சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

.

காட்டுக்கிறுக்கி..!

View previous topic View next topic Go down

Sticky காட்டுக்கிறுக்கி..!

Post by முfதாக் on Thu 9 May 2013 - 22:41

கதிரறுத்துப் போறவதான் கண்ணால தூறவதான்
புதிரறுத்துப் போனாளே ஒரு புன்னகைத்துப் போனாளே
மறுதலிக்க மாட்டாமல் மடமைவந்து கொல்லுதடி
உதறிவிட்டு என்னுடம்போ உளுத்துத்தான் கொட்டுதடி

துறுதுறுண்ணு போறவளே எனைத் துவட்டாமப் போறவளே
நறு நண்ணு பல்லு ரெண்டு நடமாடிக் கத்துதடி
அறுக்காணி மக-இவளோ எனை நொறுக்காமப் போறவளோ
கிறுக்காகி நானலைய எனப் பொறுக்காமப் போறவளோ
சுறுக்காத்தான் போறாளே சுடு சுடுன்னு போறாளே

தெருக்காத்து உம்மேல திட்டுத்திட்டா படுறப்போ
அடகாத்த ஐயனுக்கு அங்கங்கே வேர்க்குதடி
மடக்காத்து பட்டாக்கா மனமாற்றம் வருமேண்ணு
மனதால தூது விட்டேன் மாங்கொழுந்தால் ஏவி விட்டன்

ஆட்டுக்கூட்டமெல்லாம் ஓட்டமிடுமுன் பின்னால
காட்டுக் குருவிகூடக் கண்ணடிக்குமே தன்னால
ஏட்டுல காணவில்ல என்னிலம என்ன சொல்ல
மேட்டில பயிர் போல மெலிந்துதான் நான் செல்ல

வீட்டில யாருமில்ல விளக்கெரிக்க ஆளுமில்ல
கூட்டில பூட்டிப்போட்ட குருவி நிண்ணு கத்துதடி
தன்பாட்டுல போறவளே பதமாகப் போறவளே
நாட்டுல என்ன நடப்பதுவோ நானறிய வில்லையடி

அந்தி மசங்குதடி ஆளரவம் அடங்குதடி
தூரமாப் போகவேணும் துணையாக நான் வரவா
கேளாமப் போறவளே கீழ் வரகு ஆனவளே
வாழாம நானிருந்து வதங்குவது யாரறிவார்

ஆட காத்தொதுக்கும் அங்கமெல்லாம் பாத்தொதுக்கும்
வாடக் காத்தடிதச்சு வரண்டு கன்னம் சேத்தொதுக்கும்
ஆட நீயாட அதிலேதான் நானாட
ஓடி விழையாட ஒரு நாளு நீயாக
தேடி வருவாயோ திருட்டு முத்தம் தருவாயோ

மொண்டு குடிக்கும் தண்ணி மூச்சு முட்டி நிக்குதடி
காணாமப் போனாக்கா காதல் உள்ளம் துடிக்குமடி
வண்டு இரையுமிங்க வானமே கரையுமங்க
என்று வருவாயோ இடுப்பொடிக்கத் தருவாயோ

வெள்ளாம காத்தடிக்கும் வெளஞ்ச பயிர் கூத்தடிக்கும்
தள்ளாடி நானிருக்க தரகு முத்தம் தாருவதெப்போ
துள்ளாமப் போறவளே துவண்டுதான் போறவளே
கொல்லாமப் போறதென்ன எனை கொன்று விட்டுப் போயேண்டி

பாம்பு குறுக்கறுக்கும் பறவைகளும் நெடுக்கறுக்கும்
வீம்பு கொண்டு போறவளே விதண்டமாப் போறவளே
தேம்பி அழும் என்னத் திரும்பி மெல்லப் பாரேண்டி
தீராத நோயள்ளித் திமிராகப் போறவளே உருமாறிக்கத்துதிங்க உடல் கூடாக முத்துதிங்க

கருமாறிப்பிறந்தவளோ கதைமாறித் திரிந்தவளோ
விதிமாற்றும் வித்தையெல்லாம் விரல் நுணியில் கொண்டவளோ
உதிக்காத சூரியன உடம்பெல்லாம் கொண்டவளோ
குதிக்காத ஆரல் மீனு குளம் விட்டுக் குதிச்சதடி

உன்னிடையில கிள்ளவேணும் இடைக்கிடையே அள்ளவேணும்
தடைகொடுக்கும் தாவணிய தூரமாகத் தள்ளவேணும்
கடையில நான்காணா மெழுகுபொம்ம நீதானே
மடையில திரண்டு வந்த அழகு வெண்ண நீதானே

வெள்ளசேல விரகமாகும் என் விரல் பட்டு சரசமாகும்
கள்ளச்சி உன்வாயும் கைபடக் கருவாயி போலாகும்
மெள்ளச்சிரிச்சாலே என் மேனியெல்லாம் பாலாகும்
பொள்ளாச்சி சந்தையிலே புதுப்பொருளு போலாகும்

தள்ளாடி நானிருக்கன் தறுதலையாப் போயிருக்கன்
என் உள்ளாட நனைவதெல்லாம் ஊருக்குள்ள யாரறியார்
வெள்ளாடு மேச்சவளே விடலையாக் காச்சவளே
குள்ளாடு போலானேன் குழப்பத்தில் நாலானேன்

மாட்டுக் கூட்டமெல்லாம் உன் மணம் பிடிக்க மூக்கு நீட்டும்
மனிசக் கூட்டமெல்லாம் உனக் கணம் பிடிக்கக் கைய நீட்டும்
பணம் படைச்ச மனமிருக்கு பார்த்திவிடத் தெம்பிருக்கு
உனப்படைச்ச இறைவனிப்போ ஒருதலையா கத்துவாரோ

அத்தமக நீயுமில்ல ஆத்தோரப் பூவுமில்ல
சுத்தமக நீதானே சுடர் பூவும் நீதானே
எத்தனையோ பாத்த கண்ணு உன மட்டும் தானா எண்ணும்
சுத்தமாக நானுமில்ல சுயநினைவு காணவில்ல

வித்தகனும் நானுமில்ல விசும்பாத ஆளுமில்ல
மத்தக்கத மத்தியில ஒத்தக்கத ஒத்தையில
செத்தக்கத ஆயிடிச்சே சேட்டு வட்டி கூடிடிச்சே
செருக்காடு ஒண்ணு இங்க-உன்னால் கிறுக்காடு ஆனதடி
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by முfதாக் on Thu 9 May 2013 - 22:42

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by நண்பன் on Thu 9 May 2013 - 23:30

மிகவும் அருமையாக உள்ளது வைரமுத்துவின் கிராமத்துப்பாடல் ஒன்று கேட்ட பீலிங்க் அவ்வளவு அருமை வைரமுத்து அம்மாவுக்கு கவிதை எழுதிய அதே பாணியில் எழுதியுள்ளீர்கள் மிகவும் அருமை த்ரிஷ்டி பட்டாப்போல் ஒரு வரி என்னை வெறுக்கச்செய்து விட்டது மற்றும் படி அருமை அற்புதம் பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by rammalar on Fri 10 May 2013 - 1:02

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by முfதாக் on Sat 11 May 2013 - 19:57

:”@: :”@: :”@:
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by மீனு on Sat 11 May 2013 - 20:15

சாரி தாத்தா நான் face bookலயும் இந்த கவித படிச்ச கமன்ட் போடல சாரிபா கிராமத்து கவிதை மிக மிக பிரமாதம் :flower:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by முfதாக் on Sat 11 May 2013 - 20:24

அங்கே என்ன பெயரில் இருக்கிறீர்கள் ???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by பானுஷபானா on Sat 11 May 2013 - 20:28

அருமையான் கவி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16613
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by மீனு on Sat 11 May 2013 - 20:43

முfதாக் wrote:அங்கே என்ன பெயரில் இருக்கிறீர்கள் ???
meenuga
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: காட்டுக்கிறுக்கி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum