சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தே.மு.தி.க., - காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா?

Go down

Sticky தே.மு.தி.க., - காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா?

Post by Muthumohamed on Sun 24 Mar 2013 - 15:32

ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியதால், தமிழக அரசியல் கட்சிகளின் மத்தியில் அணி மாற்றம் உருவாகவுள்ளது. அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் கட்சி சேருமா? தி.மு.க., அணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணையுமா? அல்லது தே.மு.தி.க., காங்கிரஸ் இணைந்து மூன்றாவது அணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அமெரிக்க தீர்மானங்களை காரணமாக காட்டி, மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் தி.மு.க., விலகிக் கொண்டது. இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு, தமிழ் அமைப்புகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தால், அறிவாலயம் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தவும், தி.மு.க., தலைவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் முற்படுவர். இதனால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க., திடீரென விலகிக் கொண்டது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம்களுக்கு, மத்திய அரசு, இடம் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராக, தி.மு.க., போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தி.மு.க., கூட்டணியில் இழுத்து, இரட்டை இலக்கத்தில் தே.மு.தி.க.,வுக்கு சீட் ஒதுக்கவும் தி.மு.க., தயாராகவுள்ளது. தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கு கட்டியம் கூறும் வகையில், தி.மு.க., ஆதரவு, "டிவி' யில் தே.மு.தி.க.,வுக்கு சாதகமான செய்திகளும், தே.மு.தி.க., ஆதரவு, "டிவி'யில் தி.மு.க., பிரமுகர்களின் நேரடி பேட்டிகளும் வெளியிடப்படுகின்றன.

தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் புது அணியை உருவாக்க தி.மு.க., தரப்பு விரும்புகிறது. தி.மு.க.,வுக்கு கிடைக்கவுள்ள ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டையும் மார்க்சிஸ்ட் அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கவும் தி.மு.க., தயாராகவுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., அணியில் கொடுக்க விரும்பும் சீட்டுகளை விட கூடுதலாக ஒரு சீட்டுகளை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவும் தி.மு.க., தரப்பு திட்டமிட்டுள்ளது. ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியதால், அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்து பேரம் பேசுவதற்கு கூடுதல் தகுதியை ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்றுள்ளன. இதற்கிடையில், தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க.,வில் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்கவில்லை என்றால்,

தி.மு.க.,விடம் பேரம் பேசவும் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தயங்காது. தே.மு.தி.க.,வுக்கு மத்திய அரசு சில நெருக்கடிகளை ஏற்படுத்தி, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக தே.மு.தி.க., - காங்கிரஸ் இணைந்து மூன்றாவது அணி அமைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்திப்பு நடந்த பின், தமிழக அரசியலில் புது அணியை உருவாக்க தி.மு.க., தரப்பு விரும்பிவிட்டது. இலங்கை பிரச்னையை மையப்படுத்தி தான் லோக்சபா தேர்தல் நடக்கப் போகிறது என்பதை கருணாநிதி உறுதி செய்தார். அதன் எதிரொலியாக ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியது.

தே.மு.தி.க., - விடுதலை சிறுத்தைகள், - இந்திய யூனியன் முஸ்லிம் லீக், - தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., தரப்பு திட்டமிட்டுள்ளது. ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தரப்பு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ., - பா.ம.க., தனித்து போட்டியிட்டால், அ.தி.மு.க., - தி.மு.க., அணிகளுக்கு இடையே சரி சமமான மோதல் உருவாகும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum