சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Yesterday at 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Yesterday at 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:

Go down

Sticky முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 19:33

முஸ்லிம் சகோதரர்கள்இசகோதரிகள் வீதிகளில் துன்புறுத்தப்பட்டால் அல்லது குண்டர்களால் தாக்கப்பட்டால் அல்லது அவர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டால் நாம் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்கமுடியாது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சக சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மக்கள் முஸ்லிம் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் பாதுகாப்பற்ற தன்மைஇ அச்சம் மற்றும் பதற்றம் ஆகியன குறித்து வேதனை அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றைவிடுத்து உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் சரித்திரரீதியாக வாழ்ந்து வருபவர்கள் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக மிகப்பெரும் பங்களிப்பை பல நூற்றாண்டுகளாக செய்துவந்துள்ளார்கள்.
அவர்கள் தங்களுக்கென தனித்துவமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உடைகளை கொண்டுள்ளார்கள் மற்றும் தங்கள் மதத்தின் மீது தெய்வ நம்பிக்கை கொண்ட பற்றாளர்கள்.

8 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை பரவியிருந்த இஸ்லாமிய பொற்காலத்தின் பண்பாடு சார்ந்த கொடையாளர்களாகிய இலங்கை முஸ்லிம் மக்கள் கலை மற்றும் இசைஇமருத்துவம் மற்றும் சட்டம் மற்றும் விஞ்ஞானம், தொழில் முயற்சி கல்வி அறிவு மற்றும் இன்னோரன்ன துறைகளின் வளர்ச்சியில் உயர்நிலைளை அடைந்துள்ளார்கள்.

இன்று எவ்வாறாயினும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த கசப்பான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்துள்ள கும்பல்களின் பல்வகையான வன்செயல்கள் பற்றி நான் மீண்டும்
சொல்ல வேண்டிய தேவை இல்லை.

பட்டப்பகலில் முன்பின் தெரியாதவர்களால் பழமைதழுவிய மத உடைகளை அணிந்த முஸ்லிம் பெண்கள் கெட்ட நோக்கத்துடன் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும் அவமரியாதையான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சக சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மக்கள் முஸ்லிம் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் பாதுகாப்பற்ற தன்மை, அச்சம் மற்றும் பதற்றம் ஆகியன குறித்து வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ் மக்களினதும் முஸ்லிம்மக்களினதும் உறவு எப்போதும் மிகவும் நெருக்கமானதாக இருந்து வந்துள்ளது.

சில சமயம் உறவு மிகவும் அரிதானக இருப்பினும் வன்செயல் மற்றும் குரூரத்தனம் காரணமாக வெட்கப்படக்கூடியதாக இருந்தது. என்றாலும் இரு தரப்பு உறவு மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகின்றது.

மற்றவரின் விதியில் உயிர்பிழைக்கலாம் என்ற அடிப்படையில்எம் மக்கள் உறவு பின்னிப்பிணைந்துள்ளது.சிங்களவர்கள்இ மலாய் மற்றும் பறங்கியர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்திருப்பது போன்றே நாம் முஸ்லிம்மக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளோம் பொது மொழி மற்றும் வாழ்விடம் ஆகியற்றின் இணைப்பை இலகுவாக துண்டிக்கமுடியாது.

ஆகவே, எமது முஸ்லிம் சகோதரர்கள்,சகோதரிகள் வீதிகளில் துன்புறுத்தப்பட்டால்; அல்லது குண்டர்களால் தாக்கப்பட்டால் அல்லது அவர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டால் நாம் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்கமுடியாது
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

தினமும் நாம் கேட்கும் வெறுப்பூட்டுகின்ற அவதூறுப் பேச்சுக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். . இந்த அவதூறுப்பிரசாரத்துக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலோர் இவ்வாறான அவதூறு நடவடிக்கைகளை மன்னிக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர்கின்றோம். அவர்கள் மற்றவர்களின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்து சமாதானமாகவும் இன ஒற்றுமையுடனும் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகின்றார்கள்.

மிகமோசமான கொடூரச்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாம் இந்த நாடும் உலகமும் பொறுப்புக்கூறும் தன்மை நீதிஇ உண்மையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும் அநீதி இடம்பெறாது என்ற உத்தரவாதம் தரவேண்டும் என்று கோருகின்றோம்.

சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என்பதை நாம் அழுத்திக்கூற விரும்புகின்றோம். அண்மைக்கால சம்பவங்கள் அரசாங்கம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்பதை உணர்த்துகின்றன.

பாரபட்சமாக நடந்து கொள்வதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசமைப்புச்சட்டத்தின்படி உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:

Post by பானுஷபானா on Wed 10 Apr 2013 - 6:32

பகிர்வுக்கு நன்றி ~/
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum