சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சிறந்த பொருளாதார வளர்ச்சி உலகில் 4 வது இடத்தில் இலங்கை

Go down

Sticky சிறந்த பொருளாதார வளர்ச்சி உலகில் 4 வது இடத்தில் இலங்கை

Post by *சம்ஸ் on Thu 26 Jan 2012 - 6:33

சிறந்த பொருளாதார வளர்ச்சி உலகில் 4 வது இடத்தில் இலங்கை
அடுத்த வருடத்தில் இரண்டாமிடத்தை பிடிப்பதே இலக்கு
மர்லின் மரிக்கார்
சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைபடி உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இலங்கை விளங்குவ தாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

தற்போது உலகில் சிறந்த பொரு ளாதார வளர்ச்சி மிக்க நாடாக சீனா விளங்குவதாகக் குறிப்பிட்ட அமைச் சர் அடுத்த வருடம் இரண்டாம் இடத்தை இலங்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையும், சீனாவும் தவிர்ந்த எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திரு ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்தும் ஒரே நிலையிலேயே பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்கு நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன.

2010ம் ஆண்டு நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியை விடவும் 2011ம் ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெரிதும் குறைவடைந்து காணப்பட்டன. எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதன் பயனாக இக்காலப் பகுதியில் சராசரியாக நான்கு பேர் வாழக் கூடிய ஒவ்வொரு குடும்பமும் இருநூறு, முன்னூறு ரூபாவை மீதப்படுத்தக் கூடியதாக இருந்தது.

2009ம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து நாம் கோழி இறைச்சியை இறக்குமதி செய்தோம். இப்போது கோழி இறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.

2010ம் ஆண்டில் நாம் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்தோம் இன்று வெளி நாட்டுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். இதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சோமாலியா நாட்டுக்கு 750 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். சோமாலியாவுக்கென கொழும்பு துறைமுகத்தில் தற்போது அரிசி ஏற்றப்படுகின்றது.

உல்லாசப் பயணிகளின் வருகை முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகாரித்துள்ளது. வேலையின்மை, பணவீக்கம் என்பன குறைவடைந்துள்ளன. தலா வருமானம் அதிகரித்துள்ளது. டொக்டர்கள், தாதியர் உட்பட முழு சுகாதார சேவையும் மேம்பட்டுள்ளது. வீதிகள், மின் மற்றும் குடிநீர் வசதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளுமே வளர்ச்சி அடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது. ஆனால் இலங்கை உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இப்போதுள்ளது. அடுத்த வருடம் இரண்டாமிடத்தை அடைய முடியுமென எதிர்பார்க்கின்றோம். ஆனால் சீனா முதலிடத்தில் உள்ளது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, தகவல், ஊடக அமைச்சின் செயலாளர் டப்ளியூ. பி. கணேகல அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் நாயகம் பேராசிரியர் ஆரியசேன அத்துகல மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum