஸ் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூர் அணி தரப்பில் அரவிந்த், வெட்டோரி தலா 2 விக்கெட்டும், டிர்க் நான்ஸ், பத்கல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

கெய்ல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த முதல் வெற்றியின் மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. `ஏ' பிரிவை போல் `பி' பிரிவிலும் அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பதில் இழுபறி நீடிக்கிறது. நாளை (புதன்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களை பொறுத்து தான் எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது முடிவாகும். அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவதில் `ரன்-ரேட்' முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum