சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சிறிலங்காவில் தமிழருக்கு ஆபத்து இல்லை! கனடாவின் புதிய கொள்கை - அனலை நிதிஸ் ச. குமாரன்

Go down

Sticky சிறிலங்காவில் தமிழருக்கு ஆபத்து இல்லை! கனடாவின் புதிய கொள்கை - அனலை நிதிஸ் ச. குமாரன்

Post by நண்பன் on Sat 15 Jan 2011 - 14:56

முப்பதாண்டு கால ஈழத் தமிழரின் ஆயுதப்போரின் வரலாற்றில் விடுதலைப்புலிகளை சாடிவந்த நாடுகளில் கனடாவும் ஒன்று. தொடர்புகள் எதனையும் புலிகளிடம் வைத்திருந்ததில்லை என்று கூறினால் தான் புகலிடம் அளிக்கப்படும் என்ற கொள்கையுடைய நாடுதான் கனடா.
புலிகளின் வன்முறையினால் தப்பி கனடா வந்ததாகக் கூறினால்தான் புகலிடம் கிடைக்கும் என்று பல லட்சம் தமிழர்கள் அதைக் கூறியே புகளிடக் கோரிக்கையை சமர்ப்பிப்பார்கள். மே 2009-க்கு பின்னர் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டதாக கூறியதன் பின்னர் தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோருவது தீண்டத்தகாததாகி விட்டது.

சிறிலங்காவில் நடக்கும் நாளாந்தம் சம்பவங்களை மறைத்து அந்நாட்டிற்கு நற்பெயரை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையுடனோ என்னவோ கனடிய அதிகாரிகள் உண்மைக்கு புறம்பான புதிய கொள்கையை அமுல்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் 25 வயதுடைய ஈழத்தமிழ் வாலிபரின் அகதி மனுவை நிராகரித்தது கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை. குறித்த இளைஞருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இச் சபையின் தீர்ப்பாளர் தெரிவித்துள்ளதாவது: “2010 நடுபகுதிக்குப் பின்னர் சிறிலங்காவில் சுமூக நிலை தோன்றிவிட்ட காரணத்தினால், அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்காது.”

குறித்த இளைஞர் தனது மனுவில் தான் 2006-ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் பல தடவைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது நண்பர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார். சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு பயந்து 2007-ஆம் ஆண்டு மலேசியா சென்று 2009-இல் கனடா வந்ததாக கூறியிருந்தார்.

மேற்குறிப்பிடப்பட்ட இளைஞருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பல மனித நேய அமைப்புக்களுக்கும், உண்மையாகவே அகதி விண்ணப்பம் செய்யும் மக்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பானது ஒரு முன்னோடித் தீர்ப்பாகவே முன்வைக்கப்பட்டு எதிர்காலத்தில் அகதி விண்ணப்பம் செய்ய இருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இதே மாதிரியான தீர்ப்பையே வழங்க சாத்தியம் உள்ளது.

குறிப்பாக 2009-ஆம் ஆண்டு கனடா வந்தடைந்த 76 ஈழத்தமிழர்களின் அகதி விசாரணை இன்னும் நிலுவையிலையே இருக்கிறது. இதைப்போலவே கடந்த வருடம் 492 ஈழத் தமிழர்களின் அகதி விண்ணப்பங்களும் நிலுவையிலேயே கிடக்கிறது. குறித்த இளைஞருக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பே இரு கப்பலில் வந்தடைந்த அகதிகளுக்கும் அளிக்கப்படும் என்று கூறுகின்றனர் அகதிகள் விடயத்தில் அக்கறை கொண்ட குடிவரவு மற்றும் மனிதவுரிமை வழக்கறிஞர்கள்.

கடந்த வருடம் அளிக்கப்பட்ட தீர்ப்பே ஏனையோருக்கும் வழங்கப்படுமா?

குறித்த இளைஞருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உதாரணமாக வைத்து மற்றவர்களுக்கு அதே தீர்ப்பை வழங்க சாத்தியங்கள் அதிகம். அகதிகள் மற்றும் குடிவரவு சபையின் முன்னணி உறுப்பினரே இந்தத் தீர்ப்பை பிற விசாரணையாளர்களும் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது என்று கூறியிருப்பது நிச்சயம் பலருக்கு அதிர்ச்சியான தகவலே. கனேடிய அரசு குறித்த சபையின் மீது கொடுத்த அழுத்தத்தின் விளைவே இந்த தீர்ப்பு என்று கூறுகின்றனர் குடிவரவு சம்பந்தமான ஆய்வாளர்கள்.

எது எப்படியிருப்பினும், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது. இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமேயானால் இரு கப்பல்களில் வந்து அகதி மனுக்களை சமர்ப்பித்துள்ள ஈழத்தமிழருக்கும் இதே மாதிரியான தீர்ப்பே வழங்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு இன்றும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

இரு கப்பல்களிலும் வந்தடைந்த நூற்றுக்கும் அதிகமான ஈழத்தமிழர் இன்றும் தடுப்பு முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கனேடிய அரசும் 46 பிரிவை புதிதாக உருவாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்ட அமுலாக்களுக்காக காத்து இருக்கிறது. பிரதான இரு எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்ட அமுலாக்கலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். இப்படியாக பல வேலைகளை அகதிகளுக்கு எதிரான கொள்கையுடைய சட்டங்களை கொண்டுவந்து கனடாவுக்கு அகதிகளாக வரும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளது பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசு.

கடந்த வருடம் அளிக்கப்பட்ட குறித்த தீர்ப்பை எதிர்த்து தகுந்த நடவடிக்கையை எடுப்பதனூடாக எதிர்காலத்தில் அளிக்கப்பட இருக்கும் தீர்ப்புக்களை தடுத்து நிறுத்த இருக்கும் ஒரே வழி.

யார் சொன்னது சிறிலங்கா பாதுகாப்பான நாடென்று?

தமிழர்களை காப்பாற்றி விட்டோம், பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று சர்வதேசத்தை ஏமாற்றியவாறு ஈழத்தமிழர் மீது கொலைவெறித் தாக்குதல்களை சிறிலங்கா அரசு மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. முழுமையான பத்திரிகை தணிக்கை மூலம் தனது அட்டூழியங்கள் வெளியில் தெரியாதவாறும் பார்த்துக் கொண்டுள்ளது. கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு, காணாமல் போதல் என எம்முறவுகள் செய்வதறியாது திக்கித்து நிற்கின்றனர்.

சட்டம்-ஒழுங்கு ஈழத்தில் தொடர்ந்தும் நிலவுகிறது. அசம்பாவிதம் இல்லாத நாளே இல்லை என்கிற நிலை இன்று ஈழத்தில் நிலவுகிறது. யாழ் வளைகுடாவில் இடம்பெறும் சம்பவங்கள் மனதை நெகிள வைக்கின்றன. சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு சடங்கு செய்து கொண்டிருந்த இந்து குருவையே கொன்றுவிட்டார்கள் அரச பயங்கரவாதிகள். இராணுவ சிப்பாய் ஒருவனின் துப்பாக்கியாலேயே இக்குரு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள மொழியில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை பாட அனுமதிக்க முடியாதென்ற ஒரு கல்வியதிகாரியையே பட்டப்பகலில் சுட்டுக்கொன்றார்கள் சண்டாளியர்கள்.

இந்தியாவின் அருவருடியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியினர் செய்யும் அடாவடித்தனத்தை குறிப்பாக மணல்களை திருடி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக புகார் கூறிய சுற்றுச்சூழல் அறிஞர் படுகொலை செய்யப்பட்டார். இப்படியாக பல படுகொலைகள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் இவற்றை கூறி நியாயம் கேட்டபோது அவர் கூறியதாவது: “காவல் துறையினரிடம் வழங்கப்பட்டிருக்கும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பொறுப்பை முழுவதையுமே இராணுவத்திடம் வழங்குவதன் மூலமாகவே குறித்த அராஜகங்களை நிறுத்த முடியும்."

காவல்துறை அதிகாரிகள் யாழ் மக்களிடம் கூறுகையில்: “கதவுகளை திறந்துவிடாமல் எங்கேயாவது செல்லவும்",

“தனியாக ஒருபோதும் பயணிக்க வேண்டாம்", “தங்கங்களை அணிவதை தவிர்க்கவும்",

“வெள்ளை வான்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்",

“சந்தேகத்திற்கிடமான வாகனங்களை பார்த்தால் உடனே குறித்த வாகன தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்",

“குழந்தைகளை தனியாக பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்",

“வீடுகளில் வைக்கபட்டிருக்கும் பெறுமதியான பொருட்களின் மீது பெயர் விபரங்களை எழுதி வைக்கவும்",

“தனியாக யார் இருக்கும் போதும் கதவுகளை பூட்டி வைப்பதுடன் இரவு நேரங்களில் யாரேனும் கதவைத் தட்டினால் திறக்க வேண்டாம்",

“சுய தொழில் செய்வோர் தமது காரியாலயங்களில் குறைந்தது ஒருவரையாவது முழுநேரமாக பணிக்கு அமர்த்த வேண்டும்",

“ஒருவர் காரியாலயங்களில் இருந்தாலும் வெளியில் வெளிச்சத்தை போட வேண்டும்",

“மக்கள்தான் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும”;இ

“பிடிபடும் குற்றவாளிகளை காவல்துறையினரிடத்திலோ அல்லது கிராம சேவையாளர்களின் அலுவலகங்களிலையோ ஒப்படைக்க வேண்டும்."

மேற்குறிப்பிடப்பட்டவைகளே போதும் ஈழத்தில் சட்டம்-ஒழுங்கு என்ன நிலையில் இருக்கிறது என்பதை உலகறியச் செய்ய. உலகநாடுகளும் அறிந்தும் அறியாமல் இருக்கிறது. கொழும்பில் இருக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஈழப் பகுதிகளுக்கு பல தடைவைகள் சென்று வருகின்றார். யாழ் மற்றும் ஈழத்தின் பிற பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களை கேட்குமளவு இவருக்கு நேரமிருந்தாலும், இவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் இராணுவத்தினர் விடமாட்டார்கள் போலும்.

மே 2009 யுத்தம் முடிவுக்கு வந்ததென்று சிங்கள அரசு சொன்னாலும், தமிழர்களுக்கு எதிராக ஏவப்பட்ட யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தமிழருக்கு அரசியல் தீர்வை வழங்கி அவர்கள் தமது தாயகத்தில் மானத்துடனும் மரியாதையுடனும் வாழும் நிலை வந்த பின்னர்தான் தமிழர் மீது ஏவப்பட்டிருக்கும் போர் முடியும்.

சிங்கள ஆக்கிரமிப்பு படைகள் ஈழத்தில் தரித்து நிற்கும் வரை ஈழத்தமிழருக்கு பாதுகாப்பே இல்லை. இதை உலகநாடுகளிடம் குறிப்பாக கனடா போன்ற நாடுகளிடம் எடுத்துரைப்பதன் மூலமாகத்தான் ஈழத்தமிழருக்கு எதிராக இந்நாடுகளினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த முடியும்.

nithiskumaaran@yahoo.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிறிலங்காவில் தமிழருக்கு ஆபத்து இல்லை! கனடாவின் புதிய கொள்கை - அனலை நிதிஸ் ச. குமாரன்

Post by ஹனி on Sat 15 Jan 2011 - 19:43

:silent:
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum