சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Go down

Sticky அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Post by ahmad78 on Sat 7 Apr 2012 - 15:50

ஜூனியர் விகடன், 26.02.2012

'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!''



நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை.அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது!



அசினா பர்வீன்...

ஆனந்த விகடன் 07 மார்ச் 2012.

ந.வினோத்குமார், படம் : பொன்.காசிராஜன்



''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துவெச்சிருந்தேன்.ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்ன தும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசைஅவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த 3,052, சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப்பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!)



அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழவைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றிஇருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!

அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள்தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார்.



பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்த வள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கைவைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின.



''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந் ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக் குள் சர்சர் என சைக்கிள் விட்டுக்கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து.



''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர்கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார்.'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!''


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Post by gud boy on Sat 7 Apr 2012 - 19:56

பகிர்ந்தமைக்கு நன்றி..

அவளுடைய தந்தையின் வளர்ப்பிற்கு அவள் உதாரணம்..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Post by முனாஸ் சுலைமான் on Sat 7 Apr 2012 - 20:04

உண்மையில் எனக்கு கண்கலங்கியது அந்த சிறிசின் பொதுநலமும் இந்த வயதில் பரந்த சிறப்புமனமும் கண்டு அல்ஹம்துலில்லாஹ் நான் நினைத்தேன் அந்த சிறிமிக்கு யாரும் இலவசமாக பைக்கொடுக்க மாட்டாங்களா என்று ஆனால் கொடுத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள் எனது அருமை மகளின் பெயரும் அஸ்னா என்னும் போது நான் மேலும் சந்தோசமடைகிறேன் முடிந்தால் அந்த சிறுமியை என்னுடன் தொடர்பு கொள்ள வைக்கவும் munas209 @gmail.com #heart #heart
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Post by நண்பன் on Sat 7 Apr 2012 - 20:49

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Post by mufees on Sat 7 Apr 2012 - 21:21

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum