சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

இலங்கை சாதனை! ஆஸி. அணி 74 ஓட்டங்களுடன் வீழ்ந்தது...

View previous topic View next topic Go down

Sticky இலங்கை சாதனை! ஆஸி. அணி 74 ஓட்டங்களுடன் வீழ்ந்தது...

Post by ansar hayath on Fri 18 Jan 2013 - 15:20



இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை அணி பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது திணறி 74 சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணி பெற்ற 3வது ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கிரிக்கெட் உலகை ஆட்டிப்படை அவுஸ்திரேலிய அணியை குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்த அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.

1977ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அவுஸ்திரேலியா 70 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்ததே அவுஸ்திரேலிய அணியின் ஆகக்குறைந்த ஒருநாள் போட்டி மொத்த ஒட்டமாக இருந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 1986ம் ஆண்டு அடலய்ட் மைதானத்தில் 26.3 ஓவர்களில் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்ததும் அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது ஆகக்குறைந்த ஒருநாள் போட்டி மொத்த ஒட்டமாக இருக்கின்றது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியை 74 என்ற குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இலங்கை அணி புதிய சாதனை படைத்துள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் குலசேகர 10 ஓவர்கள் பந்துவீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 22 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார் குலசேகர ஒருநாள் போட்டிகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

லசித் மலிங்க 7 ஓவர்கள் பந்துவீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 14 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் மற்றும் டொஹெட்டி ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைக் கடந்தனர். ஸ்டார்க் 22 ஓட்டங்களையும் டொஹெட்டி 15 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பதிலுக்கு 75 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களைப் எடுத்து வெற்றிபெற்றது. கௌசல் பெரேரா 22 ஓட்டங்களையும் தில்ஷான் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணி பந்துவீச்சாளர் நுவான் குலசேகர தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காது ஒருநாள் போட்டி 20ம் திகதி சிட்னியில் இடம்பெறவுள்ளது.

avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum