சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Yesterday at 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Yesterday at 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Yesterday at 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Yesterday at 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Yesterday at 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

.

சங்கக்காரவுக்கு முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு: மிஸ்பா, அஜ;மல் முன்னேற்றம்

View previous topic View next topic Go down

Sticky சங்கக்காரவுக்கு முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு: மிஸ்பா, அஜ;மல் முன்னேற்றம்

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 16:31

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை
சங்கக்காரவுக்கு முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு: மிஸ்பா, அஜ;மல் முன்னேற்றம்


சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணியின்
முன்னணி துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்
தொடரில் சோபித்ததைத் தொடர்ந்தே சங்கக்கார முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் சங்கக்கார 2 சதங்களுடன் மொத்தமாக 516
ஓட்டங்களைப் பெற்றார்.
இதில் இருநாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் முதல்
இன்னிங்ஸில் 144 ஓட்டங்களை பெற்றதோடு இரண்டாவது இன்னிங்ஸில் 51 ஓட்டங்களை குவித்தார்.
இதன் மூலம் அவர் மேலதிகமாக 26 தரநிலை புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை
தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதன்படி சங்கக்காரவின் மொத்த தரநிலைப் புள்ளிகள் 880 ஆக அதிகரித்துள்ளது. அதாவது
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவில் ஐக் கலிசை
விடவும் சங்கக்காரவுக்கு மூன்று தரநிலை புள்ளிகளே குறைவாக காணப்படுகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்
போட்டி நேற்று கேப்டவுனில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட்டில் கலிஸ் சோபிப்பது
கட்டாயமாகும். மாராக அவர் இந்த டெஸ்டில் ஓட்டங்கள் குவிக்க தவறினார் சங்கக்காரவுக்கு
முதலிடத்திற்கு முன்னேறலாம்.
இதேபோன்று இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் சோபித்த பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா
உல்ஹக் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஷார்ஜாவில் கடந்த மூன்றாவது
டெஸ்ட் போட்டியில் முஸ்பா உல் ஹக் முதல் இன்னிங்ஸில் 89 ஓட்டங்களை பெற்றதோடு
இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 9 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன் மூலம் அவர்
துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் சகநாட்டு வீரர் யூனிஸ் கானையும்
பின்தள்ளி 4 இடங்கள் முன்னேறியுள்ளார்.
இதன்படி தரவரிசையில் 17 வது இடத்தில் இருந்த மிஸ்பா உல் ஹக் தற்போது 13 வது
இடத்திற்கு முன்னேறியுள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் சிறந்த
பாக். வீரரின் தரநிலையை மிஸ்பா பெற்றுள்ளார். யூனிஸ்கான் 14 வது இடத்தில்
காணப்படுகிறார்.
மறு புறத்தில் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையுடனான தொடரில்
சோபித்த சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் தனது சிறந்த தரநிலையை பதிவு செய்து
கொண்டுள்ளார். குமார் சங்கக்காரவுடன் இணைந்த தொடர் நாயகன் விருதை வென்ற சயீட் அஜ்மல்
இலங்கையுடனான டெஸ்ட்டில் மொத்தம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் அவர் கடைசி டெஸ்ட்டில் மொத்தம் 182 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை
வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 10 இடத்தை பிடித்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த தரநிலையும் இதுவாகும்.
சயீட் அஜ்மல் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் போது தரவரிசையில் 23 வது
இடத்தில் காணப்பட்டார். மூன்று டெஸ்ட் போட்டி முடிவின் பின் அவர் 13 இடங்கள்
முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர பாக். வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் மற்றும் இலங்கை வேகபந்து வீச்சாளர்
சானக்க வெலகெதர ஆகியோரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். இலங்கையுடனான மூன்றாவது
டெஸ்ட்டின் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 3-76, 2-44 என விக்கெட் வீழ்த்திய உமல்குல்
4 இடங்கள் முன்னேறி 17 வது இடத்தை பிடித்தார்.
அதேநேரம் இந்த டெஸ்ட்டில் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சானக்க வெலகெதர 6
இடங்கள் முன்னேற 41 ஆவது இடத்தை பிடித்தார். பந்து வீச்சாளர்களுக்கான டெஸ்ட்
தரவரிசையில் இலங்கையின் சிறந்த தரநிலை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தொடர்ந்து
தக்கவைத்துக் கொண்டுள்ளார். 626 தரநிலை புள்ளிகளை பெற்றுள்ள ரங்கன ஹேரத் 11 வது
இடத்தில் காணப்படுகிறார்.
இதேவேளை டெஸ்ட் வரலாற்றில் 900 தரநிலை புள்ளிகளை 20 பந்து வீச்சாளராக சாதனை படைக்க
தென்னாபிரிக்க வேக்கபந்து வீச்சாளர் டேல் ஸ்டைனுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பந்து
வீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் 899 தரநிலை புள்ளிகளுடன் முதலிடத்தில்
காணப்படுகிறார்.
இதனிடையே தென்னாபிரிக்க- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று
ஆரம்பமானது. இதில் ஸ்டெயின் சோபிக்கும் பட்சத்தில் 900 இலக்கை எட்ட முடியும்.
டெஸ்ட் வரலாற்றில் தென்னாபிரிக்கா சார்பில் முன்னாள் வீரர் ஷோன் பொலக் மாத்திரமே
900 தரநிலை புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum