சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

.

பொண்ணு பிடிச்சிருக்கு!

View previous topic View next topic Go down

Sticky பொண்ணு பிடிச்சிருக்கு!

Post by Muthumohamed on Mon 13 May 2013 - 9:25

பெண் பார்க்கும் படலம். பெற்றோருடன் போயிருந்தான் மோகன்.

எல்லோருக்கும் காபி கொடுத்து விட்டுப் பெற்றோர் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள் ரேகா.

எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு...! மோகன் அப்பா அம்மா வாய் மலர்ந்தார்கள்.

அந்த நேரம், தாயை தனியே அழைத்துப் போனான் மோகன்.

அம்மா ஏன் அவசரப் படறே? ஊருக்குப் போய் போன்ல முடிவு சொல்றோம்ன்னு கழட்டி விட்டுட்டுக் கிளம்பு

ஏண்டா உனக்குப் பிடிக்கலியா? இவளுக்கென்னடா குறைச்சல்

அதெல்லாம் ஊர்ல பேசிக்கலாம்! முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்

கோமதிக்குக் கோபத்தில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீட்டுப் படியேறியதுமே, மகன் மோகனைப் பிலுபிலுன்னு பிடித்தாள் தாய் கோமதி!

ஏண்டா, உன் மனசுல என்னதான் இருக்கு? அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா? எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம்! அவளுக்கு என்ன குறை? பிடிக்கலேன்னு ஏன் சொல்றே?

புரியாம கேள்வி கேட்கறியேம்மா! ஒருநாள் பஸ் ஸ்டாண்டில யாரோ ஒரு பையன்கிட்ட காரசாரமா சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருந்தா. ஒருவேளை காதல் தோல்வியில அவனுக்கு சாபம் கொடுத்தாளோ என்னவோ...அவளே எனக்கு மனைவியா வந்தா நாளைக்கு எதாவது பிரச்சினை வந்திராது?

டேய்.. ஒரு பொண்ணை பார்த்ததுமே தப்பா கணிச்சிடக்கூடாதுடா...ரேகாவை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலடா..

நீ பார்த்த லட்சணம் அப்படி. அப்ப அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா?

என்னவோ போடா...முதன்முதலா பொண்ணு பார்க்கப்போன வீட்டுல பொண்ணோட தங்கையை பிடிச்சிருக்குன்னு சொன்னே... இரண்டாவது இடம் பார்த்தப்போ பெண்ணை விட அவகூட இருந்த தோழி தான் அழகா, அம்சமா இருக்கா. அதனால அவ தான் வேணும்ன்னே! இப்போ மூணாவது இடம் ரேகா! காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும்! அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும்! என்ன சொல்றே?

உம் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கினான் மோகன்.

பெண் வீடு.

காபி கொடுக்கும் போது, இது தான் பெண்ணு.பேர் திகா. நல்லா பார்த்துக்க, மோகன் என்றாள் தாய் கோமதி.

பார்த்தான். பதில் சொல்வதற்குள் திடீரென்று ராதிகா, நான் இவரோடு கொஞ்சம் பேசணும் என்றாள்.

அடுத்த நிமிடத்தில் பக்கத்து அறைக்குள் ராதிகாவும் மோகனும்.

இதுக்கு முன்னால நீங்க பொண்ணு பார்த்த என் காலேஜ்மேட் ரேகா என்னை விட அழகு! அவளைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களாமே, ஏன்?

விடுங்களேன். அதான் முடிஞ்சு போச்சே...அப்புறம் என்ன?

மொட்டையாய் சொல்லி தப்பிக்கப் பார்த்தான்.

ஆனால் அவள் விடவில்லை. ரேகா மாதிரி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைக்கணுங்க. என்கிட்ட

ஒரு பையன் விடாம லவ் புரபோஸ் பண்ணினான். பதிலுக்கு நான் லவ் சொல்றவரைக்கும் அவன் விடலை. அப்புறமா ஒருநாள் சினிமா தியேட்டருக்கு கூப்பிட்டான். தியேட்டர் இருட்டுல அவனோட திடீர் சில்மிஷம் என்னை வெறுப்பேத்த, போடா இன்டீசன்ட்பெல்லோன்னு திட்டிட்டு அதோட அவனை கட் பண்ணிட்டேன். தற்செயலா இந்த விஷயம் ரேகாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் பஸ்டாண்ட்ல அவனை பார்த்ததும் டென்ஷனாகி, ஏண்டா பொறுக்கி... பொது இடத்துல லவ்வர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத உனக்கெல்லாம் எதுக்கடா லவ்வு? ன்னு கேட்டு கிழிகிழின்னு அவ கிழிச்சதுல ஓடிப்போனவன் தான். இன்னும் கூட அவன் எங்க கண்ணுல மாட்டலை. பிரண்ட்ஸ் எங்களுக்கு ஒண்ணுன்னா அப்படி ஓடிவர்ற நல்ல டைப்புங்க அவ...

ராதிகா சொல்லிக் கொண்டே போக, மோகனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

அ.சி.மணியன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிச்சிருக்கு!

Post by நண்பன் on Mon 13 May 2013 - 13:38

அடடா மிகவும் அருமையாக இருந்தது ஆனால் முடிவு என்னவென்று சொல்லாமல் போய் விட்டீர்கள் முஹம்மட் :/ :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிச்சிருக்கு!

Post by rammalar on Mon 13 May 2013 - 14:14

முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே
விடப்படுகிறது...!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13201
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிச்சிருக்கு!

Post by veel on Mon 13 May 2013 - 15:48

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிச்சிருக்கு!

Post by எந்திரன் on Mon 13 May 2013 - 18:44

rammalar wrote:முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே
விடப்படுகிறது...!!
-
@.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிச்சிருக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum