சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

வெயில் வேலையும் அவசியம் தான்

View previous topic View next topic Go down

Sticky வெயில் வேலையும் அவசியம் தான்

Post by gud boy on Fri 25 Nov 2011 - 8:54

நகர வாழ்க்கைச் சூழ்நிலையில் வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்! வெயிலுக்கு முன்பாகவே அலுவலகத்தை அடைந்து பகல் முழுக்க ஏசி அறையில் அடைந்துகிடந்து மாலையில் வீடு திரும்புவதுதான் பெரும்பாலானோரின் வாடிக்கையாகிப் போனது. இதனால் சருமத்தில் வெயில் படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!

'' 'ஆஸ்டியோபெரோசிஸ்' (Osteoporosis) என்னும் 'எலும்பு திண்மைக் குறைவு நோய்' ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே நம் சருமத்தில் சூரிய ஒளி படாமல் இருப்பதுதான். உடலுக்குத் தேவையான 'வைட்டமின் டி' சத்து குறையும்போது எலும்புகள் பலவீனப்பட்டு வலுவிழந்து போய்விடும். இயற்கையிலேயே சூரிய வெளிச்சம் மூலம் 'வைட்டமின் டி' கிடைக்குமாறு பழக்கப்படுத்திக் கொண்டால் பெரும்பான்மையான நோய்கள் நம்மை நெருங்காது ஆரோக்கியமே நம்மை அரவணைத்துக் கொள்ளும்'' என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பழனி. தொடர்ந்து பேசியவர்...

''சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-தான் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். அந்த வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைக்காதபோது இடுப்பு எலும்பு முதுகுத் தண்டு கை எலும்புகளை இந்நோய் மிக விரைவில் தாக்கும்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் 50 வயதைக் கடக்கும் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரையும் இந்த நோய் மிக எளிதில் தாக்குகிறது. மெனோபாஸ் ஸ்டேஜை அடையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழந்துபோவதால் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் இந்த நோய் எளிதில் தாக்குகிறது.ஏற்கெனவே எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பவர்கள் எலும்பில் அடிபட்டு நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்களை இந்த நோய் தாக்கும். உடம்பில் ஜீரண சக்தி (Malabsorption syndromes) குறைபாடு இருந்து ஊட்டச் சத்துக்கள் உடம்பில் சேராமல் போகும்போது இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் கால்சியம் குறைபாடு சிறுநீரகப் பாதிப்பு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிப்பு ஆஸ்துமா நோய்க்காக எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு வகை மாத்திரைகளாலும் ஆஸ்டியோபெரோசிஸ் நோய் ஏற்படலாம்.

இந்த நோய்க்கு வலி கட்டி போன்று எந்த அறிகுறியும் இல்லை. அதனால் எளிதில் இந்த நோய் பாதிப்பைக் கண்டறிய முடியாது. நமக்குத் தெரியாமலே நமது எலும்பில் பாதிப்பினை ஏற்படுத்துவதால் இது ஒரு 'சைலன்ட் கில்லர்'! விபத்தின்போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்று டாக்டர் எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போதுதான் ஆஸ்டியோபெரோசிஸ் பாதிப்பு உள்ளதே பலருக்கும் தெரியவருகிறது. மிகவும் பலவீனமாக இருப்பவர்கள் தும்மினாலோ அல்லது குனிந்து ஒரு பொருளை எடுப்பதனாலோகூட எலும்பு முறிவு ஏற்படலாம்'' என்றவர் இந்த நோய் வராமல் தடுக்கும் வழிகளையும் கூறினார்.

''எந்த நேரமும் அலுவலகத்திலேயே அடைந்து கிடக்கக் கூடாது. சூரிய ஒளி தினமும் நம் சருமத்தில் படுமாறு பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். அல்லது வைட்டமின் - டி சத்துள்ள மாத்திரைகள் சாப்பிடலாம். கால்சியம் சத்து மிகுந்த பால் தயிர்இ வெண்ணெய் சோயா பீன்ஸ் புதினா கீரை வகைகள் மற்றும் பச்சைக் காய்கறி வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 60 வயதைக் கடந்த ஆண்கள் 50 வயதைத் தாண்டியப் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

ஆஸ்டியோபெரோசிஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் முறிந்த எலும்பினை நேராக்கி ஆபரேஷன் செய்து இணைக்கலாம். அல்லது எலும்பினை பசை போட்டு ஒட்ட வைக்கும் 'வெஸ்டிபுலர் நியூரோனிட்ஸ்' (Vestibular neuronitis) சிகிச்சை அளிக்கலாம்.
உலகில் மூன்று நிமிடத்திற்கு ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சில மிகப்பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே

இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அலுவலகமே கதி என கட்டிப் போட்ட கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் வெளியே வெயிலில் சிறிது நேரம் இருக்கும்படியான பணிகளையும் விரும்பி ஏற்று செய்யுங்கள். குழந்தைகளையும் வெயிலில் ஓடியாடி விளையாட விடுங்கள். எலும்புகள் திண்மைக் குறைவு அடையாமல் திடகாத்திரமாக இருக்கும்!'' என்கிறார் டாக்டர் பழனி.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum