சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 15:16

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Today at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Today at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

.

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்

View previous topic View next topic Go down

Sticky முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்

Post by veel on Sun 21 Oct 2012 - 22:09


முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்







கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள்
நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து
பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை
அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு
கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ
தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச்
சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

"தம்பி!
என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ
மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக்
கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த
நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்... டக்". கதவைத் திறந்தால் ஒரு
வழிப்போக்கன். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி
ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க்
கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன்.
இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது.
பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்"
என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம்
நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா.
நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச
அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா!
எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான்
அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக்
கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு
நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத்
திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச்
செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில்
நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக
அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து
விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக்
கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு
கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில்
மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.




நன்றி .உதயகுமார்

வேல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum