சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!

Go down

Sticky 80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!

Post by ahmad78 on Thu 6 Sep 2012 - 16:27

80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!


“”உருவத்தைப் பார்த்து எடை போடா தீங்கப்பா… என்னை மாதிரி வயதான ஆளுங்கள்லயும் டேஞ்சரஸ் ஆளுங்க இருப்பாங்க”’’-என வாக்குமூலம் கொடுத்து அதிரவைத் திருக்கிறார்… 80 வயது கில்லாடிக் கிரிமினல் கிழவரான கண்ணன். காவி உடையில் சாந்தமாகக் காட்சிதரும் இந்த கிழவரின் ஜாதகங் களைக் கிளறிய காக்கிகள்… கிறுகிறுத்துப்போய் நிற்கிறார்கள். 29.7.2009 பகல் நேரம்.”"சார் போலீஸ் ஸ்டேஷனா? எங்க லாட்ஜ் ரூம் ஒன்னில்… பிணவாடை வருது. மர்டர் நடந்திருக்கும் போலிருக்கு சார். அறைக்கதவு லாக் பண்ணியிருக்கு”’’-சிதம்பரம் பாரி லாட்ஜின் மேனேஜர் பதட்டத்தோடு தகவல் கொடுக்க…அடுத்த கொஞ்ச நேரத்தில் எஸ்.பி.செந்தில்வேலன் தலைமையிலான போலீஸ் டீம்… அந்த லாட்ஜை முற்றுகை இட்டது.

கதவு உடைக்கப்பட்டு காக்கிகள் உள்ளே போனபோது… 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரத்தக் காயத்தோடு பிணமாய்க் கிடந்தார். தலையில் பலமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்தப் பட்டிருந்தது. கொல்லப்பட்டவரோடு 80 வயது பிராமணப் பெரியவர் ஒருவரும் தங்கி இருந்ததாக ரூம் பாய் சொல்ல… அவர்கள் கொடுத்திருந்த விலாசத்தை காக்கிகள் அலசினர்.
அது பொய் முகவரி என்பது தெரிந்தது. கொல்லப்பட்டவர் குறித்த தடயங்கள் கிடைக்காததால்… வழக்கு அப்படியே தேங்கி நின்றது.இந்த நிலையில் எஸ்.பி. செந்தில் வேலன் மாற்றலாகி ராமநாதபுரம் போய்… அங்கிருந்து தஞ்சைக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில்… தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி என்ற பெண்மணி கொடுத்த புகார் ஒன்று தற்செயலாக எஸ்.பி.செந்தில்வேலன் கண்ணில் பட்டது. தனது மாமனார் ராமசாமி என்பவரைக் காணவில்லை என அவர் புகாரில் குறிப்பிட்டி ருந்தார். உடனே அவரை அழைத்த எஸ்.பி…. சிதம்பரம் பாரி லாட்ஜ் விவகாரத்தைச் சொல்லி…’’”"அவர் உங்கள் மாமனாரா என பார்த்துவிட்டு வாருங்கள்”’’ என்றதும்… ராமசாமியின் ஒட்டுமொத்த குடும்பமும் அலறியடித்துக்கொண்டு சிதம்பரத்துக்கு ஓடியது.

காவல்நிலையத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து… அவர்தான் ராமசாமி என்று அடை யாளம் காட்டி.. கதறி அழுதனர். தஞ்சை வந்து அவர்கள் எஸ்.பி. செந்தில்வேலனிடம் தகவல் சொல்ல… நிமிர்ந்து உட்கார்ந்த எஸ்.பி…. ராமசாமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த காவிவேட்டிப் பெரியவர் பற்றி ராமசாமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். “”"அவர் வைத்தியர் கண்ணன். அவர் கூடத்தான் எங்க அப்பா எப்பவும் இருப்பார். அவர் நல்ல மனுசனாச்சே…”’ என ராமசாமியின் பிள்ளைகள் சொல்ல… எஸ்.பி.யோ.. இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான டீமை களமிறக்கினார்.

விசாரணையில் வைத்தியர் கண்ணன்… தஞ்சை நட்சத்திர நகர் முதல்தெருவில் 19-ஏ என்ற இலக்கத்தில் வசித்துவந்த தகவல் கிடைக்க… காக்கிகள் டீம் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் வைப்பான 60 வயது சந்திராவை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தது. சந்திராவோ “”புதுக்கோட்டையில் என் கணவரோடும் ரெண்டு மகள்களோடும் வசித்துவந்தேன்..85 ஆம் வருசம் எங்க குடும்பத்துக்கு பழக்கமான கண்ணன்,, சில உதவிகள் செய்து எங்க மனசில் இடம்பிடிச்சார். என் மகள்களுக்கு திருமணமான பின்… என்னை என் கணவரிடமிருந்து பிரித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்துட்டார். திடீர் திடீர்னு எங்கயாவது போவார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்”’என்று கண்ணைக் கசக்கினாள். இவளது போனுக்கு அடிக்கடி கண்ணன் வருவதை அறிந்த காக்கிகள் டீம்… செல்போன் டவர்களை கண் காணித்து கண்ணனின் நடமாட்டத்தை ட்ரேஸ் செய்தது. போலீஸ் எதிர்பார்த்தது போலவே சந்திராவை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிட்டு… கண்ணன் தஞ்சைக்கு சீக்ரெட்டாய் வர… கண்ணனை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தது போலீஸ்.

பக்திப் பழமாக… காவியில்… முதுமைத் தோற்றத்தில் இருந்த கண்ணன்… அடித்து விசாரிப்பதற்கெல்லாம் வாய்ப்பு தராமல் தானாகவே தனது குற்றங்களைப் பட்டியலிட… ஒருகணம் காக்கிகளே ஆடிப்போனார்கள். மிகவும் ஜோவியலாய்ப் பேச ஆரம்பித்த கண்ணன்…’’”"புடவை வியாபாரம், நாய்க்குட்டி வியாபாரம்னு நிறைய தொழில் பார்த்துட்டு.. கடைசியா சித்த வைத்தியத்துக்கு தாவினேன். அதுலதான் அலுங்காம காசு பாக்கலாம். பொதுவா வயதானவங்க… தாம்பத்ய உறவில் சரியா ஈடுபடமுடியலையேன்னு ஏங்குவாங்க. இதை சாதக மாக்கி… அவங்களோட பழகி… உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளைக் கொடுத்து அவங்களை வசப்படுத்துவேன். முடிஞ்சவரை கறந்துடுவேன். அதேபோல் குழந்தையில்லாத தம்பதிகள் வந்தா… கவுன்சிலிங் என்ற பெயரில் தனித்தனியா சந்திப்பேன். அப்ப பெண்களை சோத னைங்கிற பேர்ல கிளர்ச்சிக்கு ஆளாக்கி… மத்த ஆண் நண்பர்களை அவங்களோட இருக்க வைத்து ரசிப்பேன். சிலரை சூன்யம் வைச்சிருக் காங்கன்னு சொல்லி பயமுறுத்தி காசைப் பறிச்சிருக்கேன்.

ஒரு தரம் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்தப்ப.. பக்கத்து ரூமில் இருந்த ஒரு வியாபாரியை சிநேகம் பிடிச்சி… ஒன்னேகால் லட்ச ரூபாயைத் தூக்கிட்டுப் போய்ட் டேன். ஈரோட்டில் பக்கத்து ரூமில் இருந்த வியாபாரிக்கு ஒருத்தருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளைத் திருடினேன். ராஜபாளையத்தில் கடப்பாக்கல் வியாபாரி துளசியை பின்பக்கமாத் தாக்கி 75 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சேன். இதேபோல… ராமசாமி.. தான் கட்டும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க புதுவைக்குக் கூப்பிட்டார். வழியில் ஒருவேலையிருக்குன்னு சிதம்பரத்தில் அவரோட வந்து தங்கினேன். அவர்ட்ட 2 லட்சம் கடன் கேட்டேன். தரமாட்டேன்னு சொன் னார். அதனாலதான் அவருக்கு பிராந்தி வாங்கி கொடுத்து… மயக்கத்தில் இருந்த அவரை பின் தலையில் அடிச்சிட்டு முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொன்னேன். அவர் பணம் கொடுத் திருந்தா ஏன் கொல்லப்போறேன். என் வயசையும் உருவத்தையும் பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க. அதனால் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டுட்டேன். போலீஸ் தம்பிகளா… உருவத்தைப் பார்த்து பெருசுகளையும் நம்பாதீங்க”’என அந்த கிரிமினல் கிழவன் பேசப் பேச விசாரித்த காக்கிகள்தான் திகிலடித்துப்போனார்கள். வியூகம் அமைத்து கண்ணனைப் பிடித்த எஸ்.பி.செந்தில்வேலனோ “”கூடவே இருந்து நல்லா பழகி… நம்பிக்கையை உண் டாக்கி.. அப்புறம் கொலை கொள்ளையில் ஈடுபடற… வித்தியாசமான கிரிமினல் கண்ணன். இன்னும் கொலை கள்ல இவருக்கு சம்பந்தம் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum