சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

2 ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு விவகாரம் :விசாரணைக்கு ராசாவை அழைக்காதது ஏன்?

Go down

Sticky 2 ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு விவகாரம் :விசாரணைக்கு ராசாவை அழைக்காதது ஏன்?

Post by நண்பன் on Wed 3 Apr 2013 - 6:42

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பற்றி விசாரித்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆ. ராசாவை விசாரணைக்கு அழைக்காதது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதப் போவதாக அந்த குழுவின் உறுப்பினரான யஷ்வந்த் சின்கா அறிவித்து உள்ளார்.

2 ஜி அலைக்கற்றை இலை வரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1. இலட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை மந்திரி ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை யில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும், இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி. சாக்கோ தலைமை யிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பலருக்கு, கூட்டுக்குழு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தியது.

ஆ. ராசாவும் கூட்டுக்குழுவின் முன்பு நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க விரும்பினார்.

இது தொடர்பாக கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு அவர் கடிதங்கள் எழுதினார். ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்ட பி.சி. சாக்கோ, சில கேள்விகளை மட்டும் ஆ. ராசாவுக்கு அனுப்பி வைத்தார். அவற்றுக்கு ஆ. ராசா எழுத்து மூலமாக பதில் அனுப்பினார். அவரது பதில் சமீபத்தில் கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

விசாரணைக்குழு ஆ. ராசாவை கூட்டுக்குழு நேரில் அழைக்காத தற்கு அந்த குழுவில் உள்ள பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், கூட்டுக்குழுவின் உறுப்பினரும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்கா நேற்று முன்தினம் டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

விசாரணைக்கு ஆ. ராசாவை நேரில் அழைக்காதது கூட்டுக்குழு விசாரணையில் உள்ள மிகப் பெரிய குறைபாடு ஆகும். தனது தரப்பிலான கருத்துக்களை கூட்டுக்குழுவிடம் நேரில் தெரிவிக்கும் உரிமை ஆ. ராசாவுக்கு உள்ளது.

விசாரணைக்கு தன்னை நேரில் அழைக்குமாறு கோரி பி.சி. சாக்கோவுக்கு ஆ. ராசா மூன்று அல்லது நான்கு முறை கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் அந்த கடிதங்கள் கிடைக்கப் பெற்றதாக மட்டும் தனது பதிலில் தெரிவித்துள்ள பி.சி.சாக்கோ, விசாரணைக்காக அவரை நேரில் அழைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

2ஜி அலைக் கற்றை அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன? என்பது பற்றிய உண்மையை விசாரித்து கண்டு அறிவதற்காகத்தான் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஆ. ராசாவை விசாரணைக்கு அழைக் காததை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசு உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக கூட்டுக்குழுவை அமைத்ததா? அல்லது உண்மையை மூடி மறைப்பதற்காக அமைத்ததா? என்ற சந்தேகம் எனக்கும் குழுவில் உள்ள சில உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.

இது மிகவும் முக்கியமான பிரச்சினை ஆகும். எனவே இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கும் நான் கடிதம் எழுத இருக்கிறேன்.

கூட்டுக்குழுவின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க விரும்ப தயாராக இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

சாட்சியம் அளிக்க விரும்புகிறவர்களை விசாரணைக்கு அழைக்காவிட்டால் கூட்டுக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்க இருக்கிறேன். இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.

தினகரன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum