சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

அப்சல் குரு தூக்கு : அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்...........!!

Post new topic   Reply to topic

Go down

Sticky அப்சல் குரு தூக்கு : அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்...........!!

Post by ahmad78 on Mon 11 Feb 2013 - 14:03அப்சல் குரு தூக்கு : அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்...........!!

டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 ...பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:

1) நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர் 12,2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது. "மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி" என்று கூறினார்களே அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

2) தாக்குதல் நடந்து முடிந்து சிலநாட்களிலேயே இந்த தாக்குதலை ஜைஷே மொகமட் மற்றும் லஸ்க‌ர் இ தொ‌ய்பா திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று டெல்லி போலீஸின் சிறப்பு செல் கூறியது. இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவர் மொகமட் என்பவர் என்றும் கூறியது. இவர் ஐ.சி.814 - விமானத்தை 1999ஆம் ஆண்டு கடத்தியவர் என்று கூறபட்டது. பிறகு இது சிபிஐ-யால் மறுக்கப்பட்டது. இவையெல்லாம் கோர்ட்டில் சாட்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. டெல்லி ஸ்பெஷல் செல்லிற்கு என்ன ஆதாரம் இருந்தது?

3) இந்த அனைத்து தாக்குதலும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த படங்களைக் காட்டவேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். மேலும் இவர் இந்த சம்பவம் குறித்து பல குழப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கூறும்போது, 'நான் பார்த்தபோது காரிலிருந்து 6 பேர் இறங்கினர். 5 பேர்தான் கொல்லப்பட்டனர். சிசிடிவி 6 பேர் இருந்ததைக் காட்டியது' என்றார். தாஸ் முன்ஷி சரி என்றால் போலீஸ் ஏன் 5 பேர்தான் காரில் இருந்ததாக கூறவேண்டும்? யார் அந்த 6வது நபர்? அவர் எங்கே இப்போது? சிசிடிவி படங்களை அரசு தரப்பு சாட்சியமாக ஏன் கோர்ட்டில் போட்டுக் காட்டவில்லை? ஏன் அது பொதுமக்கள் பார்வைக்கு விடப்படவில்லை?

4) இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது நாடாளுமன்றம் ஏன் ஒத்தி வைக்கப்பட்டது?

5) டிசம்பர் 13‌க்கு பிறகு சில நாட்கள் கழித்து பாகிஸ்தானின் தொடர்பிருப்பதாக சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பினர். துணைக்கண்டம் அணு ஆயுதப் போருக்கு தயாரானது போல்தான் இருந்தது. அப்சல் குருவை சித்ரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலம் தவிர முரண்பட முடியாத சாட்சியம் என்ன இருந்தது?

6) டிசம்பர் 13, நாடாளுமன்ற தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எல்லையில் ராணுவத்தினரை குவிக்கும் திட்டம் நடந்தேறியது என்பது உண்மைதானா?

7) சுமார் 1 ஆண்டு எல்லையில் இந்த ராணுவத்தினரின் இருப்புக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? சரியாக கையாளத்தெரியாது வெடித்த கண்ணி வெடிகளினால் எவ்வளவு ராணுவத்தினர், பொது ஜனங்கள் உயிரிழந்தனர்? கிராமங்கள் வழியாக லாரிகளும், ராணுவத்தினரும் ரோந்தில் ஈடுபட்டதால் எவ்வளவு விவசாயிகள் தங்களது வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்தனர்? அவர்களது நிலங்களில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டதா இல்லையா?

8) எந்த ஒரு கிரிமினல் குற்ற விசாரணையிலும் ஒருவ‌ர் எப்படி குற்றவாளி என்று கண்டுபிடித்தோம் என்பதை போலீஸ் கோர்ட்டிற்கு விளக்குவது அவசியம். எப்படி மொகமது அப்சல் குருவை போலீஸ் பிடித்தது? ஸ்பெஷல் செல் கூறியது ‌கிலானி மூலம் அப்சலைப் பிடித்தோம் என்று. ஆனால் அப்சல் குருவை பிடிக்குமாறு ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு செய்தி அனுப்பப்பட்டது ‌கிலானியை கைது செய்வதற்கு முன்பே! எப்படி ஸ்பெஷல் செல் அப்சல் குருவை இதில் குற்றவாளியாக சேர்த்தது?

9) அப்சல் குரு சரணடைந்த தீவிரவாதி. இவர் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருடன் தொடர்பில் இருந்துள்ளார், குறிப்பாக சிறப்பு அதிரடிப்படையினருடன் இவர் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார் என்பதை கோர்ட்டுகளே ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர்களது கண்காணிப்பின் கீழ் இருந்த அப்சல் குரு எப்படி இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்?

10) சிறப்பு அதிரடி படையின் சித்ரவதைக்கூடத்தில் சிக்கிய, அவர்களுடன் அடிக்கடி தொடர்புடைய, அவர்களது கண்காணிப்பின் கீழ் உள்ள அப்சல் குருவை வைத்து ல‌ஷ்ய‌ர் இ தொ‌ய்பா, ஜைஷீ அமைப்புகள் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியுமா?

11) அப்சல் குரு கோர்ட்டில் கூறும்போது, அப்சல் குருவை மொகமட் என்பவருக்கு அறிமுகம் செய்தவர் டாரிக் அவர்தான் மொகமடை டெல்லிக்கு அழைத்து செல்லக் கூறினார் என்றார். தாரிக் அதிரடிப்படையில் வேலை செய்பவர். போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தாரிக் இருக்கிறார். ஆனால் அவர் எங்கே?

12) டிசம்பர் 19, 2001-இல் தானே போலீஸ் கமிஷனர் எஸ்.எம். ஷங்கரி, நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மொகமது யாசின் படே மொகமட் என்றும், இவர் லஸ்கரைச் சேர்ந்தவர் என்றும், அவர் 2000 ஆம் ஆண்டே மும்பையில் கைது செய்யப்பட்டார் என்றும் இவரை உடனடியாக ஜம்மு போலீசிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார். இவர் கூறுவது உண்மையெனில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளாரா? இது தவறு மொகமது யாசின் எங்கே?

13) கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் யார் யார்? ஏன் இன்று வரை நமக்கு அது பற்றி கூறப்படவில்லை?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அப்சல் குரு தூக்கு : அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்...........!!

Post by மீனு on Mon 11 Feb 2013 - 19:14

:silent: :silent:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum