சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

.

சாம்ராட் சம்யுக்தன்

View previous topic View next topic Go down

Sticky சாம்ராட் சம்யுக்தன்

Post by sivaji dhasan on Sat 29 Dec 2012 - 22:45

முன்னுரை :இது நான் கற்பனையாக உருவாக்குகிற மன்னர் காலத்துக் கதை . மன்னர் காலத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் , போர் வழிமுறைகள் , ராஜ தந்திரங்கள் , வீரம் , பண்பாடு , இவற்றை மாறாத வாசனையோடு கொடுக்க முயற்சி செய்கிறேன் . என்னுடைய இந்த புதிய முயற்சிக்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள் . நன்றி !இக்கதையின் தலைப்பு "சாம்ராட் சம்யுக்தன்" .*~~~~~~~~~~~~~~~~~ 1. வீரபுரம் ~~~~~~~~~~~~~~~~~~*வீரபுரம் :

சுற்றிலும் நதிகள் நிறைந்த ஒரு தீவு போன்ற நாடு. அந்த நதிகளில் தாமரையும் அல்லியும் பூத்துக் குலுங்கும் காட்சி, அவை தன் காதலனான சூரியனைப் பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்ததைப் போல் இருந்தது. அந்த நதிகளில் மீன் படைகள் போர்வீரர்களைப்போல அணிவகுத்து நீந்தின. மிதக்கும் வெந்நிறப்பூக்கள் போல அன்னங்களும் மேகங்கள் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. யானைகள் தங்கள் துதிக்கையால் தண்ணீரைப் பீய்ச்சு அடித்து தங்களுடைய குதுகலத்தை வெளிப்படுத்திய காட்சி ஒரு தற்காலிக நீர்வீழ்ச்சியை அங்கே உருவாக்கியது . புள்ளிமான்கள் அந்த நதிக்கரையோரம் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தன . எங்கு பார்த்தாலும் பச்சை போர்வையைப் போர்த்தியது போல் புல்வெளிகளும், முக்கனிகளான மா, பலா , வாழை மரங்கள் நிறைந்தும் காணப்பட்டன. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் அந்த வீர புர அழகை ரசித்துக் கொண்டிருந்தன.வீரபுரம் இயற்கை வளம் நிறைந்தது மட்டுமல்லாமல், பெயருக்கு ஏற்றார் போல வீரர்கள் நிறைந்த ஒரு சிற்றரசு . மற்ற சிற்றரசர்களைப் போல இவர்கள் கப்பம் கட்டி வாழ்வதில்லை.கண்ணுக்கெதிரே ஒரு போர்ப்படையே நின்றாலும் , யானைக்கூட்டத்தை எதிர்க்கின்ற சிங்கத்தைப் போல இவர்கள் அஞ்சாமல் நிற்பார்கள் .ஆண் குழந்தை பிறந்தால் , சிறு வயதிலிருந்தே போர்க்களப் பயிற்சி கொடுப்பார்கள் . அதனால் அவர்களின் பதினைந்து , பதினாறு வயதிலேயே ஒரு பெரிய போர்ப்படையை எதிர்க்கின்ற வீரம் வந்துவிடும். பெண்குழந்தை பிறந்தால் அவர்களை பண்பாட்டின் பொக்கிஷமாக வளர்ப்பார்கள் . ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வீர புரப் பெண்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . வீரத்தில் எப்படி சிறந்து விளங்கினார்களோ அதே போல கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினார்கள் .குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது .இப்போது கதைக்குள் போகலாம்.............********************மாலை நேரம் ....ஒரு பிரம்மாண்ட மைதானத்தில் வீரர்கள் பலர் போர்க்களப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த மைதானத்தின் நடுவே பல வீரர்கள் சுற்றி நிற்க, இரண்டு வீரர்கள் குருவின் மேற்பார்வையில் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் . அந்த வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் சுற்றி நின்று கொண்டிருந்த வீரர்கள் கரகோஷத்தை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் . வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் ஒருவன் இன்னொருவனை கீழே தள்ளி அவனுடைய நெஞ்சிற்கு நேரே வாளை நீட்டுகிறான் . இதுவே அவன் ஒரு எதிர் நாட்டு வீரனாக இருந்திருந்தால் இந்நேரம் அந்த வாள் அவன் நெஞ்சில் பாய்ந்திருக்கும் . உடனே சுற்றி நின்று கொண்டிருந்த வீரர்கள் " ரவிவர்மன் ! ரவிவர்மன் ! " என்று கோஷம் எழுப்பினார்கள் .ரவிவர்மன் : வீரபுரத்து இளவரசன்; இந்நாட்டின் எதிர் கால மன்னன்; பதினாறு வயதே நிரம்பிய ஒரு சிறந்த வீரன் .வெற்றி பெற்று விட்டு , தன் நண்பர்களிடம் சென்று,"சம்யுக்தன் வரவில்லையா ?" என்று கேட்டான். அவர்களில் ஒருவன், எப்படி வருவான் இளவரசே ! இன்றைக்கு அவன் மோத வேண்டியது தங்களுடன் அல்லவா ! வீட்டிலேயே பயந்து முடங்கி கிடப்பான். தங்களை வெல்ல பத்து வேங்கையின் பலம் வேண்டுமே. அப்படி ஒரு பலம் கொண்டவர் இப்பூவுலகில் யாருமில்லை என்றான் . அதைக் கேட்டு இளவரசனின் முகம் மலர்ந்தது .********************அப்போது தூரத்தில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. எல்லாரும் திரும்பி பார்த்தார்கள் . அங்கே புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு குதிரை வேகமாக வந்து கொண்டிருந்தது. அது வந்த வேகத்தைப் பார்த்தால் அது ஓடி வருகிறதா இல்லை பறந்து வருகிறதா என்று எல்லாரும் ஒரு கணம் திகைத்தார்கள் . அவர்கள் கண்கொட்டாமல் அந்த குதிரை வந்த திசையையே நோக்கிக்கொண்டிருந்தார்கள். கரு நிற மேகத்தைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும் மின்னல் போல புழுதிப்படலத்தை விலக்கிக்கொண்டு குதிரையில் ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது . அந்த உருவம் வீரர்களை நெருங்கி வர வர அதில் வருவது யார் என்று தெரிந்ததும் வீரர்களில் சிலரின் முகம் மலர்ந்தது; ஆனால் இளவரசரின் மலர்ந்த முகத்தில் சிறு மாறுதல் உண்டாயிற்று . குதிரை அவர்களின் அருகில் வந்ததும் தன் முன்னங்காலை உயரத் தூக்கி பலமாகக் கனைத்தது. அந்த முரட்டுக் குதிரையை அடுத்த நொடியில் கட்டுப்படுத்தி குதிரையில் வந்தவன் கீழே இறங்கினான். அவனைப் பார்த்ததும் வீரர்களின் ஆனந்தக் கூச்சல் இளவரசருக்கு அவர்கள் கொடுத்த கரகோஷத்தையும் மிஞ்சியது .அவன் குருவை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் .அவனுடைய கண்கள் எதிராளியை குத்திக் கிழிக்கும் கத்தியைப் போல கூர்மையாக இருந்தன. இந்திரனே அசந்து போகும் அளவுக்கு ஒரு ஆண்மையின் அழகு ; எடுப்பான தோள்கள்; சிங்கத்தைப் போன்ற கம்பீர நடை ....இவன் தான் நம் கதையின் கதாநாயகன் சம்யுக்தன்.குருவை நெருங்கி " தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் குருவே ! ": என்று கூறி பணிவாக வணங்கினான்.


குரு , " நீ இன்று யாருடன் மோத வேண்டும் என்று நினைவிருக்கிறதா "


சம்யுக்தன் , " நன்றாக நினைவிருக்கிறது குருவே. இன்று நம் இளவரசருடன் தான் நான் மோத வேண்டும் "


குரு " இன்று போட்டியை சற்று வித்தியாசமாக நடத்தப் போகிறேன். நீ இளவரசருடன் சேர்த்து இன்னும் இரண்டு பேருடன் மோதப் போகிறாய். தயாராக இருக்கிறாயா ?"


" நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறி விட்டு சம்யுக்தன் மைதானத்தின் நடுப்பகுதிக்கு செல்கிறான் .


இளவரசரும் அவருடன் இன்னும் இரண்டு வீரர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் . அந்த மூன்று பேரின் கண்களும் சம்யுக்தனை வெறி கொண்டு பார்த்தன.சம்யுக்தன் ஒரு சின்ன புன்னகையுடன் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். மற்ற வீரர்கள் அந்த சண்டையை ஆவலோடு எதிர்பார்த்து ஆழ்ந்த அமைதியுடன் காத்துக் கொண்டிருந்தார்கள் . ஒரு பூவிதழின் மேல் உள்ள பனித்துளி கீழேவிழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.


போட்டி தொடங்குவதை அறிவிக்கும் விதமாக வீரன் ஒருவன் வட்டமான பெரிய மணியை ஒலிக்க தயாராக நின்று கொண்டிருந்தான் . இளவரசர் மற்றும் மற்ற இரண்டு பேரின் கைகளும் அவர்களின் வாளை வலுவாக பிடித்துக்கொண்டிருந்தன . ஆனால் சம்யுக்தனோ வாளை உறையிலிருந்து எடுக்காமல் நின்று கொண்டிருந்தான். குருதேவர் மணி அடிப்பவனை பார்த்து தலை அசைத்தார் . அவன் போட்டி தொடங்குவதற்கு அறிகுறியாக அந்த மணியை ஓங்கி ஓர் அடி அடித்தான்.


********************


போட்டி தொடங்கியது.......


கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வாளை உறையிலிருந்து எடுத்த சம்யுக்தன் முதலில் இளவரசனை தாக்கி கீழே விழ வைத்தான். மற்ற இரண்டு வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, சமாளித்து எழும்பிய இளவரசரை மீண்டும் சம்யுக்தன் தாக்க முற்பட்டான் . சண்டை தீவிரம் அடைந்தது . சுற்றி நின்று கொண்டிருந்த வீரர்கள் இருவருக்கும் ஆதரவாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் .


அப்போது எட்டு குதிரைகள் பூட்டிய பெரிய ரதம் ஒன்று அங்கே வந்தது. அந்த ரதம் மண்ணுலகில் மட்டும் அல்ல விண்ணுலகிலும் காண முடியாது. அந்த நாட்டு அரசர் குலசேகர வர்மனின் ரதம் தான் அது. அந்த ரத்தத்தைப் பார்த்ததும் எல்லாரும் "அரசர் வாழ்க ! " என்று கோஷமிட்டார்கள் . ஆனால் சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் அரசர் வந்தது கூட தெரியாமல் மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.


அந்த ரதத்தில் அரசருடன் மந்திரி தேவராஜனும் மற்றும் ராஜகுருவும் இருந்தார்கள். மூவரும் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .


அப்போது அந்த வீரர்களின் கூட்டத்தில் திடீரென்று ஒரு கொலுசு சத்தம் கேட்டது . அந்த சத்தத்தைக் கேட்டதும் சம்யுக்தனின் கவனம் ஒரு நொடி சிதறியது . அவன் அந்த கொலுசு சத்தம் வந்த திசையை பார்த்த போது வீரர்களில் ஒருவன் இது தான் சமயம் என்று சம்யுக்தனை முதுகில் தாக்க முற்பட்டபோது இளவரசன் அதைத் தடுத்து அந்த வீரனை தாக்கி கீழே தள்ளினான். இன்னொரு வீரனையும் போக சொல்லி சைகை காட்டினான். அதன் பிறகு இளவரசனும் சம்யுக்தனும் நேருக்கு நேர் சம பலத்துடன் மோதினார்கள். இருவருமே வெற்றி பெறுவதற்கு சரி சமமாக வாய்ப்பு இருந்தது. அப்போது சம்யுக்தன் இளவரசரை வீழ்த்தி அவரின் மார்புக்கு நேரே வாளை நீட்டி தான் வெற்றியடைந்ததை நிருபித்தான் .


சம்யுக்தனின் வெற்றியை கொண்டாடும் விதமாக எல்லாரும் கைதட்டினர். ஆனால் ரவி வர்மனுக்கோ ஒரே ஒரு கரவொலி மட்டும் வித்தியாசமாக கேட்டது. அது வாள் பிடித்து விளையாடிய கைகளின் ஓசை கிடையாது. அது மென்மையான கைகளின் ஓசை . அது ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று இளவரசன் நினைத்தான். அவனுடைய நண்பர்களிடம், அக்கூட்டத்தில் யாராவது பெண் இருக்கிறாளா என்று கேட்டான். இல்லை அரசே ! எல்லாருமே ஆண் மகன்கள் தான் என்று அவர்கள் பதிலுரைத்தார்கள் . இல்லை ! இந்த கூட்டத்தில் நிச்சயமாக ஒரு பெண் இருக்கிறாள் ; போய் தேடுங்கள்!என்று இளவரசன் கூறினான். அவர்களும் பெண் யாரேனும் அங்கே இருக்கிறாளா என்று தேடினார்கள் . அப்போது ஒரு பெண்ணுருவம் அந்த இடத்தை விட்டு சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.உடனே ரவிவர்மனிடம் சென்று, நீங்கள் சந்தேகித்தது சரி தான் இளவரசே ! இவ்வளவு நேரம் அவள் இங்கு தான் இருந்திருக்கிறாள். நாங்கள் தேடுவதை அறிந்ததும் அவள் இந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள் என்று கூறினார்கள் . அந்த பெண் யாரென்று விசாரியுங்கள், என்று இளவரசர் கூறினார்.


********************


போட்டியை ரசித்துக்கொண்டிருந்த மன்னர் மந்திரியிடம் , தங்கள் மகன் சம்யுக்தன் எதிர் காலத்தில் ஒரு பெரிய போர்ப்படையையே வழிநடத்திச் செல்லும் திறன் கொண்டவனாக இருப்பான் என்று கூறினார். அதற்கு இன்னும் சிலகாலம் ஆகும் மன்னா!என்று மந்திரி கூறினார். சில காலம் கூட ஆகாது, வெகு சீக்கிரத்திலேயே அது நடக்கும் என்று மன்னர் கூறிவிட்டு ராஜகுருவை நோக்கி, நான் கூறுவது சரி தானே என்று கேட்டார். அதற்கு ராஜகுரு, வேண்டா வெறுப்பாக சரி தான் மன்னா என்று கூறினார்.


அரசர் ரவிவர்மனையும் சம்யுக்தனையும் தன்னருகே அழைத்தார். அவர்களிருவரும் அரசரின் அருகில் சென்று வணங்கினார்கள். சம்யுக்தா ! உன் வீரத்தை கண்டு வியந்தேன். ஆனால், ஒரு சந்தேகம் . என்ன மன்னா ! என்று சம்யுக்தன் கேட்டான். ரவிவர்மன் மேல் தனிப்பட்ட முறையில் ஏதும் கோபமா என்று கேட்டார். இல்லை மன்னா, ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டான். நீ சண்டை போட்ட போது ரவிவர்மனை மட்டும் வேகமாக தாக்கினாயே, மற்ற இரு வீரர்களையும் அவ்வளவாக தாக்கவில்லையே, எதனால் ? என்று கேட்டார். அதற்கு சம்யுக்தன், வேட்டைக்குச் செல்கிறவன் மானைக் கொல்வதை விட புலியை கொல்வதில் தானே பூரிப்படைகிறான் என்று சொன்னான், பலே ! சம்யுக்தா ! உன் வீரத்திற்கு இளவரசர் தான் தகுதியானவர் என்று சொல்லாமல் சொல்கிறாய் என்று கூறினார்.


அப்போது ராஜகுரு குறுக்கிட்டு, மன்னா ! என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வெற்றியாளர் இளவரசர் தான் என்றார் . எப்படி சொல்கிறீர்கள்? என்று மன்னர் வினவினார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சம்யுக்தன் சில நொடிகள் பிரமை பிடித்தவன் போல் நின்று விட்டான். இளவரசர் நினைத்திருந்தால் அக்கணமே சம்யுக்தனை வென்றிருக்க முடியும். அது மட்டுமல்லாமல் சம்யுக்தனை முதுகில் தாக்க முற்பட்ட வீரனை இளவரசர் தடுத்து வீரத்திற்கு களங்கம் ஏற்படா வண்ணம் தடுத்தார் . அதனால் வெற்றி இளவரசரைத் தான் சேரும் என்றார்.


அப்போது அங்கே ஒரு சவ ஊர்வலம் வந்தது. அதைப் பார்த்ததும் அங்கிருந்த வீரர்கள் உறையிலிருந்து தங்கள் வாளை உருவி அவற்றை பூமியில் செருகி, மண்டியிட்டு வீர வணக்கம் செலுத்தினார்கள் . அது எதிர் நாட்டு மன்னனால் கொல்லப்பட்ட இந்நாட்டு ஒற்றனின் இறுதி ஊர்வலம் . அவன் மார்பில் காயமுற்று இறந்திருக்கிறான். அதனால் தான் இந்த வீரவணக்கம் .


அதன் பிறகு எல்லாரும் கலைந்து சென்றார்கள் . ரவிவர்மன் சம்யுக்தனை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு சென்றான் .


********************


ஒற்றனின் உடல் தூரத்தில் எரிந்து கொண்டிருந்தது. சம்யுக்தன் அந்த இடுகாட்டை நோக்கி சென்றான். அங்கே, எரிந்து கொண்டிருந்த உடல் நெருப்பின் அனலினால் மேல் நோக்கி எழுந்தது. வெட்டியான் அதன் மார்பிலே அடித்து அதை எரித்துக் கொண்டிருந்தான் . சம்யுக்தனுக்கு அக்காட்சி, தன்னைக் கொன்றவனை பழி வாங்க அந்த உடல் உக்கிரமாக எழுந்ததைப் போல் இருந்தது.


எதிர் நாட்டு மன்னன் மார்த்தாண்டன் வீர புரத்தை அடிமையாக்கி அதன் வளங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தான் . அதனால் எதிரிகளைக் கண்காணிக்க வீரபுரத்திலிருந்து ஒற்றர்கள் அனுப்பப் பட்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர் நாட்டு மன்னனின் கொடிய கழுகுக் கண்களில் சிக்கி, ஒற்றர்கள் கொல்லப் பட்டார்கள். கொல்லப்பட்ட ஒற்றர்களின் சடலத்தை ஒரு குதிரையின் முதுகில் போட்டு வீர புரத்திற்கு அனுப்பி வைப்பார்கள் .


அதையெல்லாம் நினைத்துக்கொண்டு சம்யுக்தன் அந்த எரிகின்ற உடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்


அப்போது அவன் தோளை ஒரு கை தொட்டது . சம்யுக்தன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அவனுடைய நண்பன் பார்த்திபன் நின்று கொண்டு, இங்கே என்ன செய்கிறாய், சம்யுக்தா!என்று கேட்டான் . இந்த ஒற்றன் எனக்கு சிறிது காலம் பழக்கம். அதனால் தான் வந்து பார்த்தேன் என்றான், சம்யுக்தன், " இங்கே நீ வந்தது தெரிந்தால் உன் தந்தை மிகவும் கோபப்படுவார். எல்லையில் பதற்றமாக இருக்கிறது ; நீ சீக்கிரம் வீட்டிற்கு சென்று வா, நாம் இன்று காவல் புரிய வேண்டிய நாள்."


அப்போது சம்யுக்தனின் குதிரை அவனைப் பார்த்து கனைத்தது. சம்யுக்தன் அதை மெல்ல தடவி விட்டு, அதன் மேல் ஏறி உக்கார்ந்ததும் அந்த குதிரை சீறிப்பாய்ந்து சென்றது. குதிரையில் சென்று கொண்டிருந்த சம்யுக்தனின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒற்றனாக அனுப்பப் பட்ட அந்த வீரன் மிகவும் மகிழ்ச்சியாக தன்னிடம் விடைபெற்று சென்றதும், கடைசியாக அனுப்பிய ஓலையில் கூட தன்னை யாரும் சந்தேகிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்ததும் அவனுடைய நினைவில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் திடீரென்று அவன் எப்படி கொல்லப்பட்டான் என்று தன்னையே கேட்டுக்கொண்டான். அவ்வாறாக எண்ணிக்கொண்டிருந்தபோதே குதிரை அவன் வீட்டை அடைந்தது. அவன் குதிரையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான் .


********************


அவன் அன்னை புஷ்பவதி , என்ன சம்யுக்தா , உன் முகம் வாடிப்போய் இருக்கிறது என்று கேட்டார். களைப்பு அன்னையே!என்று கூறினான். அப்போது அவன் தங்கை சகுந்தலை, இருக்காதா பின்னே, இன்றைக்கு இளவரசருடன் மோதி ஜெயித்தவர் அல்லவா ! களைப்பாகத்தான் இருக்கும் என்றாள். அது எப்படி உனக்குத் தெரியும் என்று சம்யுக்தன் கேட்டான். எனக்கு வேண்டப்பட்டவர்கள் சொன்னார்கள் என்று அவள் கூறினாள். யாரது ? என்று சம்யுக்தன் வினவினான். சொல்லமாட்டேன் என்றாள், சகுந்தலை . அப்போது அவர்களின் தந்தை ,மந்திரி தேவராஜன், உள்ளே நுழைந்தார்.


சகுந்தலை, அண்ணாவுக்கு மரியாதை கொடுத்து பேசக் கற்றுக்கொள் என்று கூறினார். நான் ஏதும் அவமரியாதையாக பேச வில்லையே என்றாள் சகுந்தலை. வீண்வாக்குவாதமும் எதிர்த்து பேசுவதும் கூட அவமரியாதை தான் என்றார். அதை கேட்ட சகுந்தலையின் முகம் வாடிப்போனது . உடனே மந்திரி, நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று உன் முகம் வாடிப் போய்விட்டது . பெண்பிள்ளைகள் இப்படி வாயாடக் கூடாது என்று தானே சொன்னேன் என்று கூறி விட்டு அவள் கன்னத்தை செல்லமாக தட்டுகிறார்.


பிறகு, அவர் சம்யுக்தனின் அருகில் அமர்ந்தார். இன்று நீ நன்றாக சண்டை போட்டாய். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அந்த பெருமையை என்னால் அனுபவிக்க முடியவில்லை. நம் ஒற்றர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார். தெரியும் தந்தையே , இன்று இறந்தவன் கூட என் நண்பன் தான். மந்திரி , வருத்தமாகத்தான் இருக்கிறது என்று கூறிவிட்டு, இன்று நீ எந்த திசையில் காவல் புரிய போகிறாய் என்று கேட்டார். அதற்கு சம்யுக்தன், வடக்கு திசையில் என்று பதிலுரைத்தான். சற்று எச்சரிக்கையுடன் காவல் புரி ! எதிரிகள் நம் எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல் வந்தது. கவனமின்மையாக இருந்துவிடாதே ! என்றார். சரி, தந்தையே ! நான் காவல் புரிய சென்று வருகிறேன் என்றான். சரி, நீ சென்று வா, இன்று அரண்மனையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருப்பதால் நானும் அங்கு செல்லவேண்டும் என்றார்.


அப்போது அவன் அன்னை, வாருங்கள் ! உணவருந்தலாம் என்று அழைத்தார். அதற்கு சம்யுக்தன், காவல் புரியும் வீரர்கள் உணவருந்தும் இடத்திலேயே நானும் உணவருந்திக் கொள்கிறேன் , வருகிறேன் தாய் தந்தையே ! என்று கூறிவிட்டு கிளம்பினான்.


********************


சம்யுக்தன் ,காவல் புரியும் இடத்திற்கு சென்றான். அங்கே விறகு வைத்து தீ மூட்டி, அந்த வெளிச்சத்தில் வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது , பார்த்திபன் , தாமதமாக வந்தாலும் சரியான நேரத்தில் தான் வந்தாய்..இந்தா, இதை சாப்பிடு என்று கூறி , தேக்கு இலையில் உணவைக் கொடுத்தான். சம்யுக்தன் உணவருந்திக்கொண்டே தென்திசையில் யார் காவல் புரிகிறார்கள் என்று கேட்டான். அங்கே இளவரசர் தலைமை தாங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது என்றான் பார்த்திபன் .


அப்போது சம்யுக்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு அங்கிருந்த வீரர்களிடம், அந்த ஆற்றின் ஓரத்தில் சென்று சிலர் காவல் புரியுங்கள் ;ஆங்காங்கே விறகு வைத்து தீ மூட்டுங்கள்; யாரும் தனியாக செல்ல வேண்டாம்; குழுக்களாக செல்லுங்கள் என்று சம்யுக்தன் கூறினான்.


அதன் பிறகு அங்கிருந்த ஒரு மரத்தால் கட்டப்பட்ட பெரிய பரண் மீது சம்யுக்தன் ஏறினான். தீப்பந்தங்கள் ஏற்றி அந்த பரணின் நான்கு ஓரங்களிலும் நட்டு வைத்தான். அங்கிருந்தபடி வீரபுரத்தைச் சுற்றிலும் பார்த்தான். ஆங்காங்கே பரண்களிலும் நிலப்பரப்புகளிலும் தீப்பந்தங்கள் ஏற்றி வீரர்கள் காவல் புரிந்ததை அவனால் காண முடிந்தது.


அப்போது பார்த்திபனும் அந்த பரணில் ஏறி, ஏதாவது தெரிகிறதா? என்று கேட்டான். என்ன தெரிகிறது என்று சம்யுக்தன் திருப்பிக் கேட்டான். இல்லை, இன்று இளவரசருடன் சண்டையிடும் போது ஒரு கொலுசின் ஒலி கேட்டதே ,அந்த கொலுசு ஓசைக்குரிய பெண் இங்கே தென்படுகிறாளா என்று கேட்டான். உடனே சம்யுக்தன் பார்த்திபனை திரும்பிப் பார்த்தான். என்ன பார்க்கிறாய் ! உனக்கு மட்டும் தான் கொலுசின் ஒலி கேட்குமா , எனக்கும் இரண்டு காதுகள் இருக்கின்றன, எனக்கும் கேட்கும் என்று கூறிவிட்டு , ஆமாம், யாரது ? என்று கேட்டான் பார்த்திபன் . என்னைக்கேட்டால்..என்றான் சம்யுக்தன். உடையவனிடம் தான் கேட்க முடியும் என்றான் பார்த்திபன். மறுபடியும் பார்த்திபனை முறைத்தான் சம்யுக்தன். முறைக்காதே , அவள் உன் மாமன் மகள் பூங்கொடி என்று உனக்கும் தெரியும் எனக்கும் நன்றாகவே தெரியும்; பிறகு ஏன் நடிக்கிறாய் என்றான் பார்த்திபன். அதற்கு, சம்யுக்தன் நாம் காவலைப்பற்றி பேசுவோமே என்றான்.


அப்போது, சற்று தூரத்தில் இரு குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்று சென்றது. பார்த்திபன், அது உன் தந்தையின் ரதம் போலிருக்கிறதே என்று கேட்டான். ஆம் , இன்று அரண்மனையில் ஏதோ அவசர கூட்டம் நடக்கவிருப்பதால் அங்கு செல்கிறார் என்று சம்யுக்தன் கூறினான். பார்த்திபன், சரி, நான் நிலப்பரப்பில் சென்று காவல் புரிகிறேன் என்று கூறி விட்டு கிளம்பினான். அவன் சென்றதும், சம்யுக்தன் காவல் புரிந்து கொண்டே பூங்கொடியை நினைத்துப் பார்க்கிறான்.


********************


பூங்கொடி -பொன்னிற மேனி, மேகம் போன்ற கூந்தல், பிறை போன்ற நெற்றி, நிலவு போன்ற முகம், குவளை போன்ற கண்கள் , சங்கு போன்ற கழுத்து , அன்னம் போன்ற நடை ; மெல்லிய இடை , பெண்களே பொறாமை கொள்ளும் ஓர் அழகு தேவதை


சம்யுக்தனும் பூங்கொடியும் அவ்வளவாக பேசிக்கொண்டது இல்லை என்றாலும் பார்வையாலும் மௌனத்தின் பரிபாஷையாலும் அவர்களின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது. அதை நினைத்தபடியே பரண் மேல் நின்று சம்யுக்தன் காவல் புரிந்துகொண்டிருந்தான்.


அப்போது ஓர் உருவம் தீப்பந்தத்தை ஏந்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தது. சம்யுக்தன் பரணிலிருந்து கீழே இறங்கி தன உறை வாளின் மேல் கை வைத்த படியே அந்த உருவத்தை நோக்கி அருகில் சென்று பார்த்தான். அந்த உருவத்தைப் பார்த்ததும் அவனுடைய முகம் பிரகாசமடைந்து இதழ்களில் புன்னகை அரும்பியது. அந்த உருவம் வேறு யாருமில்லை ! சம்யுக்தனின் உள்ளம் கவர்ந்த பூங்கொடி தான் !


அவளைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பொய்யான கண்டிப்புடன் பேசத் தொடங்கினான்.
"ஒரு பெண்பிள்ளை இந்த நேரத்தில் எதற்காக தனியே இங்கே வந்தாய்? " என்று கேட்டான். இங்கே பக்கத்து கோவிலில் ஒரு சிறப்பு பூஜை நடந்தது. அங்கே நானும் என் தோழிகளும் சென்று திரும்பி வரும் போது, தாங்கள் இங்கே இருப்பதாக கேள்வியுற்று, இந்த பிரசாதத்தை தங்களுக்கு கொடுக்க வந்தேன் என்று பூங்கொடி கூறினாள். பிறகு, தலையைக் குனிந்தபடியே ஒரு நாணத்துடன் சம்யுக்தனிடம் அந்த பிரசாதத்தை நீட்டினாள். அவனும் அதை வாங்கிக்கொண்டு ஒரு ஆண்மையின் கம்பீரத்தோடு அவளைப் பார்த்தான்.


அப்போது , திடீரென்று ஒரு சத்தம் கேட்டது....பார்த்திபன் மூச்சிரைக்க அவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்...............


( தொடரும்...)

sivaji dhasan
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சாம்ராட் சம்யுக்தன்

Post by Muthumohamed on Sun 30 Dec 2012 - 7:14

nalla kathai thodarungal sivaji
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum