சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

மீன்பிடி தடைகாலம் முடிந்தது: மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டனர்

Go down

Sticky மீன்பிடி தடைகாலம் முடிந்தது: மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டனர்

Post by *சம்ஸ் on Thu 30 May 2013 - 6:40


சென்னை, மே.30-


வங்காளவிரிகுடா கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் விதிக்கப்படும் மீன்பிடி தடைகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததால், நேற்று நள்ளிரவு முதல் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க மீனவர்கள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிக்கு ஏப்ரல்-15 முதல் மே-29 வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் வரை உள்ள அரபிக்கடல் பகுதியிலுள்ள மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன்-15 முதல் ஜூலை-31-ந்தேதி வரை உள்ள 45 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்படுவது வழக்கம்.

பொதுவாக கிழக்கு கடற்கரையான வங்காளவிரிகுடா கடலோர பகுதிகளில் அக்னிநட்சத்திரம் என்ற கத்திரிவெயில் காலங்களில் தான் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இதனால் இந்த காலகட்டத்தில் ஆழ்கடலில் இயந்திரபடகுகளில் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் மீன்வலைகள், படகுகள், இயந்திரங்கள் பழுதுபார்த்து தயார்நிலைக்கு கொண்டுவந்தனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள வங்காளவிரிகுடா கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இந்த தடைகாலத்தில் கட்டுமரம், பைபர் படகுகளில் 20 கிலோ மீட்டர் கடல்பகுதியில் சென்று மட்டும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மாறாக விசைப்படகுகள், இழுவை கப்பல்களில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன்பிடி தடைகாலங்களில் மீன்சந்தைகளில் மீன்வரத்து குறைந்து விலையும் அதிகரித்து காணப்பட்டது. சென்னை போன்ற மாநகரங்களில் மீன்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.

இவர்களுக்கு தடை காலங்களில் அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசைப்படகுகளில் கடலில் சென்று மீன் பிடிக்கின்றனர். தடைகாலம் நேற்று நிறைவடைந்ததால் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க மகிழ்ச்சியுடன் செல்ல தொடங்கினர்.

சென்னை காசிமேடு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்களும் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க சென்றனர். இதனால் இன்னும் சில நாட்களில் மீன் வரத்தும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க செல்பவர்கள் ஒரு வாரகாலம் வரை ஆகும் என்பதால் மீன் வரத்து அதிகரிப்பதும், விலை குறைவதும் ஒருவார காலம் வரை ஆகலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கடலில் மீன் பிடிக்க செல்வது குறித்து காசிமேடு மீனவர்கள் சிலர் கூறியதாவது:-

காசிமேடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. ஆனால் அதில் 25 சதவித படகுகள் மட்டுமே தற்போது கடலுக்குள் செல்கின்றன. போதுமான குடிநீர் மற்றும் ஐஸ்கட்டிகள் இல்லாததால் மற்ற படகுகள் இன்னும் சில நாட்கள் தாமதமாக கடலுக்குள் செல்ல உள்ளன.

விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 2 நாட்கள் பயணம் மற்றும் ஒரு வார கால பயணம் என 2 விதமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்வோம். ஆனால் மீன்பிடி தடை காலம் முடிந்து செல்வதால் கடலில் பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்பதால் 2 நாட்கள் செல்பவர்கள் ஒரே நாளிலும், ஒரு வாரம் செல்பவர்கள் 5 நாட்களிலும் திரும்பி விடுவோம்.

மேலும் நாங்கள் கடலுக்குள் சென்று வர வானிலையும் எங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். நிறைய மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் கடலுக்குள் செல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மீன்பிடி தடைகாலம் முடிந்தது: மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டனர்

Post by Muthumohamed on Thu 30 May 2013 - 20:05

தகவலுக்கு நன்றி

அப்ப இனிமேல் மீன்களின் விலை குறையும் #+ #+ #+ :. :. :.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மீன்பிடி தடைகாலம் முடிந்தது: மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டனர்

Post by பானுஷபானா on Thu 30 May 2013 - 20:28

:# :#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மீன்பிடி தடைகாலம் முடிந்தது: மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum