சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்

Go down

Sticky ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்

Post by *சம்ஸ் on Tue 24 Jan 2012 - 6:26

ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய 'சாத்தானின் கவிதைகள்' என்கிற நாவலிலிருந்து சில பகுதி களை மேடையில் வாசித்த 4 எழுத் தாளர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பதால் புகார் தொடர்பாக தொடக்க நிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருஷ்டி குற்றச்சாட்டு: இதனிடையே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் தகவல் இருப்பதாக ராஜஸ்தான் பொலிஸார் கூறியது, தம்மை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுப்பதற்காக நடத்தப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதி என்று சல்மான் ருஷ்டி குற்றம்சாட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்கு ருஷ்டி திட்டமிட்டிருந்தார். கூலிப்படையினரைக் கொண்டு ருஷ்டியைக் கொல்வதற்கு நிழலுலக தாதாக்கள் திட்டமிட்டிருப்பதாக மும்பை உளவுப் பிரிவுத் தகவலை மேற்கோள் காட்டி ராஜஸ்தான் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஜெய்ப் பூர் வருகையை ருஷ்டி ரத்து செய்தார்.

ஆனால் அப்படியொரு உளவுத் தகவல் ஏதும் இல்லை என்று மும்பை பொலிஸார் சனிக் கிழமை கூறினர். இதை யடுத்து ராஜஸ்தான் பொலிஸார் தம்மிடம் பொய் சொல்லி ஏமா ற்றிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ருஷ்டி பதிவு செய்திருக்கிறார்.

யாரோ சிலரின் வழிகாட்டுதலின்படி ராஜஸ்தான் பொலிஸார் செயல்படுகின்றனர். அவர்களுக்கு யார் இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இலக்கிய விழாவில் எனது புத்தகத் திலிருந்து சில பகுதிகளை வாசித்த 4 எழுத்தாளர்களையும் கைது செய்ய பொலிஸார் முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பத்மநாபர் கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும்பணி பெப்ரவரியில் தொடக்கம்.

பத்மநாப சுவாமி கோயில் பொக் கிஷங்களை அறிவியல் ரீதியாக மதிப்பீடும் பணியை அடுத்த மாதம் தொடங்க உச்ச நீதிமன்றம் அமைத்த மதிப்பிடும் குழு முடிவு செய்திருக்கிறது.

பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை எடுக்கும் பணியை மேற்பார்வை செய்வதற்காக ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதுபோல பொக்கிஷங்களை மதிப்பிடுவதற்காக மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த இரு குழுக்களின் கூட்டுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிப்பிடும் குழுவின் தலைவர் எம்.வி. நாயர், "உண்மையான மதிப்பிடும் பணி தொடங்குவதற்கு முன் சோதனை அடிப்படையில் மாதிரி மதிப்பிடும் பணியைச் செய்வோம்" என்றார். பொக்கிஷங்களை மதிப்பிடும் பணிக்காக கேரள மின்னணு நிறுவனம் (கெல்ட்ரான்) வழங்கிய உபகரணங்கள் பற்றி ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த உபகரணங்கள் திருப்தியாக உள்ளன. பெப்ரவரி 17 அல்லது 18ம் திகதி மதிப்பிடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் கண்டித்ததையடுத்து காரட் மீட்டர் உள்ளிட்ட நவீன உப கரணங்களை வாங்குவதற்காக கெல்ட்ரான் நிறுவனத்துக்கு ரூ. 2.5 கோடியை கேரள அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum