சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல்

View previous topic View next topic Go down

Sticky சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல்

Post by Muthumohamed on Tue 12 Mar 2013 - 20:44



மீனம்பாக்கம்:
சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலையில்
ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.
விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் பெரிதும்
அவதிப்பட்டனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் 3வது மாடியில்
விமானங்களுக்கு சிக்னல் அளிக்கும் அதிநவீன கம்ப்யூட்டர்கள் உள்ளன. இன்று
அதிகாலை 2.30 மணிக்கு, கம்ப்யூட்டருக்கான யுபிஎஸ் பேட்டரி திடீரென வெடித்து
சிதறியது. இதையடுத்து, அந்த அறையில் தீப்பிடித்து கம்ப்யூட்டர்களின்
வயர்கள் கருகின. விமான நிலைய கட்டுப்பாட்டு அறை முற்றிலும் செயலிழந்தது.

அப்போது,
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அரபு எமிரேட்ஸ் விமானம்
வந்தது. கட்டுப்பாட்டு அறையின் சிக்னல் செயலிழந்ததால் கையால் இயக்கப்படும்
கருவி மூலம் சிக்னல் கொடுத்து அந்த விமானத்தை பெங்களூர் விமான
நிலையத்துக்கு திருப்பி அனுப்பினர். இதற்கிடையில், விமான நிலையத்தில் உள்ள 5
தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய இயக்குனர் சுரேஷ் தலைமையில் உயரதிகாரிகள்,
தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், கட்டுப்பாட்டு
அறையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 3
மணி நேரத்துக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையை செயல்பாட்டுக்கு
கொண்டுவந்தனர்.

இதன்பின், அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து
புறப்படும் விமானத்துக்கு மட்டும் சிக்னல் கொடுக்கும் கட்டுப்பாட்டு
அறையின் முதல் வழி தயாரானது. சென்னைக்கு வரும் விமானங்களுக்கு சிக்னல்
கொடுக்கும் வழி காலை 7.30 மணிக்கு தயாரானது. இதன் காரணமாக சென்னை விமான
நிலையம் அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை மூடப்பட்டது. அந்த சமயத்தில்,
துபாய், சார்ஜா, தோகா, பக்ரைன், மஸ்கட், அபுதாபி, லண்டன், கொழும்பு ஆகிய
இடங்களில் இருந்துவந்த விமானங்கள், பெங்களூர், ஐதராபாத், கொச்சி,
திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதுபோல்,
சென்னையில் இருந்து பக்ரைன், மாலத்தீவு, கொழும்பு, லண்டன் உள்பட 9
இடங்களுக்கு செல்லும் விமானம் புறப்பட முடியவில்லை. உள்நாட்டு விமான
நிலையத்தில் இருந்து டெல்லி, புனே, பெங்களூர், மும்பை, அந்தமான் மற்றும் 12
இடங்களுக்கு செல்லும் விமானங்களும் புறப்பட முடியவில்லை. கட்டுப்பாட்டு
அறையின் நிலைமை சீரடைந்ததும் காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து
விமானங்கள் புறப்பட்டு சென்றன. வரும் விமானங்களுக்கு சிக்னல் கொடுக்கும்
அறை சரியானதும் காலை 7.30 மணிக்கு மேல் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர
தொடங்கின.

விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும்
அவதிப்பட்டனர். விமானம் எப்போது வரும், கிளம்பும் என்று அறிவிக்கப்படாததால்
இதனால் பயணிகளுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
விமான நிலைய இயக்குனர்
சுரேஷ் கூறியது: விமான நிலைய அறையில் 3வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர்
யுபிஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச் சேதம், காயம்
எதுவும் ஏற்படவில்லை. ஆனால் விமான போக்குவரத்து 3 மணி நேரம்
பாதிக்கப்பட்டது. தீயை அணைத்து விமான போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளை
விரைவாக முடித்துள்ளோம். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
நடத்தப்படும். இவ்வாறு சுரேஷ் கூறினார்.


சென்னை விமான
நிலையத்தில் அடிக்கடி சிறிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது. ஆனால்,
கட்டுப்பாட்டு அறையில் தீப்பிடித்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது இதுவே
முதல்முறையாகும்.
கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பந்தமாக,
டெல்லியில் உள்ள இந்திய விமான போக்குவரத்துத்துறை (ஜிசிஏ) இயக்குனரகம்
முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum