சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கலாநிதிமாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம் சாட்சியங்களை அழிக்க முற்படக் கூடும்; சி.பி.ஐ தகவல்

Go down

Sticky கலாநிதிமாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம் சாட்சியங்களை அழிக்க முற்படக் கூடும்; சி.பி.ஐ தகவல்

Post by *சம்ஸ் on Tue 8 Nov 2011 - 9:00

கலாநிதிமாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம்
சாட்சியங்களை அழிக்க முற்படக் கூடும்; சி.பி.ஐ தகவல்




எயர்செல்- மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ யின் விசாரணை வளையத்தில் உள்ள சன்
தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் சென்னையில்
இருந்து சனிக்கிழமை அதிகாலை பின்லாந்து புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணம் டில்லி
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயர்செல் நிறுவனத்தை
விற்பனை செய்ய அப்போதைய மத்திய தொலைக் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்
நிர்பந்தித்தார்.
இதற்கு கைமாறாக மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனம் மாறன் குடும்பத்தினரின் சன் டைரக்ட்
நிறுவனத்தில் ரூ. 629 கோடி முதலீடு செய்தது என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த செப்டெம்பர்
மாதம் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் அவரது சகோதரர் கலாநிதி மாறன்,
இங்கிலாந்து அஸ்ட்ரோ ஆல் ஆசியா நிறுவனம், மலேசிய மேக்ஸிஸ் நிறுவனம் ஆகியவற்றின்
இயக்குநர் ரால்ப் மார்ஷல், மலேசிய உஷாகா டெகாஸ் நிறுவனத்தின் தலைவர் டி. அனந்த
கிருஷ்ணன் உள்பட 8 பேர் மீது சி. பி. ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறது.
சென்னை, ஆந்திரம், டில்லியில் உள்ள அவர்களது வீடுகள், அலுவலகங்களில் சோதனை
நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன் தனது
குடும்பத்துடன் தனி விமானத்தில் பின்லாந் துக்குப் புறப்பட் டுச் சென்றார். அந்த
விமானத் தில் ஏராளமான உடமைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக சென்னை விமான நிலைய வட்டாரங்
கள் தெரிவித்தன. கலாநிதி மாறன் குடும்பத் தாரால் எடுத்துச் செல்லப்பட்டவை ஆவணங்களாக
இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
சி. பி. ஐ வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் கலாநிதி மாறன் பின்லாந்துக்குச்
சென்றுள்ள விவகாரம் குறித்து டில்லி சி. பி. ஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக சி. பி. ஐ அதிகாரி ஒருவர் கூறியது, முதல் தகவல் அறிக்கையில் மட்டும்
கலாநிதி மாறனின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பு சி. பி.ஐ
யில் தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை சி. பி. ஐ சேகரித்து வருகிறது. மாறன்
சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வரும் நாட்களில் விசாரணை நடத்த சி.
பி. ஐ திட்டமிட்டிருந்தது.
இதைப் புறக்கணிப்பதற்காக கலாநிதி மாறன் திடீரென பின்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருக்
கக் கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கில் கலாநிதி மாறன் பின்லாந்தில்
குடியேறினால் அவரை நாடு கடத்த இந்திய அரசு வலியுறுத்த முடியாது.
ஏனெனில், அந்த நாட்டுடன் இந்திய அரசு, குற்றவாளிகளை நாடு கடத்தி பரஸ்பரம்
ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை. அதனால்தான் கலாநிதி மாறன் தனது
குடும்பத்துடன் பின்லாந்து சென்றிருக்கிறாரா என்கிற கோணத்திலும் நாங்கள் ஆராய்ந்து
வருகிறோம்.
சாதாரணமாக இதுபோன்ற வழக்குகள் விசாரணையில் இருக்கும்போது, அதில் தொடர்புடையவர்கள்
வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கண்காணித்துத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி குடிவரவு
குடியகல்வு துறைக்குப் புலன் விசாரணை நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை அனுப்புவது
வழக்கம் கலாநிதி மாறன் விடயத்தில், விமான நிலைய அலுவலர்களுக்கு அப்படிப்பட்ட
எச்சரிக்கை எதுவும் சி. பி. ஐ யால் தரப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும், குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்வதாக, இருந்தாலும், அங்கே கடும்
குளிர்ச்சி காலமாக இருக்கும் நிலையில் ஏன் பின்லந்துக்குப் போக வேண்டும் என்கிற
சந்தேகமும் எழுப்பப்படுகிறது. இவர் புலன் விசாரணை அதிகாரிகள், மத்திய அரசின்
முக்கியமான பிரமுகர்கள் போன்றோரின் உதவியுடன் கலாநிதி மாறன் வெளிநாடு சென்றிருக்கக்
கூடும் என்றும் கருத வாய்ப்பு இருக்கிறது.
கலாநிதி மாறன் ஆவணங்களுடன் வெளிநாடு சென்று சாட்சியங்களை அழிக்க முற்படக்கூடும்
என்றும், அவர் வெளிநாட்டில் தங்கியிருந்து இந்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை
வளையத்தில் இருந்து தப்பிவிட முயற்சிக்கிறார் என்றும் வெளிவரும் தகவல்களில் எந்த
வித உண்மையும் கிடையாது. உலகத்தின் எந்த மூலையில் போய், ஒளிந்து கொண்டாலும் எந்தக்
குற்றவாளியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. குறிப்பாக ஒரு
மிகப்பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் ஒருவர் தலைமறைவாக இருக்க நினைக்க மாட்டார்.

அவரது தொழில் பாதிக்கப்படும் என்பது அவருக்குத் தெரியாதா? இதெல்லாம் வீண் பயம் என்று
சி. பி. ஐ யின் உயர் அதிகாரி ஒருவர் கலாநிதி மாறனின் வெளிநாட்டுப் பயணம் பற்றிக்
குறிப்பிட்டாலும், சி. பி. ஐ அடுத்த கட்டத்துக்குத் தயாராகி வருகிறது என்பதுதான்
நமக்குக் கிடைத்திருக்கும் நம்பகமான தகவல் என இந்திய பத்திரிகைகள் தகவல்
வெளியிட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கலாநிதிமாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம் சாட்சியங்களை அழிக்க முற்படக் கூடும்; சி.பி.ஐ தகவல்

Post by kalainilaa on Tue 8 Nov 2011 - 15:29

:!#:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum