சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்...

Go down

Sticky மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்...

Post by Muthumohamed on Sun 23 Dec 2012 - 21:48

மேட்டூர் அணை மூடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் சம்பா
பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கர்நாடகம்
தமிழகத்திற்குரிய காவிரி நீரை தர மறுத்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம்
குறையத் தொடங்கியது. 32 அடியாக குறைந்ததைத் தொடர்ந்து குடிநீர் தேவையை
கருத்தில் கொண்டும், அணையில் மீன்வளத்தை காக்கவும் நீர் திறப்பு நேற்று
முன் தினம் இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 35
நாட்களுக்கு முன்னதாகவே நீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது
அறுவடைக்கு நெற் பயிர் தயாராகி வரும் நிலையில் நீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ளதால் கருகும் பயிரை காப்பாற்ற வழியின்றி விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர். மின்சார தட்டுப்பாடு நிலவுவதால், மின்மோட்டார் மூலம்
நீர்பாய்ச்சி பயிரை காப்பாற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது
குறித்து தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாறன்
கூறுகையில், டெல்டா பகுதியில் 10 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இன்னும்
40 நாட்களுக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில் அணை மூடப்பட்டுள்ளது. எனவே
பம்ப் செட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இனி தண்ணீர் பாய்ச்ச முடியும்.
அதுவும் தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தந்தால் 3 லட்சம் முதல் 4
லட்சம் ஏக்கர் வரை பயிர்களை காப்பாற்றி விடலாம். இல்லாவிட்டால் அந்த
பயிர்களை யும் காப்பாற்ற முடியாது. எப்படி பார்த்தாலும் 7 லட்சம் ஏக்கர்
சம்பா பயிர்கள் கருகி விடும் நிலையில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட
விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ஸீ25,000 நிவாரணம் வழங்க வேண்டும்
என்றார்.குடிநீருக்கு திறப்பு: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை 6 மணி முதல் குடிநீர் தேவைக்காக
வினாடிக்கு 1000கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 6 மெகாவாட்
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீன் வளம் குறை யும் என கவலை அடைந்த
மீனவர்கள், நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின்
நீர் மட்டம் 32.41 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 975 கன அடி வீதம்
நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 8.51 டிஎம்சி. மேட்டூர்
அணை வரலாற்றில் 1946ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அணையின் நீர்மட்டம் 6.4 அடியாக
இருந்தது, இதுவே அணை யின் நீர்மட்ட குறைந்த அளவாகும்.

தினகரன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum