சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

தெஹிவளை பள்ளிவாசல் சம்பவம்! கோத்தபாயவின் உறுதிமொழியால் ஆறுதல் அடைந்த றிசாட்!!

Go down

Sticky தெஹிவளை பள்ளிவாசல் சம்பவம்! கோத்தபாயவின் உறுதிமொழியால் ஆறுதல் அடைந்த றிசாட்!!

Post by mufees on Sun 27 May 2012 - 20:43

May 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


முஸ்லிம்களின் மத வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். அத்துடன் இது குறித்து உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அத்துடன் தெஹிவளை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கவனத்திற்கும் இச் சம்பவத்தைக் கொண்டு வந்துள்ளார் அமைச்சர்.

இவை தொடர்பில் முஸ்லிம்கள் அச்சம் கொள்ள தேவையில்லையென்றும் இது குறித்து உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்ற உறுதியினையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியதாக அமைச்சர் றிசாட் குறிப்பிட்டார்.

தம்புள்ள, குருநாகல், தெஹிவளையில் என முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணயில் குறிப்பிட்ட சில பௌத்த தேரர்கள் உள்ளனர். இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

அத்துடன், தெஹிவளை மேயருடன் தொடர்புகொண்ட குறித்த பள்ளிவாசல் தொடர்பில் அமைச்சர் றிசாட் நீண்ட நேரம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, தெஹிவளை, கல் விஹாரை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு கல் எறியப்பட்டதற்கு உலமா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இப்பள்ளிவாசலில் சட்டத்துக்கு முரணாக மாடு அறுக்கப்பட்டால் அதனை நீதிமன்றத்திடம் முறையிடுவதை விடுத்து பௌத்த பிக்குகள் சட்டத்தை கையிலெடுப்பதும் கல்லால் வணக்கஸ்தலத்துக்கு எறிவதும் நாட்டின் அரசாங்கத்தை அவமதிப்பதாகும்.

இதன் மூலம் நாட்டில் பௌத்த பயங்கரவாதம் உருவாகுவதாகவே கருத முடியும். ஒரு வணக்கஸ்தலத்தில் சட்டத்துக்கு மாறாக ஏதும் நடைபெறுமாயின் அத்தகைய செயல்களில் ஈடுபடுவேரே கைது செய்யப்பட வேண்டுமே தவிர வணக்கஸ்தலம் மூடப்பட வேண்டும் என்பதை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்கமாட்டான்.

சில பௌத்த விகாரைககளுக்கு வரும் பெண்களை சில பௌத்த பிக்குகள் துஷ்பிரயோகம் செய்து கைது செய்யப்படும் செய்திகளை அடிக்கடி நாம் ஊடகங்களில் காண்கிறோம்.

அதற்காக சம்பந்தப்பட்ட விகாரையை மூடும்படி எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவுமில்லை கல் எறியவுமில்லை. மாறாக துஷ்பிரயோகம் செய்த பிக்குகளை கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டில் நீதி சரியாக செயற்பட்டது.

இந்த நிலையில் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை தொடர்ந்து குருணாகல், தெஹிவளை என இஸ்லாமிய வணக்கஸ்தலங்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டின் சமாதானத்துக்காக குரல் கொடுக்கும் எம்மை கவலையுற செய்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வேண்டி எந்த பௌத்த பிக்குவும் செல்லாத நிலையில் எமது உலமாக்கள் இருவரே விழுந்தடித்துக்கொண்டு சென்றனர்.

ஆனாலும் இன்று அத்தகைய உலமாக்களின் இஸ்லாமிய வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுகின்றன என்றால் அந்த உலமாக்கள் நாட்டுக்கு ஆதரவு தேடி ஜெனீவா வரை சென்றதை பௌத்த பிக்குகள் விரும்பவில்லையா என்ற கேள்வியே எழுகிறது.

எனவே, தெஹிவளை பள்ளிவாசல் மீதான கல்லெறி தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதோடு அரசாங்கம் தொடர்ந்தும் சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பதை பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum