சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

ரோல்மாடலாக இருந்து ஆசிரியர்கள் மாணவர்களை கவர வேண்டும்

View previous topic View next topic Go down

Sticky ரோல்மாடலாக இருந்து ஆசிரியர்கள் மாணவர்களை கவர வேண்டும்

Post by ராகவா on Fri 20 Sep 2013 - 18:01

முதல் பீரியடு பிளேடுடா தூக்கம் வரும்… ‘கட்’ அடிச்சுருவோமா…? என்று வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள். அவரு அடி பின்னிடுவாரு… பாடம் புரியாட்டும் பரவாயில்லை. தலையை ஆட்டி கிட்டாவது வகுப்பில் உட்காரு வோம்டா… என்று பயந்தே வகுப்பறையில் நேரத்தை போக்கும் மாணவர்கள்… படிக்கும் போது பாடம் புரிகிறதோ? இல்லையோ? ஒவ்வொரு ஆசிரியர்களின் நடை, உடை, பாவனைகளை வைத்து ஒவ்வொரு பட்டப் பெயர்கள் சூட்டுவதில் மாணவர்கள் கில்லாடிகள். சில சமயங்களில் தங்கள் பட்டப் பெயர்களை கேட்டு ஆசிரியர்களே அதிர்ந்து போவார்கள்.
கோடிகளுக்கு அதிபதியானாலும் தெருக்கோடியில் வயது முதிர்ந்து தள்ளாடி நடந்து வரும் ஆசிரியரை கண்டால் ஓடி சென்று ‘சார், வணக்கம்’. நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும் முன்னாள் மாணவனை பார்த்ததும் அந்த ஆசிரியரின் பொக்கை வாய் சிரிப்பில் ஆயிரம் மத்தாப்புகளை பார்க்கலாமே. ஆயிரம் ஆஸ்கார் விருதை விட உயர்ந்த விருதாக கருதி அந்த ஆசிரியரின் கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்குமே! இப்படிப்பட்ட காட்சிகள் இன்று மெல்ல மெல்ல மறைந்து வருகிறதே ஏன்?
ஆசிரியர்கள் மாணவர்கள் மனதிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் மனதிலும் இடம் பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம்? மாணவர்களை ஆசிரியர்கள் கவருவது எப்படி? சுவாராஸ்யமாக விளக்கினார் பெரியமேடு உதவி கல்வி அதிகாரி சாந்தி.
லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதியதில் சில ஆயிரம் பேர்தான் வெற்றி பெற்றார்கள். எனவே இவர்கள் திறமைசாலிகள் என்பதற்கு இதைவிட அத்தாட்சி தேவையில்லை. ஆனால் படிப்பில் மட்டும் திறமை இருந்தால் போதாது! சகலகலா வித்தகர்களாக திகழ வேண்டும். அப்படியானால்தான் மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களை தன் வசப்படுத்த முடியும் என்றார் சாந்தி.
வேலை கிடைச்சாச்சு. இனி மாதம் தோறும் அரசாங்க சம்பளம்… என்ற எண்ணத்துக்கு அப்பாற்பட்டு புதிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எப்படி பணி செய்ய வேண்டும் என்று விளக்கினார். நூறு சதவீத சந்தோசத்துடன் வேலையில் ஈடுபட வேண்டும். வீட்டுக்கு வீடு வாசல்படி மாதிரி ஒவ்வொருவருக்கும் வீட்டு பிரச்சினைகள் ஏதாவது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சினைகளை பள்ளிக்கு வரும்போது வெளியே விட்டுவிட வேண்டும்.
பள்ளிக்குள் செல்லும் போது சிரித்த முகத்தோடு, அழகாக ஆடை அணிந்து செல்ல வேண்டும். உங்கள் நடை உடை, பாவனைகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும். நீங்கள்தான் அவர்களுக்கு ரோல் மாடல். பள்ளிக்கு சென்றதும் செல்போனை தூங்க வைத்து விடுங்கள். மாணவர்கள் தூங்காமல் பாடம் படிக்கும் படி உற்சாகமாக பாடம் நடத்த வேண்டும்.
வகுப்பறைக்குள் சென்றதும் அன்றைய நாட்டு நடப்புகளை பற்றி சிறிது நேரம் மாணவர்களோடு கலந்துரையாடுங்கள். அதன் பிறகு பாடம் நடத்துங்கள். வெறும் புத்தகம் மட்டும் மாணவர்களை உருவாக்காது. நல்ல கருத்துக்கள், பழக்க வழக்கங்களை சொல்லி கொடுங்கள். ஒவ்வொரு மாணவர்களையும் துல்லியமாக கவனித்து அவர்களது நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துங்கள். உங்களோடு அவர்கள் ஒன்றி விடுவார்கள்.
நான் பள்ளியில் ஸ்கேலால் கை விரலில் வாங்கிய அடியால் தமிழ் எழுத்துக்களை முத்து முத்தாக எழுத கற்று கொண்டேன். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். அனுபவமே பாடம். அதை வைத்து ஒவ்வொரு மாணவரையும் அற்புதமானவர்களாக உருவாக்குங்கள் என்றார். அதிகாரி சாந்தியின் அனுபவம் மிகுந்த ஆழமான, யதார்த்தமான கருத்துகள் கேட்டவர்கள் அத்தனை பேரையும் நிச்சயமாக சிந்திக்க வைத்திருக்கும்.
நடைமுறையில் இதை கடைபிடித்தால்… வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை… போதையில் வகுப்புக்கு வந்த மாணவன்… பள்ளிக்கு செல்லாமல் திரையரங்குகள், மால்களுக்கு சென்று தடம்மாறும் மாணவர்கள் என்ற வேதனையான நிகழ்வுகள் அரங்கேறாது என்று உறுதியாக சொல்லலாம்.
நன்றி: மாலைமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum