சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Go down

Sticky டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by *சம்ஸ் on Thu 22 Aug 2013 - 8:22


புதுடெல்லி, ஆக. 22–
டெல்லியில் வெங்காயம் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்தது. விலையை கட்டுப்படுத்த வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.25க்கு விற்ற வெங்காயம் கடந்த வாரம் திடீர் என்று ரூ.50 ஆக உயர்ந்தது.
உணவில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை திடீரென்று உயர்ந்ததால் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் வெங்காயம் விலை உயர்வு மற்ற மாநிலங்களிலும் எதிரொலித்தது. மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் விலை உயர்ந்தது. டெல்லியில் விலை உயர்வை தடுக்க மாநில அரசு சார்பில் கூட்டுறவு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
வெளி மார்க்கெட்டை விட அங்கு ரூ.20 வரை விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. என்றாலும் வெங்காயம் தட்டுப்பாடு நிலவுவதால் விலை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
இதற்கிடையே வெங்காய விலை உயர்வை பாரதீய ஜனதா கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாரதீய ஜனதா சார்பில் வெங்காயம் விற்பனை கடையும் திறக்கப்பட்டுள்ளது.
அதில் போட்டி போட்டு விலை குறைத்து கிலோ ரூ.25–க்கு விற்பனை செய்தது. போராட்டத்துக்காகவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் மட்டுமே இந்த கடை திறக்கப்பட்டது.
வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அது பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் வெங்காயம் விலை மேலும் உயர்ந்துள்ளது. சில்லரை விலையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனையாகிறது.
அதே சமயம் இந்தியாவில் வெங்காயம் அதிகம் விளையும் மாநிலமான மராட்டியத்தில் மொத்த விற்பனை விலை கிலோ ரூ.41.25 ஆக உள்ளது.
விலையை கட்டப்படுத்த சீனா, பாகிஸ்தான், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. வெங்காயம் இறக்குமதியாகும் பட்சத்தில் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
வெங்காயம் இறக்குமதி செய்ய சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுடன் சேர்த்து கட்டுபடியாகும் விலைக்கு டெண்டர் கோரப்படுகிறது.
இந்த ஆண்டு மராட்டியத்தில் கடும் வறட்சி நிலவியதால் வெங்காயம் உற்பத்தி குறைந்தது. இதே போல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும் வட மாநிலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by பானுஷபானா on Fri 23 Aug 2013 - 11:48

இங்க இப்போ 40 ரூபாய்க்கு விக்குது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16696
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by kalainilaa on Fri 23 Aug 2013 - 13:46

குடந்தையில் கிலோ 60 சின்ன வெங்காயம் கிலோ 50
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by பானுஷபானா on Fri 23 Aug 2013 - 14:19

சின்ன வெங்காயம் விலை கம்மியா இருக்கு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16696
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by kalainilaa on Fri 23 Aug 2013 - 17:19

#) #) #) 
பானுகமால் wrote:சின்ன வெங்காயம் விலை கம்மியா இருக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by Muthumohamed on Fri 23 Aug 2013 - 20:19

பானுகமால் wrote:சின்ன வெங்காயம் விலை கம்மியா இருக்கு
அதுவும் விலை கூடனுமா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum