சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கே. ஏ. தங்கவேலு மனைவி நடிகை எம். சரோஜா மரணம்

Go down

Sticky கே. ஏ. தங்கவேலு மனைவி நடிகை எம். சரோஜா மரணம்

Post by நண்பன் on Wed 4 Apr 2012 - 5:47

கே. ஏ. தங்கவேலு மனைவி
நடிகை எம். சரோஜா மரணம்
பழம்பெரும் நடிகர் டனால் தங்கவேலுவின் மனைவி எம். சரோஜா காலமானார். சென்னை தி.
நகரில் உள்ள வீட்டில் மாரடைப்பால் சரோஜாவின் உயிர் பிரிந்தது.
கணவர் தங்கவேலுவுடன் 300 படங்களில் நடித்துள்ளார் சரோஜா. கல்யாணப் பரிசு படத்தில்
தங்கவேலு, சரோஜா நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை.
நடிகர் தங்கவேலுவின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான எம். சரோஜா சென்னையில்
02.04.2012 அன்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
மயிலாடுதுறையைச் சேர்ந்த எம். சரோஜா 14 வயதில் நடிக்க வந்தார். மறைந்த இயக்குநர்
கே. சுப்பிரமணியம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஐம்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரை நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த மறைந்த நடிகர்
கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, காதலித்து
மணந்தனர் (1958).
அதன் பிறகு 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தனர். கல்யாணப் பரிசு, தேன் நிலவு
போன்ற படங்களில் இருவரின் நடிப்பும் இன்றைக்கும் திகட்டாத திரை விருந்து.
அமரர் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி, அரசிளங்குமரி, திருடாதே உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார் எம். சரோஜா. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அவர்
நடித்த படங்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகும்.
நடிகர் தங்கவேலுவும் எம். சரோஜாவும் இணைந்து நடித்து 1959ல் வெளிவந்த கல்யாணப் பரிசு
படம் இவர்களுக்கு ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தியது என்றால் அது
மிகையில்லை. சினிமாவில் மட்டுமின்றி இல்வாழ்க்கையிலும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து
வந்தனர்.
கடந்த செப்டெம்பர் 28, 1994ல் தங்கவேலு மரணமடைந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு,
மகள் சுமதியுடன் சென்னை பாண்டிபஜாரில் உள்ள மாசிலாமணி தெரு வீட்டில் வசித்து வந்தார்
எம். சரோஜா. சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கடந்த 2
மாதங்களாக அவர் உடல் நலக்குறைவாக இருந்தார்.

இந்நிலையில், அவர் திங்கட்கிழமை
(02.04.2012) மாலை 4.30 மணிக்கு காலமானார். எம். சரோஜாவின் உடலுக்கு தமிழ்த்
திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் நேற்று பிற்பகல் கண்ணாம்பேட்டை
சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum