சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

விகடன் மேடையில் வடிவேலு - கேள்வி பதில்

View previous topic View next topic Go down

Sticky விகடன் மேடையில் வடிவேலு - கேள்வி பதில்

Post by அப்துல்லாஹ் on Sat 19 Nov 2011 - 10:18
எஸ்.சஞ்சய், சென்னை.

''29-ம் நம்பரை உங்களுக்குப் பிடிக் குமா... பிடிக்காதா?''

''அட அபிஷ்டு... அது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாயிற்றே... இன்னுமா நோக்குப் புரியல!''

எஸ்.சிவராம், திருச்சி.

''நீங்க நல்லவரா... கெட்டவரா?''

''நல்லவன், கெட்டவன் எப்புடி இருப்பான்கிறத மனக்கண்ணுல ஓட்டிப் பாருப்பா... நா யாருங்கிறது ஒனக்குத் தெரியும்!''

செம்முகிலன், விருத்தாசலம்.

''ஈழப் போராட்டத்தைத் தமிழ் உணர்வோடு வரவேற்றுப் பேசியவர் நீங்கள். ஆனால், ஈழத்துக்குத் துரோகம் இழைத்த தி.மு.க-வுக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக் கேட்டது நியாயமா?''

''ஓ... அவனா நீயி!''

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

''மனுஷ ஜென்மமாப் பொறந்ததுக்காக எப்போவாச்சும் வருத்தப்பட்டு இருக்கீங்களா வடிவேலு?''

''அப்படி எல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் உம்மைப்போன்ற பல கோடிக்கணக்கான மக்களை மகிழவைப்பதற்காகத்தான் யாம் இப்பிறவியில் நகைச்சுவை நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறோம். பிறகு, எதற்கய்யா நான் வருந்த வேண்டும்?''

த.சத்தியநாராயணன், சென்னை.

''ஒரு நடிகன் எப்போது ஓய்வுபெற வேண்டும்? எப்போது ஓய்வுபெறக் கூடாது?''

''பார்க்குற எடம் பூரா கட் அவுட் வைக்குற காலத்துல ஓய்வுங்கிறத நெனச்சுக்கூடப் பார்க்கக் கூடாது. 'கெட் அவுட்’டுங்கிற வார்த்தையக் கேட்டுட்டா, அதுக்கப்புறமும் கடையத் தொறந்து வெச்சிருக்கக் கூடாது. எனக்குத் தெரிஞ்சு சிறந்த நடிகனுக்கு ஓய்வுங்கிறது இறப்புக்குப் பின்னாலதான். உதாரணத்துக்கு: சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர்., நம்பியார், என்.டி.ராமராவ், ரெங்காராவ், எஸ்.வி.சுப்பையா, நாகைய்யா, பாலய்யா... அடுத்தும் கேளய்யா... என்.எஸ்.கே., தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், பத்மினி அம்மா, சாவித்ரினு ஓய்வே இல்லாம சாதிச்சவங்களைச் சொல்லிக்கிட்டே போகலாம்!''ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்.

''எங்களுக்கு சோகம் வரும்போது உங்க நடிப்பைப் பார்த்து மனதை சுகமாக்கிக் கொள்வோம். உங்களுக்கு சோகம் வந்தால் என்ன பண்ணுவீங்க?''

''சோகத்தைத் தாங்கணும்னா அதைக் கண்டுக்கவே கூடாதுண்ணே... அதைச் சட்டையே பண்ணாம நாம நம்ம வேலையப் பார்த்துக்கிட்டு இருந்தா, அது பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, 'இவனை ஒண்ணும் பண்ண முடியாது’னு சொல்லிக் கௌம்பிடும்ணே... என்னோட வலது கால்ல ஒரு தடவை பெரிய காயம். வலி பொறுக்க முடியலை. 'ஷூட்டிங்க தள்ளி வெச்சிட்டு ரெஸ்ட் எடுங்க’னு டாக்டரே சொல்லிட்டாரு. ஆனா, நான் அப்போதான் வழக்கத்தைவிட அதிகமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்டேன். என் பாணியில சொல்லணும்னா, பேஸ் மட்டம் வீக்கான அந்த நேரத்துலதான் 'வின்னர்’, 'கிங்’, 'சுந்தரா டிராவல்ஸ்’னு விளாசித் தள்ளினேன். 'வின்னர்’ல நான் நொண்டி நொண்டி நடிச்சது நடிப்பு இல்லண்ணே... என் வேதனையோட துடிப்பு!''

கே.சிவகுமார், நெற்குன்றம்.

''இளைய தலைமுறை ஹீரோக்கள் யாருடன் நீங்கள் நடித்தாலும் படம் மெகா ஹிட் ஆகிறது. ஆனால், தொடர்ந்து அவர்களுடன் நீங்கள் நடிப்பதில்லையே... ஏன்?''

''ரேஸ் குதிரையா ஓடுறப்ப, ரோஸ் குதிரையோ பீஸ் குதிரையோ... மாஸ் குதிரையாகத்தான் ஆசைப்படும். ஏன்னா, இங்க மாஸுக்குத்தான் காசு. எல்லாருக்கும் ஆனந்த விகடன்ல மார்க் வாங்கத்தானே ஆசையா இருக்கும்? இன்னும் ஒடைச்சு சொல்லணும்னா... சினிமாவுல தெறமையான வேலைக்காரன் எல்லாப் படத்துலயும் வேலை பார்க்க முடியாதுண்ணே... அவ்வளவுதான்!''என்.சிவகுமார், கடலூர்.

''நிஜ வாழ்க்கையில், 'நானாத்தான் உளறிட்டேனா?’ என்று எப்போதாவது ஃபீல் பண்ணி இருக்கீங்களா?''

''அப்பனே.... விலாசம் தவறி இந்த வேலுவிடம் வந்துவிட்டீர்... நீர் இதைக் கேட்க வேண்டியது வேறு இடமய்யா!''

வி.குணாளன், திருநெல்வேலி.

''அண்ணா, படம் முழுக்க நெல்லைத் தமிழ் பேசி நீங்கள் நடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். செய்வீர்களா?''

''நிச்சயமா நிறைவேற்றுவேன் ராசா... அதுக்கு முன்னால உன் தாய் - தந்தையோட கனவுகளைச் சீக்கிரமே நிறைவேற்றுமய்யா!''

த.கதிரவன், முக்கூடல்.

''நீங்க அழகிரி ஆளா... ஸ்டாலின் ஆளா?''

''அவங்க எல்லோருமே என்னோட ரசிகர்கள்தானய்யா!''

ம.தமிழ்மாறன், காரைக்குடி.

''சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் விஜயகாந்த், அதே எதிர்க் கட்சித் தலைவர் இருக்கையில் அமர்வாரா?''

''ஹா... ஹா... ஹா... பொறுத்திருந்து பாரும் மங்குணிப் பாண்டியரே!''

ஜெர்லின் அபிஷிகா, திருச்சி.

''அருமையான குணச்சித்திர நடிப்பை யும் வெளிப்படுத்தக்கூடிய திறமை கொண்டவர் நீங்கள். ஆனால், வெறும் சிரிப்பு நடிகராகவே தொடர்கிறீர்களே?''

''யப்பா, ஒங்கப்பா எனக்கு மூத்தவரா இளையவரானு தெரியலை... நீ அண்ணன் மகனோ தம்பி மகனோ... 'தேவர் மகன்’ பார்த்தது இல்லையா..? 'எம்டன் மகன்’ பார்த்தது இல்லையா? குணச்சித்திர நடிப்பப் பார்க்கணும்னா 'ராஜகாளியம்மன்’ படம் பாரு. 'புலிகேசி’ படம் பாரு. பிறகு, 'பிறகு’ படம் பாரு. அதுல, வெட்டியான் கேரக்டர்ல எப்புடி வாழ்ந்திருக்கேன்னு பாரு. 'காலம் மாறிப்போச்சு’ பாரு... 'விரலுக் கேத்த வீக்கம்’ பாரு... மெய்னா 'இந்திரலோகத்தில் அழகப்பன்’ பாரு... எந்தப் படமும் பார்க்காம 'காமெடி டைம்’ மட்டுமே பார்க்குற ஆளுதானா நீயி. காசு கொடுத்து தியேட்டருக்குப் போய்ப் பாரு ராசா... காமெடி டைம்லயே காலத்தை ஓட்டாதப்பு!''

கே.ஸ்வாமிநாதன், சென்னை.

''தமிழ்த் திரையுலகின் உச்ச ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தைவிட, உங்களின் சம்பளம் அதிகமாமே?''

''ஆமாப்பா... அர்னால்டு, ஜாக்கிசான், சில்வர் ஸ்டோனைவிட அதிகமாத்தான் சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். இந்த ஆராய்ச்சியில எறங்கி நீயே ஒன்னைய அழிச்சுக்காத ராசா. ஒன்னோட சம்பளத்தை உருப்புடியா வாங்கி ஒம் பொழப்ப ஒழுங்கா ஓட்டுப்பா... அவ்வ்...''

வி.எஸ்.குமார், சேலம்.

''உங்க வாழ்க்கையில இருந்து எங்களுக்கு ஏதாச்சும் சொல்லணும்னா, என்ன சொல்வீங்க?''

''அடேயப்பா... வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரலை தம்பி. ஆனா, வாழ்க்கையோட எந்த நேரத்துலயும் வாசிக்க, யோசிக்க வேண்டிய சில வைர வரிகளை மனசுக்குள்ள வெச்சிருக்கேன். நீங்களும் அந்த வரிகளைக் கேட்டீங்கன்னா, வாழ்க்கைங்கிறது ஒரு வாடகை சைக்கிள்னு ஒங்களுக்குப் புரியும்.

என் இனமான எங்கய்யா நாகேஷ் 'நீர்க்குமிழி’ படத்துல ஒரு பாட்டு பாடி இருப்பார் பாருங்க...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
தொகுப்பான் சிலர் அதைச் சுவைப்பதில்லை
தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை.

-மொத்த வாழ்க்கை ரகசியமும் இந்த வரிகள்ல முடிஞ்சிடுச்சுப்பா தம்பி. ஒண்ணுக்கு மூணு தடவை இதக் கேட்டீங்கன்னா எதுவும் நிரந்தரம் இல்லங்கிறது புரியும். அடுத்த பாட்டு...

மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவவிட்டால்
தப்பி ஓடவிட்டால்
நம்மை ஆபத்தில் ஏற்றிவிடும்
படுபாதத்தில் தள்ளிவிடும்
அடித்தாலும் உதைத்தாலும் வழிக்கு வராது
அதை அப்படியேவிட்டால் அடங்கிவிடாது
மனத்தாலும் பணத்தாலும் மயங்கிவிடாது
நமக்குள்ளே இருந்துகொண்டு நன்மை தராது

- நம்ம மனசை அப்புடியே ஸ்கேன் பண்ண பாட்டுப்பா இது. மனசோட ரிமோட்டை நாம ரொம்ப கேர்ஃபுல்லா யூஸ் பண்ணணும்பா... அடுத்த பாட்டு...

மனிதனாக வாழ்ந்திட வேண்டும்
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா
தனியுடமை கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா

-கேட்குறப்பவே நரம்பைத் தெறிக்க வைக்குற பாட்டுப்பா இது. மொத்த வாழ்க்கைக்கும் இந்த மூணு பாட்டும் போதும்ப்பா!''
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: விகடன் மேடையில் வடிவேலு - கேள்வி பதில்

Post by நண்பன் on Sat 19 Nov 2011 - 10:34

மிகவும் அருமையாக உள்ளது கேள்வியும் பதிலிலும் நகைச்சுவை கலந்த உண்மைகள் பகிர்வுக்கு நன்றி

இறுதியில் கருத்துள்ள பாடல்கள் தந்துள்ளீர்கள் அதற்கும் நன்றி
வாழ்க வடிவேல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விகடன் மேடையில் வடிவேலு - கேள்வி பதில்

Post by jasmin on Sat 19 Nov 2011 - 11:30

நல்ல பதில்தான்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: விகடன் மேடையில் வடிவேலு - கேள்வி பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum