சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

சிதம்பரம் Vs நரேந்திர மோடி பைனல்!?

Go down

Sticky சிதம்பரம் Vs நரேந்திர மோடி பைனல்!?

Post by Muthumohamed on Sat 30 Mar 2013 - 20:26

மக்களவை தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி கட்ட முயற்சிகளில் உள்ளன.

பிஜேபி தனது பிரதம வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பது எனபது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவ்வாறு மோடியை அறிவிக்கும் நிலையில் நிதிஷ் குமாரின் ஆதரவை இழப்பதற்கும் பிஜேபி தயாராகிவிட்டது. மோடியின் பெயரை பிஜேபி அறிவிப்பதற்கு முன்னரே கூட கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்புள்ளதாக சிலர் கருதுகிறார்கள். . ஆனால் மோடியின் பெயரை பிஜேபி வெளியிட்ட பின் அதனை காரணம்காட்டி கூட்டணியில் இருந்து விலகினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம் என நிதிஷ் குமார் திட்டமிட நிறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடக்கவே நிறைய வாய்ப்புள்ளதாகவும் நான் நினைக்கிறேன். எனவே பிஜேபியின் தேர்தலுக்கு முந்தைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது. அதற்காக சில கூட்டணி கட்சிகளை இழக்கவும் அது தயாராகிவிட்டது. தேர்தலுக்குப்பின் பிஜேபியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெறும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் பிரதமர் வேட்பாளரின் பெயர் மாறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். தேர்தலுக்குப்பின் மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெற வேறு ஒரு மிதவாத முகம் கொண்ட பிஜேபி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட நிறைய வாய்ப்புள்ளது.

காங்கிரசை பொறுத்தவரையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்று பலர் கருதுகிறார்கள்.இக்கருத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு உறுதியான வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே ராகுல் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். ஆனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புக்கள் மங்கிய நிலையில் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்க ராகுல் விரும்பமாட்டார். மோடியிடம் தோற்று தனது இமேஜை அரசியலின் ஆரம்ப கட்டத்திலேயே கெடுத்துக்கொள்ள ராகுல் விரும்ப மாட்டார். தோல்வியின் விளிம்பில் உள்ள காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி ராகுலுக்கு கிடையாது என்பதை கடந்த கால தேர்தல்கள் உறுதிப்படுத்திவிட்டன. ஆயினும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை அளித்தால் அந்த நிலையில் ராகுல் பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்புண்டு.

எனவே வழக்கம் போல் தேர்தலுக்கு முன் மன்மோகன் சிங் போன்ற யாரேனும் ஒரு கைப்பாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். தனக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க ஆசை உண்டு என்பதை மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே அடிமட்டத்திற்கு போய்விட்ட காங்கிரசின் இமேஜை காக்க வேறு யாரேனும் ஒருவர் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். அது சோனியா காந்தி வீட்டு சமையல்காரனாகவோ அல்லது தோட்டக்காரனாகவோ கூட இருக்கலாம். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பதுகாங்கிரசின் ஏமாற்றும் திட்டமாக இருக்கலாம். அல்லது டைம் பத்திரிகை கூறியுள்ளது போல் அந்த வேட்பாளர் ப. சிதம்பரமாக கூட இருக்கலாம். ஈழப் பிரச்சினையில் தமிழ் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தலின் பொது எதிர்கொள்ள அது உதவலாம் என காங்கிரஸ் நினைக்கலாம். தமிழ்நாட்டில்சில கூட்டணி கட்சிகள் கிடைக்க இத்திட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் திட்டமிடலாம்.

எனவே வரும் மக்களவை தேர்தலில் பிரதம வேட்பாளருக்கான போட்டி நரேந்திர மோடி Vs ப. சிதம்பரம் என்று இருக்கவே நிறைய வாய்ப்புண்டு. ஆனால் தேர்தலுக்குப் பின் பிரதமர் போட்டிக்கான பெயர்கள் மாற நிறைய வாய்ப்புகளும் உள்ளது. அப்படியானால் தேர்தலுக்கு முன் இக்கட்சிகள் மக்களுக்கு அளித்த பிரதம வேட்பாளர் குறித்த உறுதிமொழிகள் என்னவாகும்?. தேர்தல் அறிக்கைகள் போன்றே அதுவும் காற்றோடு பறக்கவிடப்படும்.
-
Thanks-http://writervijayakumar.blogspot.com/2013/03/vs.html
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum