சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 22 Jan 2018 - 18:26

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

அரசு உயர்த்திய பஸ் கட்டணம் கொஞ்சம் :அதிகாரிகள் உயர்த்தியிருப்பது எக்கச்சக்கம்

View previous topic View next topic Go down

Sticky அரசு உயர்த்திய பஸ் கட்டணம் கொஞ்சம் :அதிகாரிகள் உயர்த்தியிருப்பது எக்கச்சக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Nov 2011 - 6:27

கோவையில் சாதாரண பஸ்கள் அனைத்தையும் "எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றம் செய்து, அரசு உயர்த்தியதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, கோவை அரசு போக்குவரத்துக்கழகத்துக்குச் சொந்தமான பஸ்களுக்கு எக்ஸ்பிரஸ், எல். எஸ்.எஸ்., பாயின்ட் டூ பாயின்ட், பை-பாஸ் ரைடர், சூப்பர் டீலக்ஸ் என்று புதுப்புது பெயர்கள் சூட்டப்பட்டு, அநியாயமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுபற்றி, சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் கேள்வி எழுப்பினர். இப்போது அ.தி.மு.க., ஆட்சியில் மீண்டும் அதே காட்சி தொடர்கிறது.கடந்த 18ம் தேதியிலிருந்து, பஸ் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சாதாரண பஸ்களில் ஒரு கி.மீ.,க்கு 28 பைசாவாக இருந்த கட்டணம், 42 பைசாவாகவும் (50%), எக்ஸ்பிரஸ் பஸ்களில் 32பைசாவிலிருந்து 56பைசாவாகவும் (75%),சொகுசு பஸ்களில் 38பைசாவிலிருந்து 60 பைசாவாகவும் (58 %) உயர்த்தப்பட்டது.
டவுன் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 3லிருந்து 7 ரூபாயாகவும் உயர்த்த அரசு அனுமதித்துள்ளது. ஆனால், கோவையில் எல்லா அரசு பஸ்களிலும் தாறுமாறாக, வரைமுறையின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப, சாதாரண பஸ்களில் பெரும்பாலானவை, "எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளன.இரவோடு இரவாக "ஸ்டிக்கர்'களைத் தயார் செய்து ஒட்டி விட்டனர். உதாரணமாக, ஈரோடுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களுமே "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலேயே இயக்கப்படுகின்றன. அரசின் கட்டண உயர்வுப்படி 42 ரூபாய் வசூலிப்பதற்குப் பதிலாக, 56 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
80 கி.மீ.,க்கு அதிகமுள்ள பகுதிகளுக்கு "எக்ஸ்பிரஸ்' பஸ்களை இயக்க அரசு அனுமதித்துள்ளதைப் பயன்படுத்தி, இந்த கட்டண உயர்வை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தன்னிச்சையாக உயர்த்தி இருக்கின்றனர். ஆனால்,"எக்ஸ்பிரஸ்' பஸ்களுக்கான எந்த விதிமுறையும், நடைமுறையும் இதில் கடைப்பிடிக்கப்படுவதே இல்லை.
எக்ஸ்பிரஸ் பஸ்களில், இரு பஸ் ஸ்டாப்களுக்கான இடைவெளி 25 கி.மீ., இருக்க வேண்டும்; ஆனால், காந்திபுரத்திலிருந்து ஹோப் காலேஜ் செல்வதற்குள் 5 இடங்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இடையில் எங்கெங்கே மக்கள் கை காட்டினாலும், அவை நிறுத்தப்படுகின்றன. இதனால், வழக்கமான நேரத்துக்கே இந்த பஸ்கள் செல்கின்றன.

கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, இவற்றின் பெயர்களை மாற்றி, போக்குவரத்துக்கழகத்துக்கு கூடுதல் வருவாயையும், அ.தி.மு.க., அரசுக்கு , அதிருப்தியையும் அதிகாரிகள் சம்பாதித்துக் கொடுத்துள்ளனர். உண்மையில், "எக்ஸ்பிரஸ்' பஸ்களாக இயக்குவதற்கு நேர அட்டவணையை அனுமதிக்கும் அதிகாரம், கலெக்டருக்கு மட்டுமே உண்டு.இதேபோல, கோவை நகரில் வலம் வரும் 600க்கும் அதிகமான டவுன் பஸ்களிலும் பெரும்பாலான பஸ்கள், "எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றப்பட்டு, குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதனால், கூலி வேலைக்குச் செல்வோரும், மாதச் சம்பளம் வாங்குவோரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.பஸ் கட்டணத்துடன், பால் விலை, மின் கட்டணம் உயர்ந்தாலும் இவர்களில் யாருடைய சம்பளமும் சிறிதும் உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி கிளம்பியுள்ளது. அரசின் அறிவிப்பைப் பயன்படுத்தி, அதிகாரிகள் செய்துள்ள அத்துமீறலே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பெயர் மாற்றம் மூலம் நடந்துள்ள கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வருக்கு கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதியுள்ளார்.

இதே கருத்தை, கோவையிலுள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படியும் கூத்து நடக்குது!மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு 7.00 மணியளவில், பிரஸ் காலனியிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் புறப்பட்ட சாதாரண டவுன் பஸ்சில் மக்கள் பலரும் ஏறியுள்ளனர். டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர், சொகுசு பஸ் கட்டணத்தை (19 ரூபாய்) கேட்டுள்ளார். அந்த பஸ்சில் 10 ரூபாய் கட்டணம் என்று நினைத்து ஏறிய மக்கள், இதனால் கொதிப்படைந்தனர்.அதற்கு அந்த கண்டக்டர், "இந்த பஸ், சொகுசு பஸ் "ரிப்பேர்' ஆனதற்காக வந்த மாற்று பஸ்; அதனால்தான் இந்த கட்டணம்,' என்று "கூலாக' பதில் கூறியுள்ளார். கொந்தளித்த மக்கள், இறங்கி மறியல் செய்ய முயன்ற பின்பே, சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.இஷ்டம்போல் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், பல பஸ்களில், கண்டக்டர்களுக்கே பெரும் குழப்பம் உள்ளது. ஈச்சனாரி வழியாகச் செல்லும் அரசு டவுன் பஸ்சில், கண்டக்டர் ஒருவர் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து எடுத்துப் பார்த்து, டிக்கெட் வசூலித்ததைப் பார்த்த கல்லூரி மாணவர்கள், "என்ன சார்! நீங்களும் "பிட்' அடிக்கிறீங்க' என்று கிண்டல் அடித்துள்ளனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum