சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு!

Go down

Sticky தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு!

Post by முனாஸ் சுலைமான் on Sun 29 Apr 2012 - 20:23

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் நிரந்தர இருப்பு மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவா நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் ஜெனிவாவில் இருந்து மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் இந்த முயற்சிக்கு World Muslim foundation, Vital International, Islamic Relief organization, Centre Islamic de Geneva, The Foundation Cultural Islamic, Association Islamic de Suisse - Geneva, Muslim Rights and Relief Foundation (MRRF) உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் பங்குபற்றுவர் என்றும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக முன்னெடுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது எனவும் அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்கு விபரம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞ்சர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum