சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

அழிந்த மதுரையும் அழியாத தெருக்களும்!

Go down

Sticky அழிந்த மதுரையும் அழியாத தெருக்களும்!

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 8:02

மதுரை ஆங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறித்து பல்வேறு குழப்பான கருத்துக்கள் நிலவுகின்றன.

1764-லிலேயே ஆங்கிலேயர் வசம் மதுரை போனது. அப்போது முதல் மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் ப்ரக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார் என்ற குறிப்பும் உள்ளது.

1801-இல்தான் ஆங்கிலேயரின் முழுமையான ஆட்சிக்கு உட்பட்டதாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1866 இல் மதுரை நகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்கூட ஆங்கியேர்களே மாவட்ட ஆட்சியராக இருந்து வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர் 1834 முதல் 1847 வரை மதுரை ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்கன் என்பவர்.

13 ஆண்டுகள் மதுரை ஆட்சியராக இருந்த பிளாக்பர்ன் எடுத்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் மக்கள் அவரைப் புகழவும் செய்கின்றனர். பிளாக்பர்ன் பொறுப்புக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றி இருந்த வீதிகள், ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி மற்றும் மாசிவீதி என்ற நான்கு பிரதான வீதிகளில் கோயிலின் உள்ளே இருந்த ஆடிவீதி தவிர மற்ற மூன்று வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இதனை பிளாக் பர்ன் அகற்றியுள்ளார். மதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிள்ளையார் சுழியை போட்டவர் இவரே.

இதனைத் தொடர்ந்து பிளாக் பர்ன் மதுரையை விரிவு படுத்த பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவருக்கு மதுரையில் இருந்த கோட்டைகளும், அகழிகளும் தடையாய் இருந்தன. மதுரையை சீரமைக்கவேண்டும் எனில் அகழிகளை அழிப்பதை தவிர வேறு வழியில்லை என நினைத்தார் ஆட்சியர். ஒவ்வொரு அகழிகளின் நீளம் 5670 அடியாக இருந்துள்ளது. அகழிகளை அகற்றுவதற்கு பெரும் மனித உழைப்பும், பணம் விரயமாகும் என எண்ணி அதற்காக ஒரு யுக்தியை கையாண்டார். அகழியை யார் சொந்த செலவில் மூடுகிறார்களோ அவர்கள் அந்த இடத்தை தனதாக்கி கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆர்வம் கொண்ட மக்கள் அகழிகளை மூடினார்கள். அகழிகளை மூடி இடத்தை வைத்துக் கொண்டார்கள்.

வெளிவீதி

கோட்டைச்சுவர்கள் இடிக்கப்பட்டு அகழி வீதிகள் உருவாக்கப்பட்டன. கோட்டைக்கு வெளியே உள்ள வீதி வெளிவீதி என்றும், மேற்கு பக்கம் இருந்த வீதி மேலவெளிவீதி என்றும், வடக்கு பக்கம் இருந்த வீதி வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி என உருவாகியது.

நினைவு சின்னங்களை அழித்த வழக்கு

பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேஸ்திரி வீதி

தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்ட்டன. மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி, வடக்குபெருமாள்மேஸ்திரி வீதி, கீழப்பெருமாள்மேஸ்திரி வீதி என உருவாக்கப்பட்டது.

விளக்குத் தூண்

பிளாக்பர்னின் மதுரை சீர்திருத்தத்திற்காக அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களை நிறுவினார்கள். ஒன்று கீழமாசிவீதி, தெற்குமாசிவீதி சந்திப்பில் உள்ள விளக்குத்தூண். இவ்விளக்குத்தூணில் பிளாக்பர்ன் விளக்குத்தூண் என்றும் "பை எ கிரேட்புல் பீப்பிள்"என்று ஆங்கிலத்தில், அதாவது "நன்றியுள்ள மக்களால் நிறுவப்பட்ட தூண்" என்ற குறிப்பு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சிதைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் மேடாகி மறைந்து உள்ளதாக கூறுகிறார்கள்.

வரலாற்று சின்னங்களை அழித்தவருக்கு பாராட்டு

1847 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று சென்றபோது இங்கிலாந்தில் நடந்த பாராட்டு விழாவில் எபிசியண்ட் கலெக்டர் என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. வரலாற்று தவற்றுக்கு வால்பிடித்தவர்களை காலமும் வரலாறும் மன்னிக்கவே மன்னிக்காது என்பதை வரலாறுகள் மீண்டும் மீண்டும் போதித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தான் காதுகொடுத்து கேட்பதில்லை.

ஆதார நூல்கள்:

1.தமிழ்வாசல்,எம்.வீ.அடைக்கல்ராஜ்-மதுரை
2.தடயம், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி

தொகுப்பு: வைகை அனிஷ், செல்:9715-795795
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum