சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நேற்று... இன்று... நாளை!

Go down

Sticky நேற்று... இன்று... நாளை!

Post by பார்த்திபன் on Thu 5 Jan 2012 - 9:03

''என்னுடைய பூர்வீகம் பழனி. எட்டு வருஷத்துக்கு முன்னாடி வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இங்கேயே செட்டில் ஆயிட்டேன். மூணு வருஷத்துக்கு முன்னாலதான் எனக்கு கல்யாணமாச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரையும்போல நானும் கணக்கு பாக்காம செலவு பன்ணிட்டுத்தான் இருந்தேன். ஆனா, இப்ப அந்த மாதிரி செலவு பண்றதில்ல. எதிர்காலத்துக்கு சேமிக்கணும். அதுக்கு இன்னும் அதிகம் சம்பாதிக்கணும், முதலீடு பண்ணணும்'' என்ற சிந்தனையுடன் பேசத் தொடங்கினார் சரவணன்.
சரவணனுக்கு வயது 29. அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளர். மாத வருமானம் 27,200 ரூபாய். பிடித்தம் போக கையில் 25,600 ரூபாய் வாங்குகிறார். மனைவி பூங்கொடி (வயது 29) எம்.பில் பட்டதாரி. தற்போது வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். சரவணனுக்கு கரூரில் 1,200 சதுர அடி மனை உள்ளது. தற்போதைய மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். வங்கி வைப்பு நிதியில் 30,000 ரூபாய் வைத்திருக்கிறார். லாக்கரில் 18 சவரன் தங்கம் இருக்கிறது. மதிப்பு சுமார் 3.5 லட்ச ரூபாய்.
எதிர்கால தேவைகள்...
''பெற்றொருக்கு வயதாகி விட்டது, வெளியில் செல்வதற்கு வசதியாக கார் வாங்க வேண்டும். அதை இன்னும் ஒரு வருடத்திற்குள் வாங்கினால் நல்லது. சொந்த ஊரான பழனியில் 2,400 சதுர அடி மனை வாங்க வேண்டும். 20-25 லட்ச ரூபாயில் சென்னையில் ஃபிளாட் வாங்க வேண்டும். ஓய்வு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருவதற்கு முதலீடு செய்ய வேண்டும்'' என்று தனது எதிர்காலத் தேவை களை தெள்ளத் தெளிவாக சொன்னார் சரவணன்.
இவரது குடும்ப நிதி நிலையை வைத்து, வரவுக்கு ஏற்றபடி செலவு செய்து, கூடுதல் வருமானத்துக்கு என்ன வழி, எதில் முதலீடு செய்யலாம்? என ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர், ரமேஷ்பட்.
சென்னையில் ஃபிளாட் வாங்க...

''சிக்கனமாக செலவு செய்து முதலீட்டை பெருக்க வேண்டும் என்று நினைக்கிறார் சரவணன். சரியான திட்ட மிடல் இல்லாததால் இவரால் நினைத்த காரியத்தைச் சரியாக செய்ய முடியவில்லை. வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்று பார்த்து அதற்குள் வாழ்க்கையை கச்சிதமாக நடத்துவதுதான் சாமர்த் தியமான விஷயம். அதிலும் எதிர்காலத்துக்கான சேமிப்பே, நம் முதல் செலவாக இருப்பது மிக முக்கியம். இதை மனதில் நிறுத்தியபடி சரவணன் தனது வாழ்க்கை பாதையில் பயணித் தால் நினைத்தது நடந்தேறும். சென்னையில் 25 லட்ச ரூபாயில் ஃபிளாட் வாங்க வேண்டும் என்பது சரவணனின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.
இந்த ஆசையை இன்னும் ஐந்து வருஷத்திற்குள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இவரது குடும்ப சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது, இவர் எதிர்பார்க்கும் தொகை பெரியதாகவும், காலம் குறை வாகவும் இருக்கிறது. இந்த தேவையை நிறைவேற்றிக் கொள்ள ஒரே வழி, வங்கி மூலம் கடன் வாங்குவதுதான். வீடு வாங்கும்போது ஆரம்பத் தொகை 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்தப் பணத்துக்கு இப்போதிருந்தே முதலீட்டை தொடங்க வேண்டும். மாதம் 5,600 ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் எஸ்.ஐ.பி. முறையில் சிறந்த ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால், முன்பணம் செலுத்த தேவையான தொகை கிடைத்துவிடும். மீதி 20 லட்ச ரூபாய்க்கு வங்கி கடன் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக இவர் 15 வருடத்துக்கு 10% வட்டியில் இ.எம்.ஐ மாதம் சுமார் 22,000(வட்டி மாறுதலுக்கு உட்பட்டது) ரூபாய் கட்ட வேண்டி வரும்.

சரவணனின் பெற்றோர் பழனியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு வருடத் திற்குள் கார் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஏழு லட்ச ரூபாயில் நல்ல காராக வாங்க வேண்டும் என்கிறார். இன்னும் ஒரு வருடத்திற்குள் இவ்வளவு அதிக பணத்தை இவரால் சம்பாதிக்க இயலாது. இதனால் கார் வாங்கும் ஆசையை இன்னும் மூன்று ஆண்டுகள் தள்ளிப் போடுவது தான் நல்லது. அதே நேரத்தில், கார் வாங்குவதற்கான முன்பணத்துக்கான முதலீட்டை தள்ளிப்போட வேண்டாம். மாதம் 4,400 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வர வேண்டும். மூன்றாண்டு கழித்து இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும். மீதி 5 லட்ச ரூபாய்க்கு வங்கியில் வாகனக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக இவர் ஐந்து வருடத்துக்கு மாதம் 11,250 ரூபாய் இ.எம்.ஐ கட்ட வேண்டி வரும்.
எதிர்காலத் தேவை மற்றும் முதலீட்டுக்காக சொந்த ஊரான பழனியில் தலா 1,200 சதுர அடியில் இரண்டு மனை வாங்கிப் போட வேண்டும் என்கிறார் சரவணன். கரூரில் இடம் தேவையில்லை என்று நினைப்பதால் அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் பழனியில் இடம் வாங்கிப் போடலாம் என்ற அவரின் முடிவு சரிதான்.
கரூரில் இடம் வாங்குவதற்காக 93,000 ரூபாய்க்கு வங்கியில் நகைக் கடன் வாங்கியிருக்கிறார். அதற்காக மாத வட்டி 930 ரூபாய் கட்டி வருகிறார். 10 மாதத்திற்குள் இந்த கடனை முழுவதுமாக கட்டி முடிக்க வேண்டும் என்கிறார். தற்போது செய்துவரும் செலவுகளைக் குறைத்து சேமிக்க தொடங்கினால், 10 மாத இறுதியில் குறிப்பிட்ட தொகை கையிலிருக்கும். இதுபோக வங்கி வைப்பு நிதியில் இருக்கும் 30,000 ரூபாய் மற்றும் பண்டிகையின்போது போனஸ் தொகையைக் கொண்டு இவரால் நகைக் கடனை அடைத்துவிட முடியும்.

இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்ளைம் தன் பெயரிலும் மனைவி பூங்கொடி பெயரிலும் இரண்டு எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடு பாலிசிகளை எடுத்திருக்கிறார். இதற்காக இவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 1,479 ரூபாயை பிரீமியமாக கட்டி வருகிறார். தன் பெயரில் ஒரே ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை (கவரேஜ் ஒரு லட்சம்) மட்டும் எடுத்து வைத்திருக்கிறார். இந்த பாலிசிகளைத் தொடர்ந்து கொண்டு, சரவணனின் எதிர்கால பாதுகாப்புக்காக இன்னும் 57 லட்ச ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஆண்டு பிரீமியம் 5,985 ரூபாய் கட்ட வேண்டி வரும்.
சரவணன் இதுவரை தனக்காகவும், மனைவிக்காகவும் எந்தவொரு மெடிக்ளைம் பாலிசியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இனியும் அப்படியே இருந்தால் சரிவராது. அதனால் இருவருக்கும் சேர்த்து 2 லட்ச ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆண்டு பிரீமியம் 3,188 ரூபாய்.
ஓய்வு காலத்துக்கு...
பணி ஓய்வின்போது மாதம் 50,000 ரூபாய் வருமானம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் சரவணன். இதற்காக சுமார் 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் மாதம் 3,100 ரூபாய் வீதம் 26 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதுபோக, அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் பணிக்கொடை, பி.எஃப் பணத்தை வைத்து கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைக் கழிக்கலாம்.
பூங்கொடி எம்.பில் படித்திருக்கிறார் என்பதாலும், ஏற்கெனவே டியூஷன் எடுத்த அனுபவம் இருப்பதாலும் இவரால் குறைந்தபட்சம் மாதம் சுமார் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யவும் கணவரின் நிதிச் சுமையைக் குறைக்கவும் பூங்கொடி கூடுதல் வருமானத்துக்கு வழி செய்து கொண்டால் பணப் பற்றாக்குறை ஏற்படாது. சரவணனின் வருமானத்தில் வீட்டுச் செலவு 17,900 போக, மீதி இருக்கும் 7,700 ரூபாயுடன் பூங்கொடி சம்பாதிக்கப் போகும் சுமார் 6,000 ரூபாயைச் சேர்த்தால், அனைத்து முதலீடுகளுக்கும் தேவையான தொகை கிடைத்துவிடும்.
இதுபோக சரவணனுக்கும் சம்பளம் அதிகரிக்கும். அவருக்கு ஆண்டுக்கு 15% வருமானம் அதிகரிக்கும், மேலும் பூங்கொடிக்கும் டியூஷன் வருமானம் அதிகரிக்கும். மேலும், கார் மற்றும் ஃபிளாட் வாங்க முன்பணத்துக்காக முதலீடு செய்து வரும் தொகை அதன் காலம் முடிந்ததும் நின்று விடும். அந்தத் தொகையையும் சேர்த்து கார் மற்றும் வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.-யை எளிதாகக் கட்டலாம். மேலும் சரவணனின் சம்பள அதிகரிப்பும் இதற்கு கைகொடுக்கும். வெற்றி பெற வாழ்த்துகள்!
தொகுப்பு: செ.கார்த்திகேயன்
avatar
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: நேற்று... இன்று... நாளை!

Post by ஹம்னா on Thu 5 Jan 2012 - 18:10

நல்ல கடுரை ஆனால் இப்படி வாழ முடியுமா என்பது சந்தேகமே. ##*


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum