சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

20 பிரதிநிதிகளுடனான ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தனிப்பட்டதொன்றா? ஐ.தே.க. கேள்வி

Go down

Sticky 20 பிரதிநிதிகளுடனான ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தனிப்பட்டதொன்றா? ஐ.தே.க. கேள்வி

Post by நண்பன் on Wed 26 Jan 2011 - 12:28



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது அமெரிக்காவுக்கான விஜயம் தனிப்பட்டதொன்றல்ல. 20 பிரதிநிதிகளுடன் சென்றிருக்கின்ற இந்த விஜயம் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. எனவே, இதன் வெளிப்படைத் தன்மையை நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.



எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கூறுகையில், அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிரேஜ் கடந்த வாரப் பகுதியில் இலங்கை வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.



ஆனாலும் அந்த சந்திப்பு தொடர்பிலான விடயங்கள் எதுவும் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லை. அவரது இந்த சந்திப்பின் பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயம் தனிப்பட்டது என்றே முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் தனிப்பட்ட விஜயமொன்றாக இருப்பின் அமைச்சர்கள் பிரதிநிதிகள் என 20 பேரடங்கிய குழுவுடன் சென்றிருப்பதுதான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதிலிருந்து இந்த விஜயம் தனிப்பட்டதென்றல்ல என்பதும் நிரூபணமாகின்றது.



நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதோ அல்லது அரசியல் தலைவர்கள் பிரமுகர்களை சந்திப்பதோ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் இதனை எம்மால் அவ்வாறு நோக்க முடியாதிருக்கின்றது. கடந்த 19 ஆம் திகதி பயணித்த அவர் இன்றுவரையில் நாடு திரும்பவில்லை. அவர் அமெரிக்காவின் ரகசிய அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார். அப்படியானால் இந்த ரகசிய அழைப்பு, ரகசிய பேச்சு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அர்த்தம் என்ன? அதுமட்டுமல்லாது தனிப்பட்ட விஜயம் என்ற பெயரில் ஜனாதிபதியும் அவருடனான பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் செலவிலேயே சென்றுள்ளனர்.



இவ்வாறு நாட்டுக்கும் மக்களுக்கும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் விடயங்களை ஏன் மூடி மறைக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறோம். இது தனிப்பட்ட விஜயம் தானா அல்லது உத்தியோகபூர்வ விஜயம் தானா என்பது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக மக்களிடத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும். தனிப்பட்ட விஜயம் என்று அரசாங்கம் கூறினாலும் அவ்வாறான விஜயத்தில் ஏன் 20 பேரடங்கிய பிரதிநிதிகளும் செல்ல வேண்டும் என்பதே எமது கேள்வியாகும். இது பாரதூரமான விடயமாகும். இதனை மூடி மறைக்க அரசாங்கம் முற்படக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்துகின்றது என்றார்



வீரகேசரி நாளேடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 20 பிரதிநிதிகளுடனான ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தனிப்பட்டதொன்றா? ஐ.தே.க. கேள்வி

Post by mini on Wed 26 Jan 2011 - 14:36

8) 8)
avatar
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum