சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும், அவற்றை வெளியிடுவேன்

Go down

Sticky கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும், அவற்றை வெளியிடுவேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 5 Nov 2011 - 9:54

நான் ஒருமையில் பேசியதாகவும், அதற்கு சிடி இருப்பதாகவும் கூறுகிறார்களே அதை அவர்கள் நிரூபிக்கட்டும். என்னிடமும் சிடி இருக்கிறது, அதை வெளியிட்டு ராமதாஸையும் மற்றவர்களையும் நான் அம்பலப்படுத்துவேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன்.


நேற்று சென்னை வந்த வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ராமதாஸையும், வடிவேல் ராவணனையும் ஒருமையில் பேசியதாகக் குற்றஞ்சாட்டி என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவிலும் இதற்கான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். ஆவேசத்தில் "இவன் ஆண்டான்' என்று சொல்வது போலத்தான் ராமதாûஸத் தெரிவித்தேன். வடிவேல் ராவணனை இப்போதும் நான் மதிக்கிறேன். அவரை ஒன்றும் நான் சொல்லவில்லை. செல்லூர் குமார் என்பவர் தொடர்பாகத்தான் பேசினேன். இதை அவர்கள் ஏற்கவில்லை. நிர்வாகக் குழு கூட்டம் நடந்தபோது,

தனியறையில் வைத்து...

தனியறையில் வைத்து, மொத்தம் 24 பேர் என்னை மிரட்டினார்கள். அங்கு எனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னால் தமிழகம் முழுக்கவே சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். (இதைச் சொன்னபோது கண்ணீர் விட்டு அழுதார் வேல்முருகன்). என் குடும்பத்தாரைப் பற்றி கேவலமாகச் பேசினார்கள். இப்போதும் தொடர்ந்து உனக்கு விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டுகிறார்கள் என்றார்.

பணம் சேர்த்துவிட்டதாகக் கூறுகின்றனர். என்னுடைய மனைவி நகைகளை வைத்துதான் கட்சிப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். அவற்றைக்கூட மீட்க முடியாத நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

டிஜிபியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளேன். நான் எந்த நேரம் தொலைபேசியில் அழைத்தாலும் எடுங்கள் என்று கூறியுள்ளேன்.

என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் அதற்கு முன்பும் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மிரட்டுகின்றனர்.

ராமதாஸை தகாத வார்த்தைகளால் நான் பேசியதாக சிடி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடட்டும். நானும் எனக்கு நேர்ந்தவற்றை சிடியாக வைத்துள்ளேன். அவற்றையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

பாமக தொடங்கிய காலம் தொட்டு கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும். என்னை நிர்பந்தப்படுத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்பதை எச்சரிக்கையாகவே கூறிக்கொள்கிறேன்.

பாமகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். என்னை நீக்குவதற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலமே முடிவு செய்ய முடியும். அதனால் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து நியாயம் கேட்கப் போகிறேன். 1980-க்குப் பிறகு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அதேசமயம் எக்காரணத்தைக் கொண்டும் பாமகவில் இருக்க மாட்டோம். பாமகவைக் கைப்பற்றி நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிரூபிப்போம்.

இனிமேல் ராமதாஸே கூப்பிட்டு எத்தனை பெரிய பதவியைக் கொடுத்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிரூபிப்போம். அவர்களிடமிருந்து பாமகவை கைப்பற்றுவோம் என்றார் வேல்முருகன்.

வேல்முருகனுடன், பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, நெடுஞ்செழியன், சண்முகம், காமராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

முன்னாள் தலைவர்களை சந்திக்க திட்டம்

அடுத்த கட்டமாக பாமகவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார் வேல்முருகன்.இவர்கள் அனைவரையும் இணைத்த பின்னர் பாமகவுக்கு எதிராக முழு நீளப் போரில் அவர் குதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும், அவற்றை வெளியிடுவேன்

Post by kalainilaa on Sat 5 Nov 2011 - 10:35

:!.: :!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum