சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு

Go down

Sticky மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு

Post by *சம்ஸ் on Mon 9 Jan 2012 - 6:35

நாட்டின் தலைவனாகத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டி யாகவிருந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தமது பொறு ப்பும் கடமையும் ஆகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரி வித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்த ஜனாதிபதி; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதும் தமது பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.

அம்பாறை தெஹியத்த கண்டியில் நேற்று மகாவலி விவசாயிகளுக்குக் காணி உறுதி பத்திரங்களை வழங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பீ. தயாரத்ன, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுனர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரைநிகழ்த்திய ஜனாதிபதி :- கடந்த 30 வருட காலம் கொடூரமான பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய யுகமொன்றை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த சுதந்திரத்தின் முழுமையான பலனை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இன்றைய சமாதான சுழலில் விவசாயத்தில் முன்னேற்றமடையவும் பிள்ளைகளின் கல்வியில் அவதானம் செலுத்தவும் அதேவேளை, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.

நாம் எந்தளவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தாலும் மது பாவனையிலிருந்து மீட்டெடுக்க முடியாதுள்ளது என்பது கவலையுடன் தெரிவிக்க வேண்டிய விடயமாகும். தமது தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை மதுவுக்கு செலவிடாமல் அல்லது முறையற்ற செலவுகளில் விரயமாக்காமல் வருமனத்தை முகாமைத்துவப்படுத்துவது மிக முக்கியமாகும். இது விடயத்தில் எமக்கு விசேட பொறுப்பு உள்ளது.

இந்த நாட்டின் 100 ற்கு 23 வீத விவசாயிகள் மகாவலி வலயங்களிலேயே உள்ளனர். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.

நாம் உரமானியம் உட்பட சகல சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அதனால்தான் உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டபோதும், எரிபொருள் விலையதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் அந்த பாதிப்புகளுக்கு நாம் அகப்படவில்லை.

அதில் மகாவலி விவசாயிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் மீது கூடிய அவதானத்தைச் செலுத்துவது எமது கடமையாகும். கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் உங்களால் நான் தெரிவு செய்யப்பட்டவன். இதனால் உங்கள் மீது எனக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இன்று வழங்கப்படும் காணி உறுதிப் பத்திரம் மிகவும் பெறுமதியானவை. இதனை எவருக்காவது விற்றுவிட முனைய வேண்டாம். நாம் எமது காணியை யாருக்காவது அடகு வைத்து தூரப் பிரதேச நகரில் வாழ்வதல்ல வாழ்க்கை. இதனால் நீங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு தடைப்பட்டு விடும் என்பதைச் சிந்தியுங்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பின் கையில் கிடைத்துள்ள இந்த சொத்தை உங்கள் குடும்ப நலனுக்காக நாட்டின் நலனுக்காக உபயோகியுங்கள்.

காணி உறுதி இதுவரை கிடைக்காத சகலருக்கும் அதனைப் பெற்றுக்கொடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum