சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

View previous topic View next topic Go down

Sticky டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by Muthumohamed on Sat 16 Mar 2013 - 19:45

சேலம்: டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும், பெரும்பாலான சரக்குகள்,
கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால், போதுமான அளவு போதையில்லை என்று
புலம்பி வந்த இளைஞர்கள், சமீபகாலமாக, குவாட்டர் மது குடித்த பிறகு, 420
உள்ளிட்ட, "கிக்' ஏற்றும் பீடா வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

தமிழகத்தில்,
6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகள் மூலம்,
அரசுக்கு கோடிகளில் வருவாய் கிடைத்து வந்தாலும், முன்னணி சரக்குகள்
கிடைக்காததால், குடிமகன்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சரக்குகளின்
விலை அவ்வப்போது ஏற்றப்பட்டு, தினம் ஒரு புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டு
வருகிறது. ஆனால், பார்களில் வேலை செய்பவர்கள், குவாட்டர் பாட்டில்களில்,
"கட்டிங்' விற்பனைக்காக, சரக்குகளில், தண்ணீர், சோடா ஆகியவற்றை கலந்து
விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல புதிய நிறுவனங்கள், மிக,
"மட்டமான' சரக்குகளை விற்பனை செய்வதால், குவாட்டர் குடிக்கும்
குடிமகன்களுக்கு போதை ஏறுவதில்லை. பாட்டிலை திறந்தால், குமட்டல் நாற்றம்
எடுத்தாலும், வேறு வழியில்லாமல், கையில் இருக்கும் காசுக்கு, சரக்கை
குடித்து திரும்புகின்றனர். டாஸ்மாக் பார், சரக்குகளில், போதை ஏறாததால்,
சமீபகாலமாக இளைஞர்களின் பார்வை, "கிக்' ஏற்றும் பீடா வகைகளின் பக்கம்
திரும்பியுள்ளது.

தமிழகத்தில், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம்
உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், பல இடங்களில், பான்மசலா, பீடா,
ஜரிதா ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள்,
"420' ரக பீடா, 20 ரூபாய்க்கும், "480' ரக பீடா, 25 ரூபாய்க்கும், "540' ரக
பீடா, 30 ரூபாய்க்கும், டபுள் ஸ்டாரங், "420' ரக பீடா, 40 ரூபாய்க்கும்
விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக், சரக்கில், போதை கிடைக்காத குடிமகன்கள்,
குறிப்பாக இளைஞர்கள் பலர், "420' மற்றும் டபுள் ஸ்டராங், "420' ரக
பீடாக்களை, போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஜரிதா, பான்மசாலா,
ஸ்வீட் உள்ளிட்ட பல்வேறு கலவைகளுடன் தயாரிக்கப்படும் இந்த பீடாக்களை,
சாதாரணமாக போட்டாலே, தலை, "கிறு கிறு' வென்று இருக்கும். அதனால், போதை
இளைஞர்கள், சரக்கு அடித்தவுடன், பீடா கடைகளை தேடி ஓடுகின்றனர். அங்கு,
பீடாவை, "சுவைத்த' பிறகு, ஏற்படும், "கிக்கோடு' திரும்புகின்றனர். பீடா
போடும் பட்சத்தில், அது சரக்கு வாடையையும் குறைத்து, பீடா நாற்றத்தையே
மேலோங்கி காட்டுகிறிது. அதனால், வீட்டில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள்,
வெற்றிலை, பாக்கை போடுவதாக நினைத்து கொள்கின்றனர். டாஸ்மாக் கடைகளில்,
ஏற்கனவே, 80 சதவீதம் இளைஞர்கள், குடிப்பழக்கத்தால், தங்கள் எதிர்காலத்தை
தொலைத்து நிற்கும் சூழ்நிலையில், நேரடியாக, நரம்பு உள்ளிட்டவற்றுக்கு
பாதிப்பை ஏற்றும், போதை பீடாக்களை போடுவதில், ஆர்வம் காட்டுவது,
இளைஞர்களின் வளர்ச்சி பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பீடா விற்பனை
செய்யும் போர்வையில், பலர் சமூக விரோதமாக, அதிக போதை ஏற்றும் வஸ்துக்களை
விற்பனை செய்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜரிதா கடைகளில்,
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து
சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் சோதனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம்.

நன்றி:தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum